Wednesday 17 October 2018

அருந்ததியனுக்கு மேல ஒரு கோடு "பரியேறும் பெருமாள் "


"பட்டியல் இன சமூகம் மற்ற சமூகத்தால்
தொடுக்கப்படும் சாதிய கொடுமையை
இதை விட ஆழமாக , அழுத்தமாக எவராலும்
பதிவு செய்ய முடியாது.

சட்டக்கல்லூரியில் சேறும் போது முதல்வரின்
கேள்விக்கு "டாக்டராக போறேன்" என்று கதானாயகன் சொல்லும் சொல்லுக்கு அம்பேத்கரின் மேன்மை விண்ணை தொட்டது.

பரியேறும் பெருமாள் பி ஏ பி எல் மேல ஒரு கோடு...! என்ற வசனம் நகைச்சுவை போல
சித்தரித்தாலும் , ஒடுக்கப்பட்ட மக்கள் மீது
போடப்பட்டுள்ள மனுவின் அடையாள கோட்டை  அழிக்க முடியாமல் நீளும் கொடுமையும் , அதை அழிக்க தொடரும்
போராட்டமும் ,யதார்த்தம் .

சாதிய ஒடுக்கு முறை என்றால்...?
சக்கிலியனுக்கு மேல் நிலையில்
உள்ள பள்ளர் , பறையர் இன மக்களின்
மீது தொடுக்கப்படும் ஒடுக்கு முறையே...! என்பதைத்தான் காண்பிக்கப்படுகிறது.

சட்டக்கல்லூரி முதல்வர்.சென்னை கலைக்குழு
ராமுவின் ( கேரெக்டர் ) கதாப்பாத்திரம் கல்லூரி முதல்வர் பேசும் உரையாடல் என்ன...?

"உன் அப்பன் பெண் வேஷம் போடுபவன்....
என் அப்பன் யார் தெரியுமா ...?
ரோட்டில் செருப்பு தைப்பவன் அவன் மகன்
தான் நான் " என்று பேசுகிறது.
இதன் மூலம் நீ எவ்வளவோ உயர்ந்தவன் என்று  பரியனை சமாதான படுத்தவும் ,
உனக்கும் கீழே செருப்பு தைப்பவன் இருக்கிற்றான் " என்று சொல்லாமல் சொல்வதுதான் அபத்தம் . ஒடுக்குமுறையின் மறைக்க முடியாத ,மறுக்க முடியாத நீட்சி.

சாதிய படி நிலையில் ...
 "உனக்கும் கீழே உள்ளவர் கோடி நினைத்து பார்த்து நிம்மதி தேடு..."
அதுதான் மனுவின் சாதிய கட்டுமானம் சரியாமல் பாதுகாக்க போடப்பட்டுள்ள காங்கிரீட் அடித்தளம் அதையே
ஆழமாக இந்த படத்தில் ஆணித்தரமான நிறுவி இருக்கிறார்கள் என்பது நோக்கத்தையே திசை திருப்பி விட்டு உள்ளது.

முடிவாய் ...
அருந்ததியனுக்கு மேல ஒரு கோடு போடப்பட்டுள்ளது.



Monday 15 October 2018

Me too.. ! நானும் கூட...?


நானும்பாதிக்கப்பட்டேன்..!

வெளியில் சொல்ல நினைத்ததை ,
சொல்ல மறைத்ததை சொல்ல
வேண்டும் என்பது சரியானதே.
அது பெண்ணுக்கு மட்டுமல்ல..
ஆணுக்கும் தான்...!

இப்போதாவது சொல்லுங்கள்...!

அப்போ..சொல்லாமல்...
இப்போ..ஏன் சொல்லவேண்டும்...?
இந்த கேள்வியில் எனக்கு உடன்பாடு
இல்லை.எப்போது செய்தாலும் தப்பு தப்புதான் .இப்போதும் சொல்ல வாய்ப்பு கிடைத்ததே என்று ஆதரிக்க வேண்டும்.

அதோடு...பெண் தனக்கு ஏற்பட்ட
பாதிப்பை எப்போ வேண்டுமானாலும்
சொல்லாம். சொல்ல முடியும் .அது பற்றி
விவாதிக்கமுடியும் என்ற நம்பிக்கையை ஆணாதிக்க சமூகம் ஏற்க வேண்டும் .

பொதுவாய்...

பிரபலங்கள் மட்டுமல்ல..
ஒட்டு மொத்த ஆண் சமூகமே அதிர்ந்து போய் இருக்கிறது என்பது மட்டும் தெளிவாய் தெரிகிறது .

இது பற்றிய விவாதத்தை ஆண் சமூகம் ஏற்க மறுக்கிறது என்பதாலே அது பற்றி பேசாமல் தடுக்க முடியாது என்பதையும் உணர வேண்டும் .

