Friday 21 April 2017

ஆணாதிக்க சமூகம் என்பது.....?y


ஒரு ஆண் தப்பு செய்வது
பற்றியோ, ஒரு பெண் தப்பு
செய்வது பற்றியோ, இங்கு
பேசப்படவில்லை.

ஆண்டாண்டு காலமாக
எந்த சமூகம் அடக்கப்பட்டு,
ஒடுக்கபட்டு, இருக்கிறது
என்பதே இங்கு விவாதப் பொருள்.

ஆண் சமூகம்தான் பெண்
சமூகத்தை அடக்கி,ஒடுக்கி
வைத்து இருக்கிறது. அதை
தொடர்ந்து கடைபிடிக்க அவளது உடல் மீது புனிதத்தை புகுத்தி ஆதிக்கத்தின் நுகத்தடியில்
பிணைத்து இருக்கிறது.

பெண் சமூகம்
எந்த விதத்திலும் உடைத்து கொண்டுதன்னைவிடுவிக்க இயலாத வகையில்
ஆனாதிக்கம் சமூகம்,
பெண் உடல் மீதும்,
அவள் சிந்தனை மீதும்
கட்டுவரம்புகளை எழுப்பி
சிறையிட்டு வைத்து
இருக்கிறது.

அதை நியாயப்படுத்த கடவுள்
மதம்,சாதி, சம்பிரதாய
சடங்குகளை நிறுவி
ஆணாதிக்க சமூகமாக
கட்டமைத்து இருக்கிறது.

அதையும் மீறி விடாமல்
இருக்கவே புனிதம்
யோனியில் இருக்கிறது
என்று பாடம் நடத்தும்
ஆணாதிக்க சமூகம்,
அந்த புனிதத்தை
அவர்களே
வன்புணர்ச்சியால்
மீறுவதும்,அதை பாதுகாக்க கடமைப்பட்டவர்கள்
பெண்களே என்றும் ,
 அதை காக்க
பெண்கள்தவறியதாகவும்
குற்றம் சுமத்துவதும்
ஆண்டாண்டு கால
ஐயோக்கியத்தனம்.

இதை தெரிந்து கொள்ள,
புரிந்து கொள்ள, இன்றைய
சமூக அமைபில் இருந்து
கொண்டு தெரிந்து கொள்ள
இயலாது.

மனிதன் தோன்றிய வரலாறு,
சமுதாயம் மாறிய வரலாறு,
போன்றவற்றை படிக்க வேண்டும்.

அதை விட்டு ...
இதிகாசங்களையும்,
புராணங்களையும் மேற்கோள்
காட்டுவதும், பேசுவது
சிறுப்பிள்ளைத்தனமானது

Saturday 15 April 2017

1...அம்பேத்கர் ...!

அம்பேத்கர் ....!
ஒரு தலைவரா...?
----------------------------
ஆமாம் என்றோ
இல்லை என்றோ
ஒரு வார்த்தியில்
சொல்லிவிட்டு சென்று விட
முடியாது..

அப்படி செல்ல ஒருவரால்
முடிகிறது என்றால்...?
அந்த இருவருமே வெவ்வேறு
வெவ்வேறு திசைகளில்
பயணிப்பவர்கள்.

அப்படித்தான் நானும் ,
 கடந்த காலத்தில்
இடதுசாரிகளும் கடந்து
போனார்கள் என்பதையே
என்னால் அறுதியிட்டு
சொல்ல முடியும்.

எவரும் துணிந்து தலித் மக்களுக்காக நிற்காத போது....
இடதுசாரிகள்
நாடுமுழுவதிலும் ஒடுக்கப்பட்ட ,
தாழ்த்தப்பட்ட மக்கள் மீது
சமூக ரீதியாகவும் ,
பொருளாதார ரீதியாகவும்
தொடுக்கப்பட்ட தாக்குதலை
தடுத்து நிறுத்த போராடினார்.
ஆனால் அம்பேத்கர் என்ற
தத்துவத்தை நிராகரிதார்கள்.

அம்பேத்கர் என்பது பெயரல்ல
அது ஒரு தத்துவம் என்பது
படித்தும் அதை சமூகத்தோடு
பொருத்தி பார்த்தும் அனுபவத்தோடு அதை தாமும்
அமலாக்க வேண்டும் என்று
உணரும் போது மட்டுமே
அந்த விஞ்ஞானத்தோடு
கைகோர்க்க முடியும்.

