Thursday 22 February 2018

அரசியல் மூடத்தனம்...!



கடந்த காலத்தில்
சிபிஎம் - லிருந்து
தணிகை செல்வம்..
லியோனி...
அந்த வரிசையில்
இன்று...
கிருஷ்ணகுமார்.

எழுத்து பணி செய்ய
போவதால் அந்த கட்சியின் மாநிலக்குழுவிலிருந்து
தன்னை விடுவித்து கொண்டதாக
எழுத்தாளரும் , முற்போக்கு
எழுத்தாளர், கலைஞர் சங்கத்தின்
தலைவருமான ச.தமிழ்ச்செல்வனை சொல்கிறார் கள்.

இவர்கள் மட்டுமல்ல...
அந்த இயக்கத்துக்கு
இன்னும் பலர் வரலாம்
போகலாம்.

குறிப்பிட்டு சொல்லப்போனால்
கட்சிக்குள் வந்து போகும் இவர்கள் பற்றியது அல்ல...இந்த விவாதம்.

இவர்கள்
சார்ந்த சிபிஎம் பற்றியதே ...!
சிபிஎம் - மட்டுமல்ல
எந்த இடது சாரி கட்சியாக
இருந்தாலும் அவைகளும் விமர்சனத்துக்கு
அப்பாற்பட்டவை அல்ல.

அந்த விவாதத்தை பொது வெளியில் நடத்துபர்கள்
கட்சிகாரர்கள்என்றால் அது
தடை செய்யப்பட்டு இருக்கிறது.

மற்றவர்கள் விவாதிக்கலாம்.
விமர்சிக்கலாம்.
அதுவும் கம்யூனிச நெறிமுறைக்கு
உட்பட்டு இருந்தால்..? நல்லது.

2000 ஆண்டில் திருவனந்தபுரத்தில்
சிபிஎம் கட்சி எப்படிதன் கட்சி திட்டத்தைமக்கள் ஜனாயக புரட்சி
நடத்துவதற்காக காலத்திற்கேற்ப
மேம்படுத்திக்கொண்டதோ...?
அதே போல் அந்தகட்சி
சுய பரிசோதனைக்கு
தன்னை உட்படுத்தி
கொள்ள வேண்டும்.
என்பதே இந்த விவாதத்தின்
அடி நாதம்.

ஏனென்றால்...
கட்சி தப்பு செய்தால்
வளர்ச்சி அடையமுடியாது.
தேக்க நிலையிலே இருக்கும்
புதிய வரவுகள் வராது
அவ்வளவு தான்

ஆனால் .....
அதன் கேடர்கள் வெளியேறினால்
பாதிப்பு அவர்களுக்கு
மட்டுமே என்ற பார்வையில்
சொல்வதிலும், எழுதுவதுவதிலும்
 மாற்றம் வேண்டும்.

தனிமனித பாத்திரம் கட்சியின்
அங்கம் என்பதை அவர்கள் ஏற்க
மறுக்கிறார்களோ...? என்னவோ..?
கேடர் என்பது ஒருவன்
அல்ல...அந்த இயக்கத்தின்
ஆணி வேர்.

அதோடு
அவன் குடும்பம், வாழ்க்கை எதிர்காலம்..இதையெல்லாம்
கணக்கில் எடுத்துகொள்ள வேண்டாமா...?

அதனால் வெளியேறி
போகிறவர்களை கெஞ்சி கூத்தாடி
நிற்க வைக்க வேண்டுமென்பது
அல்ல...அது சரியுமல்ல...!

உதாரணமாக ஒரு கட்சி ஊழியர்
மீது ஏவப்படும் மொட்டை கடுதாசியை கூட எல்லாம் பொய் என்று விட்டுவிடுவதோ..?
எல்லாம் சரி என்றே
ஏற்றுக்கொள்ளும் நடைமுறையோ
 சிபிஎம் - க்கு இல்லை.

