Monday 9 June 2014

திருநங்கை .....!

நேற்றைய இரவு விஜய் டீவியில் ஒளிபரப்பான ...." நீயா .. நானா ? " நிகழ்ச்சியில் திருநங்கைகள் பற்றிய விவாதம் நடைபெற்றது .
அதில் பங்கேற்ற திருநங்கைகளின் உள்ளத்திலிருந்து வெளிவந்தவைகள் வார்த்தைகள் அல்ல ...! வலிகள்
                          ஏராளமான குப்பைகளை கிளரும் நீயா நானா நிகழ்ச்சி மூன்றாம் பாலினத்தின் பரிணாமத்தை பொதுவான மக்கள் புரிந்துகொள்ளும் வகையில் விவாதம் அமைந்தது .
இந்த மானுடம் தோன்றியதிலிருந்து ஆண் - பெண் - திருநங்கைகள் என மூன்று பிரிவினர் உருவாகினர் என்பதும் அவர்களில் திருநங்கை மட்டுமே எல்லாமட்டங்களிலும் சமூகத்தால் புறக்கணிக்கப்பட்டகள் என்பதையும் , அவர்களும் இந்த சமூகத்தில் ஒரு அங்கம் என்பதை தெளிவு படுத்தியது .
தொடர்ந்து அவமானபடுத்தபட்ட அந்த சமூகத்திற்கு சாதி -மத பேதம் இல்லையென்பதும் , அவர்களுக்கு மனது மட்டுமல்ல ...வாழ்வுரிமையும்
இருக்கிறது என்பதையும் இந்த சமூகம் புரிந்துகொள்ள வேண்டும் . அந்த விவாதத்தில் பங்கேற்ற திருநங்கைகள் பிரியா பாபு , சுதா ,கோமதி
போன்றவர்களின் விவாதமும் விளக்கமும் இந்த சமூகத்தின் கோர முகத்தை சுக்குநூறாய் கிழித்துபோட்டது
                             இன்றைய ஆணாதிக்க சமூகத்தின் அத்துமீறல் பெண்கள் மீது மட்டுமல்ல ...அரவாணிகள் உடல் மீதும் காலங்காலமாய் தாக்கப்பட்டு
வருகிறது என்பதை படம் பிடித்துகாட்டியது .
பெண் - திருநங்கை உடல் மீது அத்து மீறும் ஆணாதிக்கதாக்குதலை அம்பலபடுத்தியது மட்டுமல்ல ...
                        ஆண் உறுப்பை அறுத்தெறியும்போது ஏற்படும் வலியைவிடவும் ,அவர்களை அவமானப்படுத்த்தி பாலியல் தொழிலாளி என்ற கீழ்த்தரமான
பார்வையை எதிர்கொள்ளும் வலியின் உச்சத்தை புரிந்துகொள்ள முடிந்தது ,                                         நிச்சயம் இந்த நிகழ்ச்சுக்கு பின் அவர்களை புரிந்துகொள்ள
இந்த சமூகத்திற்கு ஒரு வாய்ப்பு கிடைத்து இருக்கறது .
                    இந்தியாவில் தற்போது சுமார் 4 லட்ச்சத்து 90 ஆயிரம் திருநங்கைகள் இருகிறார்கள் என்ற செய்தி பேரிடியாக இருந்தாலும்
அவர்களும் இந்த நாட்டின் பிரஜை அவர்களுக்கான வாழ் உரிமையையும் உத்தரவாதப்படுத்திட் வேண்டும் என்கின்ற தெளிவை
உணர்த்தியது .