Friday 4 November 2016

மூளையை கழுவுங்கள் ...!


பதிவுக்கு விமர்சனம் வந்தால்
அதற்க்கான நியாயமான பதிலை
சொல்லவேண்டும். அதை சொல்ல
வரும்போது அதை கேள்வி கேட்டவர்
பொறுமையாக காதுக்கொடுக்கவும் ,
( பொறுமையாக படிப்பது ) தெரியணும் .

இதற்கு அறிவாளி ,முண்டம்
என்பதெல்லாம் ஒன்றுமில்லை .
பதிவு போடுபவரைவிட படிப்பவர்கள்
புத்திசாலிகளாக இருக்கிறார்கள்
என்பதை பதிவிடும் எவரும்
நினைக்கவேண்டும்.

குறிப்பாக பெண்கள் பக்கங்களில்தான்
இப்படிப்பட்ட விமர்சனங்கள் வருகிறது .
இவைகள் உண்மையில்லை என்று
சொல்வதற்கில்லை . 99% உண்மைதான் .
கீழ்த்தரமான பதிவுகள் ,பதில்கள் வரும்போது
அதை தடை செய்ய முயலாமல் பதிலுக்கு
அதைவிட கேவலமாக பேசுவதும்,
எழுதுவதும் கேடுகெட்டத்தனம் .

அதுமட்டுமல்லாமல் நீ யாருன்னு சொல்லு,
இல்லேன்னா இன்பாக்சில் நீ எழுதிய
அத்தனையும் வெளியிடுவேன்னு மிரட்டுவது ...?
இதை ஆணும் பெண்ணும் இருவருமே
செய்கிறார்கள் .

சென்ராயன்,டுபுக்கு ,காலாக்கிறாங்க ,
அலப்பறை , என்ன டிஸைன்னோ ,
கழுவி,கழுவி ஊத்துவது ...?
இதெல்லாம் என்ன மொழி, என்ன
அர்த்தம்...?

குறிப்பாக ....கழுவி,கழுவி ஊத்துவது ...?
இந்த வார்த்தையை சகிக்க முடியவில்லை .
எண்ணத்தை கழுவி ஊத்துவது ...?
யார்... யார் மீது கழுவி ஊத்துவது ...?
எதை கழுவி ஊத்துவது ...?
எங்கே கழுவி ஊத்துவது ...?
இவற்றையெல்லாம் எழுதுவோருக்கு
ஒரு வார்த்தை சொல்ல விரும்புகிறேன் .

உங்கள் உடலை கழுவுகிறீரோ இல்லையோ ...?
உங்கள் மூளையை கழுவி நாக்கை வழித்து
பேனாவை சுத்தப்படுத்தி எழுதுங்கள் .
உங்கள் எழுத்து உலகம் முழுவதும்
நாறிக்கிடக்கிறது .



No comments:

Post a Comment