Thursday 31 August 2017

மாதவிடாய் கறை....!





பாளையங்கோட்டை பள்ளியில் படித்த
12 வயது குழந்தையின் ஆடையில்
மாதவிடாய்உதிரப்போக்கின் கறை
படிந்ததை கண்டு ஆசிரியர்
அவமானப்படுத்தியதால்
தற்கொலை செய்து செத்துப்போனாள்.

இந்த செய்தி பெரிய அளவில் மக்களின்
கவனத்துக்கு வரவில்லை , உப்பு சப்பில்லா
பிரச்சனையை கூட ஊதி பெரிதாக்கும்
ஊடகங்கள் இதை கண்டு கொள்ளாமல்
போனது ஆணாதிக்க மனோபாவத்தில
அன்றாடசெய்தியோடு ஒன்றாக மறைத்து
இரட்டடிப்பு செய்துவிட்டது கண்டனத்துக்கு
உரியது .

பெண் குழந்தைகளின் இயற்கை
உபாதைகாலங்களில் அவர்களை மனிதாபிமானத்தோடு எப்படி அணுக
வேண்டும் என்று கூட ஆசிரியர்களுக்கு தெரியவில்லை என்பது மன்னிக்க முடியாத குற்றமே.அதோடு பாதிக்கப்பட்டது தன்
 குழந்தையாக இருந்தால் ...?அதே ஆசிரியர் இப்படித்தான் நடந்துகொண்டு இருப்பாரா..?


ஆண் , பெண் குழந்தைகளின் வளரிளம் பருவ மாற்றங்கள் ,மூன்றாம் பாலினம் பற்றிய
விஞ்ஞான பார்வை , பெண் குழந்தைகளின் மாதவிடாய் பராமரிப்பு போன்றவை பள்ளி பாடத்திட்டதில் சேர்க்கப்பட வேண்டும்.
அதுபற்றி வெளிப்படையாக ஊடகங்களில்
பொது விவாததை ஏற்படுத்தவேண்டும்.

அண்ட வெளியில் ஆய்வு என்ற பெயரில் கோடிக்கணக்கான பணத்தை கொட்டி
அழும் அரசுகள், பள்ளியில் படிக்கும் பெண் குழந்தைகளுக்கு. சேனட்டரி நாப்க்கின்ஸ்
கொடுப்பது பற்றிய அடிப்படை அறிவே
இல்லையே என்பது பரிதாபத்துக்குரியது.

பெண் குழந்தைகளை பாதுகாக்க இனியும் தாமதிக்காமல் மன ரீதியாக ,உடல் ரீதியான
 அணுகு முறையை கடைபிடிக்க
ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்க
வேண்டும்.

"கறை நல்லது" என்று விளம்பரபடுத்தி
வியாபாரம்செய்யும் யுக்தியை வியாபாரியும்
அதன் மூலம்கோடிகளை குவிக்கும் ஊடகங்கள் "மாதவிடாய் கறையும் மனிதர்களுக்கு நல்லது..!
என்பதை காட்ட வேண்டும்.












Tuesday 29 August 2017

சரி நிகர் சமானமென...!




கடந்த 27 . 8 .2017 ல் என் ஊரில்
என் சொந்தக்கார பெண்மணி
ஒருவர் 86 வயதை கடந்து
முதுமையால் காலமானார்.

அவருடைய கணவர் 50 களில்
காங்கிரஸ் அரசியலில் இருந்து
பஞ்சாயத்து கவுன்சிலராக
போட்டியிட்டு வெற்றி பெற்றவர்.
பின்னர் விபத்து ஒன்றில்
பாதிக்கப்பட்டு காலமானார்.

இவர்களுக்கு ஆண் வாரிசு பெற
வேண்டும் என்ற முயற்சியில்
எட்டு பெண் குழந்தைகள் பிறந்தும்
அந்த வாய்ப்பு இல்லாலே போய்விட்டது.

அத்துனை பாரத்தையும் தன்
மனைவியின் தலையில்
சுமத்திவிட்டு போய்விட்டார்.
தன் கணவன் இறந்த பிறகு
பிள்ளைகளை படிக்க வைத்து
நல்ல நிலையில் திருமணமும்
செய்து வைத்து விட்டார்.

தான் செத்தால் கொள்ளி
போடுவதற்கு கூட ஆள்
இல்லையே ஏக்கம் அந்த
பெண்மணிக்கு சாகும்
வரை இருந்தது.

மகள் வழி பேரப்பிள்ளைகள்
இருந்தும் அவருடைய இறுதி
ஆசையை அவருடைய கடேசி
மகள் கொள்ளி சட்டியை கையில்
ஏந்திக்கொண்டு மற்ற சகோதரிகளும்
சேர்ந்து சுடு காட்டுக்கு வந்து
அங்கே செய்ய வேண்டிய அத்துனை
சடங்குகளையும் செய்து முடித்தனர்.

இத்தனைக்கும்
கொள்ளி வைத்த மகள்
இளநிலைப் பொறியாளராக
புதுச்சேரி அரசு மின் துறையில்
பணி புரிந்து வருகிறார்.

கொள்ளி போடுவதும், அதற்கு
பின்னால் சொத்துரிமை கோருவதும் ,
சம்பிரதாய சடங்குகளுக்குள்
ஆணாதிக்கத்தை பின்னிபிணைந்து
வைத்து இருக்கிறது இந்த
ஆணாதிக்க சமூகம்.

ஆணாதிக்கத்தின் மேல்
கட்டமைக்கபட்டு இருக்கும்
சம்பிரதாய சடங்குகளை
ஒட்டு மொத்தமாக
ஒழிக்க முயலவேண்டும்.

அதற்கு இடைபட்ட காலத்தில்
துணிந்து குடும்ப நிகழ்வுகளில்
இப்படிபட்ட  முயற்சிகளை
எடுக்கும் பெண்களை தலை
வணங்கி  வாழ்த்துவோம்...!













Saturday 26 August 2017

காமம்...



ஒளிந்து கொண்டு
இருப்பதை
மறைக்க முடியாத
யதார்த்தம்.

அதன்.
தொடக்கம்
காதல்...!

முடிக்கும்
காமம்.
.