Wednesday 25 January 2017

2017- போராட்டத்தின் குறியீடு...!


எதையும் இழக்காமல்
எதையும் பெறமுடியாது.
ஆனால் ...
மாணவர்களும் -இளைஞர்களும்
இழந்ததுதான் அதிகம்.

அதிகார வர்க்கம் அப்பட்டமாக
அவமானப்பட்டு போனதால்
அதற்கு ஈடாக காவல் நிலைய
தீவைப்பை காரணம் காட்டி
காட்டுமிராண்டி த்தனத்தின்
உச்சகட்ட அரங்கேற்றத்தை
நடத்தி இருக்கிறது.

மாணவர்களுக்கு கிடைத்த பெற்றி
காலத்தால் அழியாமல்
வரலாற்றின் பக்கத்தில் பொறிக்கப்பட்டு விட்டது.
அதற்கு அரசு கொடுத்த வலியும்
மாறாத வடுக்களாகி விட்டது.

இந்த வலிக்கான பிரதிபலிப்பாக
இனி வரும் காலங்களில்
அதிகாரத்தையும் போட்டி இட்டு கைப்பற்றலாம். அதை காலம்
தீர்மானிக்கும்.

இந்த போராட்டத்தின் வீச்சு
உலகலாவிய தமிழர்களுக்கும்
இந்திய தமிழனுக்கும் இணைப்பு
பாலத்தை போராட்டத்தின் மூலம்
இணைத்து இருக்கிறது.

குட்டித்தீவில்...
ஆயுதம் போராட்டம் நடத்திய
தமிழனின் தோல்வியை
அறப்போராட்டத்தின் மூலம்
மீண்டும் தமிழன் என்ற அடையாளம் நிறுவப்பட்டு இருக்கிறது என்பதே
போராட்டத்தின் குறியீடு.

எனக்கு பிடிக்காத சொல் தோழர்...!



"சும்மா வாங்க...!
சென்னைக்கு போய் வரல்லாம்."
செலவு கூட நான் பாத்துகிகிறேன்..!என்று என்னை டெய்லர் ஒருத்தர் கூப்பிட்டார்.

என்னங்க..
என்னை மட்டும் கூப்பிட்டீங்க...
இப்போ பஸ் நிறைய ஜெனங்க....
எல்லோரும் தோழர்...தோழர்...ன்னு
கூப்பிடறாங்க...எனக்கு பிடிக்கலங்க...!
என்றேன்.

அட விடுங்க...!
அவங்க எதாவது கூப்பிட்டு
போறாங்க...என்று சாதாரணமாக
சொன்னார்  டெய்லர்.

போகும் போது வண்டலூர் ஜூ....
சிங்கம்...புலி...பாம்பு...கிளி...
குரங்கு ...
கால் இடறி கீழே வீழ்ந்த என்னை
கை பிடித்து தூக்கிய எழுபது
வயது கிழவன் சொன்னான்.

என்ன தோழர் பாத்து வரக்கூடாதா..?
பதில் பேச முடியவில்லை ...என்னால்..!

சென்னையை நெருங்கியது பஸ்..

தண்டயார் பேட்டை...!
பார்க்கும் இடமெல்லாம் சிகப்பு...

தோழர்....தோழர்....தோழர்.....
பிடிக்காத வார்த்தை....!

எங்கும் எல்லோரும்... தோழர்..என்ற
வார்த்தை ..ஆண்  - பெண் - குழந்தை
குட்டி....எல்லோரும். தோழர் என்றே
கூப்பிட்டார்கள்.

ஒரே குழப்பம்...
"தோழர் "என்ற சொல் ஆணா...?
பெண்ணா...? கேட்க வேண்டும்.

"தோழர்" என்ற சொல் ஆணா...?
பெண்ணா...? சொல்லுங்க தோழர்
என்றேன்.