பெண் என்பதாலே அவர்கள்
சொல்வது சரியாகிவிடுமா ..?
என்ற வாதமும் விவாதிக்கப்பட
வேண்டும். அதற்காக பெண் சொல்வதில் உண்மையே இல்லை என்ற முடிவுக்கு வர முடியுமா ...? பெண் தன் மீது தொடுக்கப்பட்ட பாலியல் தொந்தரவை  எப்போதும் வெளியில் சொல்வதே தப்பு என்று தான் காலங்காலமாக அந்த வாய்ப்புகதவு அடைக்கப்பட்டே கிடக்கிறது.

இனி...
அது தகர்த்து எரியப்பட்டு உள்ளது. ஆனால் இதை பயன்படுத்தி பெண் சமூகம் வெளியே வருவதும் , தனக்கான பேச்சுரிமையை , கருத்துரிமையை பயன்படுத்த இன்னும் சில காலங்கள் ஆகலாம்.

பேசாத பொருள் மீது சமீபத்தில்
சட்டமும் , சமூகமும் பேசிவருகிறது.
பேசட்டும் , பேசித்தான் ஆகவேண்டும்.

கவிஞர் . வைரமுத்து மீது ...!


#வைரமுத்துமீதுசின்மயி
மட்டுமல்ல இன்னொரு பெண்ணும் பாதிக்கப்பட்டு இருப்பதாக பொது வெளியில் சொல்லி இருக்கிறார்கள்.
மேலும் வாய்ப்பு கிடைக்கும் போது
சொல்கிற்றார்கள்.

பெண்கள் அப்படி சொல்வது அவ்வளவு
எளிதானது அல்ல..!
அதோடு பாலியல் பாதிப்புக்குள்ளான நபரின் சாதியையும்,பாலியல் தொல்லை
கொடுத்தோரின் சாதியையும்
வைத்தும் விவாதிப்பது முறையும் அல்ல..
சரியுமல்ல..

அது வெள்ளையாக இருப்பவன் பொய் சொல்லமாட்டன் என்ற குருட்டு குரலை
போன்றதாகும்.

எல்லா ஆண்களுமே வாய்ப்பு கிடைக்கும்
போது பாலியல் அத்துமீறல் செய்கிறார்கள்
என்பதே உண்மை. இதில் எந்த வரையறை யும் அவர்களை கட்டுப்படுத்தவில்லை.

பாலியல் வன்முறை நடந்ததா..?
இல்லையா...? என்று விவாதித்து
விசாரிக்கப்பட வேண்டும்.

இங்கே...
இந்த விவகாரம்
பொருத்த வரையில்...
ஆண்கள்,பெண்களை
எது வேண்டுமானாலும்
எப்போது வேண்டுமானாலும்
செய்யலாம் என்ற ஆணாதிக்க
நிலையில் இருந்து சமூக ரீதியாக ,சட்ட ரீதியாக விசாரணை வளையத்துக்குள்
கொண்டு வருவதையே ஜீரனிக்க முடியவில்லை. என்றஆணாதிக்கத்தின் அகங்காரமே வானுக்கும் ,பூமிக்குமாய் துள்ளிக் குதிக்கிறது.

இந்த விவாதத்தில்  எதிர்த்தும்,ஆதரித்தும்
தற்போது பேசிக்கொண்டு இருக்கும் ஆண்களுக்கும் இது பொருந்தும் என்பது தெரியாமலில்லை.

கம்யூனிஸ்ட்டுகள் என்றால் பங்கறைங்களா.?


கம்யூனிஸ்ட்டுகள்
என்றால்....
பரட்டை தலையும்,
தாடியும்,
கிழிந்த ஆடையும்,
கொண்டவர்கள்
பங்கறைங்க...
பக்கிங்க... என்ற
ஆழமான அவதூறு நம்
எதிரிகளால்...
தொடர்ந்து பரப்பபட்டு
வருகிறது.

கட்சியின்
ஊழியர்கள் முதல்
தலைவர்கள் வரை
எதில் கவனம்
செலுத்து கி்றோமோ..?
இல்லையோ..
தனிமனித பார்வையில்,
தனித்துவத்தில் ,
ஆடை விஷயத்தில்
கவனம் செலுத்த வேண்டும்.
இது நுகர்வு கலாச்சாரம்
என்று புறம் தள்ளுவது
தத்துவ ஏமாற்று.

இன்னொரு புறத்தில்...
கம்யூனிஸ்ட் என்றால்
எளிமைதானே...?
நல்ல ஆடை உடுத்தினால்
பகட்டாக தெரியுமே..?
என்று பேசுவது
வரட்டுவாதமாகவே
பார்கி்றேன்.

கம்யூனிஸ்ட் என்று
தன்னை சொல்லிக்கொண்டு எல்லாவித சமூக சீர்கேடுகளையும் செய்யாமல்
இருக்கவேண்டுமேயொழிய...
ஆடை அணிவதிலோ...
நல்ல உணவு உண்பதிலோ..
அல்ல.!

அது ஒரு "ஒழுக்க நெறி."
அதை கடைபிடிப்போர்
கம்பீரமாக நடப்பதிலும்
நேர்த்தியானஆடை ஆடை
அணிவதிலோ
குறைகள் எதும் இல்லை...!