Saturday 17 November 2018

சாதி தீயில் எரியும் உடன்கட்டை ...!

பெண் என்பவள் ...
ஆண் சமுகத்துக்கு கீழ் படிந்தவள்.
அவள் ஆணின் காமவெறியை
தீர்த்து வைக்கும் கழிப்பறை.
இவை இரண்டையும் மதமும் ,
சாதியும் , ஆணாதிக்க சமூகமும்,
தொடர்ந்து கற்பித்து வருகிறது .

ஆனாதிக்க சமூகத்தின் பாலியல்
தேவையை பெண் இனம் எப்படி
நிறைவு செய்ய வேண்டும் என்ற
பாதையை வகுத்து கொடுத்து இருக்கிறது.
 அதன் படிதான் செயல்பட வேண்டும்.
அந்த பாதைதான்,மதம் ,சாதி ,என்ற
மின்சார வேலிகள் அமைக்கபட்ட பாதை.

பெண் அதிலிருந்து இம்மியளவு மாறினாலும், எதிர்த்தாலும் ,ஈவு இரக்கமின்றி படுகொலை செய்யப்படுவார் கள் என்ற அரசகட்டளையை அமலாக்கி வருகிறது.

இந்த வன்முறை உடன்கட்டைக்கு
ஒப்பானான கொடுங்செயல் .
காட்டுமிராண்டிகளின் வன்முறை.
நாகரீக சமூகம் ஏற்கமுடியாத
தேசிய அவமானம் .

அதை எதிர்த்து பெண் இனம்
சமரசமற்ற எதிர்ப்பை ,போராட்டத்தை
தன் குடும்பத்திலிருந்தே தொடங்க வேண்டும் . அதுவும் குறிப்பாய் குழந்தை பருவத்திலிருந்தே பயிற்சியை மேற்கொள்ளவேண்டும் .

பெண் என்றால் அவள் பாலியல் தேவைக்காக படைக்கப்பட்டவள் என்ற
ஆணாதிக்க கருத்தியலை
பயிற்றுவித்துக்கொண்டு இருக்கும்
சாதி,மத, சமூக கட்டமைப்பை உடைத்தெரிய கலாச்சார போராட்டத்தை நடத்த வேண்டும் .

பாலியல் பலாத்காரத்தை ,பாலியல் ஒடுக்குமுறையை எதிர்கொள்ள பாலின சமத்துவம் வேண்டி வெற்று போராட்டம்
மட்டுமே போதுமானது அல்ல.

சட்ட ரீதியான தண்டனையும்,
பாலியல் எதிர் தாக்குதல் நடத்த பெண்ணுக்கு ஆயுத பயிற்சியும், இந்திய தண்டனை சட்டத்திலிருந்து அவளுக்கு விலக்கும்அளிக்க வேண்டும் .

பாலியல் வன்முறைக்கு எதிராக போராடும் ஆண்-பெண் இருபாலரையும்
ஒருங்கிணைந்த போராட்டகுழுக்களை அமைக்க வேண்டும் .

இவைகளை செய்தால்...? ஒரே நாளில்
ஒரே காலகட்டத்தில் ஒழிக முடியும்
என்ற மாயாவாதத்தின் நம்பிக்கை அல்ல.
இந்த கருத்தியல் காட்டுமிராண்டி செயலை
கட்டுபடுத்த வாய்ப்பு இருக்கலாம்.

இந்தியாவில் மத,சாதிய, ஒடுக்குமுறைக்கு
எதிர்த்த போராட்டம் சமூக மாற்றத்திற்கான
போராட்டம் மட்டுமல்ல ...
பாலின சமுத்துவம் பெற பெண்இன விடுதலைக்கான போராட்டம்.

ஆயிரம் ஆயிரமான கருத்துக்கள் வரட்டும்
கருத்துக்களின் மோதலில்தான் சமூக
மாற்றத்திற்கான பாதையை செப்பனிட்டு
பயணிக்க முடியும்.