பிறகு பேசுவோம்..தோழர்..என்றார்.
டெய்லர் செல்வராஜ்.






Saturday 21 January 2017

தடுமாறி நிற்கும் பாரதியின் சீடர்கள்...!




தங்களால் மட்டுமே ,
தங்களது அமைப்பின் மூலம் தான்
நாட்டில் மாற்றத்தை கொண்டுவர
முடியும் என்று மார்தட்டிய,முற்போக்கு
சிந்தனையாளர்களும்,

1917- ல் ஏற்பட்ட ரஷ்ய புரட்சியை
இங்கிருந்து பாடிய மகாகவி. பாரதியின்
சீடர்கள் நாங்கள் தான் என்று மேடைதோரும் முழங்கும் கொள்கை வாதிகளும்,

ஜல்லிக்கட்டு பாரம்ப்பரிய 
விளையாட்டை பாதுகாக்க 
போராடும் இளைஞர்களின்
போராட்டத்தை உதாசினமாக பார்ப்பதுவும், கேவலமாக பேசுவதும், எழுதுவது தொடர்கிறது.

பேசுவது மட்டும்
எல்லோருக்குமானதாகவும்,
எல்லோரும் போராடினால்,
தன் அமைப்பில் நின்று
பூனை பார்வையில் சுருண்டு
கிடக்கிறார்கள்.

வெளியே வாருங்கள்...
யார் போராடினாலும்,
அதை உள்வாங்கிகொள்ளுங்கள்.

காட்டாற்று வெள்ளம்
கரைபுரல்கிறது.
அணைபோடமுடியாது.
ஒதுங்கி நின்று பாருங்கள்.

பாரதியின் பார்வையில்
விசாலப்படுங்கள்.
கால்களின் தடுமாற்றம்
நின்று போகும்.




















Friday 20 January 2017

தோழர். பாலனுக்கு ....


தோழர். பாலனுக்கு மனம் திறந்த மடல்...
----------------------------------------------------------------
தோழர்.பாலபாரதியை ஜல்லிக்கட்டு
எதிர்ப்பாளர்கள் பேச விடவில்லை
என்ற காரணத்தால் தங்களின் கண்டன
பதிவை படித்தேன்.

நீங்கள் கேட்பதில்
நூறு சதவீதம் நியாயம் இருக்கலாம்...!
தோழர். பாலன் போன்றோர் ஆத்திரத்தில்
எதை வேண்டுமானாலும்
பேசுவது முறையன்று...!

அதும் ஒரு எழுத்தாளர்.
மேடை பேச்சாளர். அவர்
வாயிலிருந்து " என்னத்த போராடி
என்னத்த கிழீக்கப்போரீங்க...?
என்று கேட்பது....அனுபவம் இல்லை
என்று எடுத்துக் கொள்வதா....?
அவர்கள் போராட்டத்தை பற்றிய
பார்வை இல்லை என்று எடுத்து கொள்வதா...?   என்று புரியவில்லை.

அரசியல் வேண்டாம் என்பதே
ஒரு அரசியல் என்பது தோழர்
பாலனுக்கு புரியாமல் போனது
என்ன...?

அவர்களின் பின் புலத்தில்
யார் ...யார்...இருக்கிறார்கள்
என்ற கேள்வி மேல் கேள்வி
கேட்கும் புத்திஜீவிகள் ஒன்றை
புரிந்து கொள்ள வேண்டும்.