இந்த அடிப்படையான புரிதலில்
பொது உடமைவாதிகளுக்கு மாற்றம் வரவில்லை.
இந்த அடிப்படையான கல்வியை
மூத்த தலைமுறைக்கு பயிற்றுவிப்பதோடு,
இளம் தலைமுறைக்கு
பாடமாக்கவேண்டும்.
அதை செய்யாமல்
லால் சலாமும் ,ஜெய் பீம்மும்
இணைய வேண்டும் என்று
எழுதுவதும் ,பேசுவதும் ,
விழலுக்கு நீர் வார்ப்பதற்கு
ஒப்பாகும்.
....................


Tuesday 11 April 2017

காதல் "அதை தொடுங்கள்...ம்



காதல் என்றாலே
எது காதல் என்று கூட
இன்றைய தலைமுறைக்கு
தெரியவில்லை.

ஏனென்றால் காதலின்
தன்மை மாறி வருகிறது.
தொழிற்நுட்ப விஞ்ஞானபுரட்சியில் காதலின்வீச்சு வேறு ஒரு தளத்துக்கு கொண்டு போகிறது.

கடந்த கால காதலின் பங்களிப்பு
சமூக மாற்றத்திற்கு எப்படி
உதவியது என்பது கூட
தெரியாது.

ஆகவே...
காதல் அது தொடாத இயக்கம்
எதுவும் இருக்க முடியாது.
அதில் இடதுசாரி இயக்கம்
விதிவிலக்கல்ல..

திராவிட இயக்கத்தில்
தொட்டு வந்த காதலுக்கும் ,
கம்யூனிஸ்ட்களை தொட்ட
காதலுக்கும் வித்தியாசம்
உண்டு.அதை இன்றைய
தலைமுறைக்கு தெளிவுபப்படுத்த
வேண்டிய அவசர அவசிய தேவை
இருக்கிறது.

அதோடு....
கவுரவம் கொலைகளை
தடுத்து நிறுத்த வேண்டும்
என்பதில் இடதுசாரிகள்தான்
முதலிடத்தில் இருக்கிறார்கள்.
அதை எவரும் மறுப்பதற்கில்லை.

திராவிட அமைப்புகள்
அதை எதிப்பதில் ,கண்டிப்பதில்
நாசுக்காக அணுகி
வருகிறார்கள். 

ஏனெனில்
சாதிய கட்டுமானத்தை உடைக்கும்
காதலை பற்றியும், காதல் திருமணங்களை
பற்றியும் அந்த இயக்கத்தில் உள்ள
பலரிடம் இன்னும் அகலாத சாதிய
பிடிமானமே காரணம்.

காதல் திருமணங்களை
ஆரிப்பது என்ற நிலையில்
இடதுசாரிகளின் நிலைபாட்டில்
குறிப்பாக தலித்துக்களின் காதலை
அங்கீகரிக்கப்பதும்,அதை பாதுகாக்க
போராடுவதையும் கொள்கை
நிலையில் நின்று "காதல் சாதி, மதம் கடந்து அனைத்து உயிர்க்கு பொதுவானது "
என்றே பார்க்கிறார்கள்

ஆனால்...
சாதிய-மதவாத சக்தியோடு
( பெண் பிள்ளைகளை பெற்ற )
வெகு மக்களும் எதிர்க்கிறார்கள்
என்ற ஆழமான கருத்து இருக்கிறது.

அதனால்தான் இடதுசாரி
இயக்கங்கள் வளரவில்லை
என்ற விமர்சனம் வெளியில்
மட்டுமல்ல ..உள்ளேயும் மிச்ச
சொச்சமாய் இருக்கிறது. என்பது
விவாதிக்கப்பட வேண்டியதே.

ஆகவே
மேற்கண்ட பொருள்களின்
மீது காதல் என்ற தலைப்பில்
அடைப்பட்டு கிடக்கிறது.

ஆகவே...
"காதல் "அதை தொடுங்கள்...
பேசுங்கள்...எழுதுங்கள்...
விவாதியுங்கள்..