Saturday 17 March 2018

சந்தையூர் சாதி வெறி...!

சந்தையூரில் நடப்பது....?

சந்தையூர் அருந்ததியர்
மக்களை பிரித்து வைத்து இருப்பது வெறும் சுவர் அல்ல...!

பறையருக்கு கீழ் அருந்ததியர்
என்ற சாதி ஆதிக்கத்தை நிறுவுவதற்கே அந்த அவமான
சுவர் எழுப்பப்பட்டு இருக்கிறது.

அதை அரசு இயந்திரமும், ஊடகமும்
தலீத் மக்களுக்குள்ளே இருக்கும்
சிறு மோதல் என்றோ ...? சின்ன
பிரச்சனை அதை ஊதி பெருசாக்க
வேண்டாம் என்பது போல பேசுவதும் , எழுதுவதும் , தலீத்
மக்களில் பெரும்பான்மையாக
இருக்கும் பறையர் ,பள்ளர் இன
மக்களுக்கு ஆதரவான சனாதான
கொள்கையை தூக்கி பிடிப்பதாகும்.

சந்தையூர் பிரச்சனை தொடக்கம்
அல்ல ..! தொடர்ச்சியின் ஒரு பகுதி. தொடர்ந்து பறையர்  சாதி ஆதிக்கத்தில் அருந்ததிய மக்களை
அடக்கியே வைத்து பழக்கப்பட்டவர் கள் . அருந்திய மக்கள் அவர்கள் உரிமையை , கேட்கும் போது அது வெளியில் தெரிந்து விடக்கூடாது என்பதில் கவனமாக இருப்பதோடு
இது " எங்களுக்குள் நடப்பது இதில்
வேறு எவரும் தலையிடக்கூடாது"
என்றகூறுவதுஐய்யோக்கியத்தனமான சமூக அநீதி.

சந்தையூர் அவமான சுவர் பிரச்சனையை வெளியில் உள்ளவர்கள் அரசியல் ஆதாயத்துக்காக " கிளறி" விடுகிறார்கள் என்று ஆதங்கப்படும் விசிக அமைப்பினர்கள்.ஒன்றை புரிந்து 
கொள்ள வேண்டும் .வெளியில்
இருந்து பிரச்சனையை கிளறாமல்
தீர்த்து வைத்துயிருக்கலாமே...?
45 நாட்களுக்கு மேலாகியும்
ஏன் தீர்க்கப்படவில்லை...?

இது பறையர்களின் சாதிஆதிக்கம்
சார்ந்த  பிரச்சனை இல்லையென்றால்...?
திருமா முயன்றால்...? அது தீர்க்க 
முடியாதா...? என்ன... முடியும்...!

சந்தையூரில் "நடந்தது...நடப்பது...
என்ன என்று பட்டிமன்றம் நடத்தும்
விசிக திருமாவி்ன் கட்டுப்பாட்டில்
இல்லை என்று பகிரங்கமாக அவரால் சொல்ல முடியுமா..? சொல்ல முடியாது.

ஆனால் அதை தீர்த்து வைப்பதில்
அவருக்கு உடன்பாடும் இல்லை.
என்பதே வெளிப்படை. சந்தையூர்
பிரச்சனையில் பறையர்கள் என்ற சாதியை திருப்தி படுத்த வேண்டும் என்றே திருமா நினைப்பதாகவே உணர முடிகிறது.

தலீத் ஒடுக்குமுறைக்கு எதிராக
போராடும் இடதுசாரி அமைப்புகள்
தமிழகத்தை பொருத்த வரையில்
தலீத் என்றால் தலீத் மக்களில்
பெரும்பான்மையாக இருக்கும்
பறையர் ,பள்ளர் இன மக்களுக்கும்
உயர் சாதி இந்து மக்களுக்குமான
ஒடுக்குமுறை மட்டுமே தீண்டாமை
பிரச்சனையாக பார்க்கி்றார்கள்.

"ஒடுக்கப்பட்ட மக்களுக்குள் இருக்கும் சாதிய படிநிலை ஒடுக்குமுறையை
பெரிதாக எடுத்துக்கொள்வதில்லை.

ஏதோ சந்தையூர்  பிரச்சனை
மட்டுமே புதியது போலவும், 
அதை மெல்ல பேசித்தான் தீர்க்க
வேண்டும் என்று சொல்வது சரியல்ல..!

கடந்த 50 நாட்களுக்கும் மேலாக
சந்தையூர் பிரச்சனை தொடர யார் காரணம்...? அதை எதிர்த்த போராட்டம் என்ன...? இந்த கேள்விக்கு இடது சாரி வெகு ஜன அமைப்பான இப்போதைய தீண்டாமை ஒழிப்பு முன்னணியிடம் விடை இல்லை.

ஆனால்...
கடந்த காலத்தில்
தலித்துக்களுக்கு ஆதரவாக போராடிய நாகை தோழர்.வெங்கடாசலம் காணா பிணமாக்கப்பட்டதும் , சக்கிலிய மக்களுக்கு ஆதரவாக இருந்ததால்
சாதி வெறியர்களால் கோவை இடுவாய் தோழர்.இரத்தினசாமி தூக்கில் போட்டு கொன்றதும் கம்யூனிஸ்ட்களின்
மறுக்கவோ, மறைக்கவோ முடியாத
தியாக வரலாறு என்பதையும்
நாம் அறிவோம்.

ஆகவே....
தமிழக அரசும் ,நீதி மன்றமும் இதற்கு சட்ட ரீதியான தீர்வை கொடுக்க வேண்டும். அது அந்த அவமான சுவரை உடைத்தெரியும்
வகையில் இருக்க வேண்டும் என்பதே  சமூக நீதி.