மோடியின் அரசியலை
டாரு டாராக கிழிக்கிறார்கள்.
கார்பிரெட் நிறுவனங்களின்
ஆதிக்கத்தை எதிர்க்கிறார்கள்.
அதிமுகவின் இரட்டை வேடத்தை
அம்பலப்படுத்துகிறார்கள்.
இன்றைய இளைஞர்களுக்கு
அரசியலற்ற தன்மை இருக்கிறது
என்பதை அடித்து நொருக்கி இருக்கிறார்கள்.
இது மட்டுமே இப்போதைக்கு போதுமானது.
இது நீடிக்குமா...?
தொடருமா...? தெரியாது .அது அவர்களுக்கு
தேவை இல்லாமலும் இருக்கலாம்

தோழர். பால பாரதியை
பேச வேண்டாம் என்று
சொன்னதில் கோபப்படும்
நீங்கள் ஸ்டாலினையும்
பேசவிடவில்லை என்பது
உங்களுக்கு தெரியாதா...?
உங்களுக்கு வேண்டுமானால்
இருவரும் ஒன்றல்ல...
அவர்களுக்கு....?

 ஆனால்...
அவர்கள் சொல்வது
"அப்பட்டமான அரசியல்
சாயம் பூசியவர்கள் வேண்டாம்..!
என்று சொல்கிறார்கள்.
அது சரிதானே....?

வெகுஜன அமைப்பை எப்படி
நடத்துவது என்று கரைத்து
குடித்த சிபிஎம்- க்கு தெரியாமல்
போனது என்ன...?
அவர்கள் வெகுஜன அமைப்பாக
நடத்தியதால் குழப்பம் ஏற்பட்டுவிட்டதா...? என்ன...!

கூடங்குளம் அணுமின் நிலையம்
எதிர்ப்பு போராட்டத்தை உதயகுமார் நடத்திய போது
சி பி எம் நிலை என்ன....?
வேண்டாம் என்பது....!
த மு எ க ச நிலை வேறு
என்று சொல்லி ஆதவன் தீட்சண்யன் தலைமையில்
ஒரு குழு போய் ஆதரிக்கவில்லையா...?
கோட்டை விட்டது நீங்கள்
குறை அவர்கள் மீது அல்ல...





Thursday 19 January 2017

ஊர் சொல்லும் சில்லான் ...!




இன்டெர் நெட்டில்
இன்றைய உலகம்
இயங்கி கொண்டிருந்தாலும் ,

இன்றும் ....
எங்கள் ஊரில்
எல்லோருக்கும்
ஊருக்கு பொதுவான
தகவல் சொல்லுவது
சில்லான் என்ற
தலீத் ....!

சமூகத்தில்
இழி தொழிலாக
கருதும் எதையும்
செய்யக்கூடாது
என்பதுதான்
என்னுடைய
ஆழ்ந்த கருத்து ...!

ஆனால்....
சில்லான் அப்படியல்ல
அப்படி சொல்வதை
'நான் ஏற்கமாட்டேன் '
என்னை யாரும்
இழிவாக பார்க்கவில்லயே..?
என்று வாதிடுவார் .

சில்லானை பொறுத்தவரை
அது உண்மையும் கூட
தன்னை தாழ்வாக அணுகினால்
எவராக இருப்பினும் ...
உயர்ந்தவர், தாழ்ந்தவர்
பேதமில்லாமல்..
கிழித்தெரிந்து விடுவார் .

பேதமில்லாமல்
அண்ணன் என்றே
கூப்பிடும் எனக்கு
நீண்ட காலத்துக்கு பிறகே
தெரிந்து கொண்டேன் ...
அவர் பெயர் சுப்பராயன்
என்று......!

Tuesday 3 January 2017

அவன் மனிதன்...! .....y


அவமானங்களும் ,
அசிங்களும் ,
இனி இல்லை.
வலிகளைத்தவிர ..!

மரங்களை கட்டித்தழுவி,
பாறைகளை முத்தமிட்டு ,
விலங்கின் முரட்டுத்தனத்தை
சகிக்கவில்லை .

ஏய்...!
நல்லா இருக்கீயா..?
சின்ன சீண்டலில்..
மாராப்பு துணி மூடியது.

வேர்வையும்,
எண்ணை பிசிக்கும்,
சாராய நெடியில் ...
மனம் குமட்டவில்லை .

அவன் மனிதன்...!



.....