முழு நேர ஊழியர்கள்
பற்றியும் , பகுதி நேர
முன்னணி ஊழியர்கள்
பற்றியும்  மணிகணக்கில்
வகுப்பு நடத்தி விட்டு
ஊழியர் அல்லது...
உறுப்பினர் வெளியே
போனால் ... அதற்கு
காரணம் அவர்களின்
சுயநலம்தான் என்பது
அபத்தம்.

ஏனென்றால்...
கட்சிக்குள் வரும்
போது இல்லாத
சுயநலம் போகும்
வந்து விட்டது என்று
சொல்லி அவரின்
பக்கத்தை மூடிவிடுவது...
அந்த நபருக்கு நட்டம் அல்ல
அவர் இத்தனை காலம்
ஏற்றுக்கொள்ளப்பட்ட
கொள்கையில் ஏதோ
கோளாறு என்றுதான்
அர்த்தம்.

சிபிஎம் எடுக்கும்
வாந்தியை மற்றவர்கள்
பிடித்துக்கொள்கிறார்கள்
என்று அந்த கட்சியில்
உள்ளவர்கள் அடிக்கடி
சொல்ல கேட்டு இருக்கேன்.

ஏன் அடிக்கடி வாந்தி
வருகி்றது...?
வாந்தி எடுப்பவரை
மருத்துவ மனயில்
சேர்த்து வைத்தியம்
பார்க்க வேண்டுமேயொழிய,
வாந்தியை பற்றி விவாதிப்பதும்
வாந்திக்கு காரணம் வாந்தியே
என்று காரணம் காட்டும்
அரசியல்  மூடத்தனத்தை
எப்படி புரிந்து ,எந்த வகையில் புரிந்து கொள்வது...?

Monday 12 February 2018

நடைபிணங்கள்...!

இளமைக்கால கனவுகளோடுதான்
ஒவ்வொருவரின் வாழ்க்கை பயணமும் தொடங்குகிறது. ,
ஆனால் காலம் அவர்கள் சென்றடையம் இலக்கை மாற்றிவிடுகி்றது .

தொடங்கிய இடத்திலே முடிந்து போனவர்களும் , வழியிலே தொலைந்து போனவர்களும்
உண்டு.ஒரு சிலரேஅந்தமைல் கல்லை தொட்டு இருக்கிறார்கள்.
அது கூட முழுமையாக அல்ல...!
என்பதே வாழ்வின் யதார்த்தம்.

பணமா , எதிர்கால கனவா என்ற
பந்தயத்தில் சுக - துக்கங்களோடு
இளமையையும் ,வயதையும் தோலுரித்தே பணபசிக்கே இரையாகி போகிறார்கள்.

அதில் நாடுகடந்து அடிமைப்பட்டு
போனவர்களின் மரண ஓலங்களில்
உள்ளூர் மண்ணில் வீட்டு வேலைக்கு சென்று புதைகுழியில் புதைந்து போனவர்களை யார் அ்றிவார்..?

குற்றுயிராக கிடக்கும் பிணத்திற்கு உள்நாடென்ன..?வெளிநாடென்ன..?
மயானங்களின் வேறுபாட்டை விவாதிக்க பட்டிமன்றம் தேவயில்லை.

வாழ்க்கை வாழ்வதற்கே..!
மாற்று கோஷமில்லை...
வாழ்க்கைக்கான வாய்ப்புகளை
அடைத்தொழித்துவிட்டு
வாழுங்கள் என்று சொல்லும்
மூடர்களின் கூற்றை ஏற்பதற்கில்லை.

வயிறு பிழைக்க காகிதத்தை
உண்டு வாழும் கழுதைகளோடு
மனிதர்களை தயவு கூர்ந்து ஒப்பிடாதீர். ஏனென்றால்
கழுதைகளை விட நடைபிணங்கள்
மேலானவை.