Sunday 15 October 2017

ஆண்களுக்கும் நிறம் உண்டு...!


இடதுசாரிய கருத்துக்களை
 தாங்கி ஒரு பத்திரிகை 
நடத்துவது என்பது அவ்வளவு
எளிமையான விஷயமல்ல...!

புதுச்சேரியில்1934 ஆம் ஆண்டு
தோழர்.சுப்பையா அவர்களால்
வெளிவந்த "சுதந்திரம்" பத்திரிக்கை தொடங்கி,
தமிழகத்தில் தோழர்.ஜீவா அவர்கள் முன் முயற்சியால்
நடத்தப்பட்ட " ஜனசக்தி " 
வரையில் இடதுசாரி 
சிந்தனையை விதைத்து 
வந்த வரிசையில் "தீக்கதிர்" நாளிதழும் நீங்கா இடம் பிடித்து
வருகிறது.

தீக்கதிர் நாளிதழை ஏறத்தாழ
முப்பது ஆண்டு காலமாக படித்து வருகிறேன். ஒவ்வொரு
வாரமும் தீக்கதிர் இணைப்பு
இதழாக வரும் வண்ணக்கதிரை
கூடுமான வரையில் படிக்காமல்
விடுபடுவதில்லை.

அப்படித்தான் ...
இன்றைய வண்ணக்கதிரையும் புரட்டினேன். அதில் "கரிசனத்திற்கும் நிறம்
உண்டு...!" என்ற சிறுகதையை
ரா. செம்மலர் எழுதி இருந்தார்.

பெண் சமூகத்தின் ஒட்டுமொத்தல்
பாதிப்பும் "ஆனாதிக்க சமூக ஒடுக்கு முறை "என்ற வட்டத்திற்குள் கொண்டு வந்தாலும், பிள்ளைபேறு இல்லாவிட்டால்...மலடி என்ற
பட்டம் மட்டுலல்ல ..அவளுக்கு
நிகழ் காலமும், எதிர் காலமும்
இல்லை என்பதை " வாழ்வின்
வேரே அறுந்து போகப்போகிறது" என்று செம்மலர் எழுதிய வரிகள் பெண்களின் ஒட்டுமொத்த
பிரதிபலிப்பு .

ஒரு பெண்ணின்
பாதுகாப்பு அவளின் 
பருவத்துக்கு ஏற்ப ...
பெண் குழந்தை என்றால்
தந்தை, மணம் முடித்தால்
கணவன், அவள் தாயானால்..
மகனுக்கு, இப்படி எல்லா
நிலையிலும் ஆணை சார்ந்தே
வாழவேண்டும் என்று நிர்பந்திக்கும் ஆனாதிக்க சமூகம் அவள் குழந்தை பெறவில்லை என்றால் மல்டிஎன்று அவமானபடுத்துவதோடு
அல்லாமல் அனாதையாக்கு
ஈவிறக்கமற்ற செயல் என்பதை
இதை தனக்கே உரிய எழுத்து
பாணியில் மிகச்சிறப்பாக எழுதி
உள்ளார்.

"நம்ப ஜாதகத்தை நம்பற அளவுக்கு மருத்துவத்தை நம்பறதில்லை . அதனாலதான்
நம்மூர் கல்யாணம் எதுவும்
மெடிக்கல் டெஸ்ட் செஞ்சு பார்த்து முடிவு செய்யறதில்லை.
வாழ்க்கை துவங்கின பின்னாடி தான் யாருக்கு என்ன குறைன்னே தெரிஞ்சுக்க முடியுது. அந்த குறையோட அவங்களை ஏத்துகிட்டு நேசிக்க
முடியணூம் .அதுலதான் வாழ்வின் உண்மையான அர்த்தம் ,வெற்றி. இரண்டும் இருக்கு."

இப்படி பெண்ணின் எதிர் காலம் குறித்த பாதையை ,பயணத்தை
இந்த சிறுகதையில் வழிகாட்டி
இருக்கிறார்.

அம்பை, ராஜம் கிருஷ்ணன்,
,லலிதாம்பிகை அந்தர்ஜனம், கோதாவரிபாருலேக்கர் ,
அ.பிரேமா என்ற வரிசையில்
ரா. செம்மலரும் தடம் பதிப்பார்
என்றே நம்புகிறேன்.

இந்த சிறுகதைக்கு
"கரிசனத்திற்கும் நிறம்உண்டு...!" என்று சொல்வதை காட்டிலும்,
ஆண்களுக்கும் நிறம்
உண்டு...! என்பதே சரியா
பொருள் படும்.