Friday 28 June 2013

எரிதழல் ......!

மௌனமாய் இருக்கும் நீ ...
அடுத்த  நொடியிலே 
உரக்க பேசுகிறாய்  !
எவன் தீட்டினான் உன்னை  ?
எரிதழல்  மூட்டினான் 
என்  நெஞ்சில் ......!

Sunday 23 June 2013

கேடயமல்ல ...........தாலி !

    






                                       தாலி என்னை   போருத்த வரை அது பாதுகாப்பு அப்படின்றதெல்லாம் சுத்த பொய் அது தேவை இல்லைஎன்று ஒரு கணவனும் மனைவியும் சேர்ந்து அல்லது மனைவி மட்டுமோ முடிவு செய்வது சரியானது ! பெண்ணைப்போல் ஆணுக்கு எந்த தாலியும் இருப்பதில்லையே அடையாளத்துக்கு பிறகு ஏன் அவளுக்கு மட்டும் தாலி ? 
                       தாலி போட்டு இருந்த நிறைய பெண்ண்கள் பாது காப்பாய் இருப்பார்கள் என்பதில் உண்மை இல்லை ,பாதிக்கப்பட்டு இருகிறார்கள் ஆகவே தாலி ,கொலுசு மெட்டி எல்லாம் ஆணாதிக்க அடையாளமே ! 
                                அதே நேரத்தில் தாலியை ஏற்றுக்கொள்வதும் ,எடுத்தெரிவதும் அவளுக்கான உரிமை என்று புரிந்துகொள்ளவேண்டும் ! எடுத்துவிடு என்று வாதிடுவதும் ,எடுக்காதே ...எடுத்தால் ..? பூலோகமே தாங்காது என்பதெல்லாம் வெட்டித்தனமான வாதம் !





.முகமூடிகளின் முகநூல்.....!



ஆட்சியில் இருப்பவர் அம்மாவா ?
ஆயாவா ? என்பதல்ல பிரச்சனை ......
செய்திருப்பது சரியா தப்பா ?
என்பதுதான் இன்றைய தேவை !

இலவசத்திட்டங்கள் ,
உணவு , காய்கறிகள் ,குடிநீர் !
இவற்றையெல்லாம் கிண்டலடித்து
அரசியலாக்கும் மனோ நிலை
எழைகளுடையது அல்ல ......

எனக்கு தெரிந்து ஏழை எவரும்
முக நூலில் இருப்பதாக தெரியவில்லை !
அப்படி இருநதால் ....?
இப்படிப்பட்ட பதிவுகளுக்கு
பதில் கிடைத்து இருக்கலாம் !

அரசியல் என்றால்
கண்ணை மூடிக்கொண்டு
எதிர்ப்பதல்ல ...........
மாறாக கிண்டலடிப்பதுமல்ல !....
மக்களுக்கான நல்லதை ஏற்பதும்
தவறுகளை சுட்டிக்காட்டுவதுமே !

மது விலக்கு வேண்டும் !
மக்களுக்கான வேலை வேண்டும்
என்பதில் மாற்று கருத்தில்லை !
அதற்காக .................

ஏதும் நடக்கவில்லை என்பதும்
நடப்பவை கூட அரசியல் நாடகமென்று
நையாண்டி செய்வதும் நல்லதல்ல !
நாகரீக அரசியளுமல்ல ..........

நானா ? ஆளும் கட்சிக்காரனுமல்ல...
ஆதரித்து கொடிபிடிப்பவனுமல்ல !
அடிபணிந்து கிடப்பவனுமல்ல ........
தமிழன் !

வார கடைசியை வரவேற்பதும்
வாய்க்கு ருசியாய் உண்டு
வாழ்த்து பரிமாறி கொள்வதல்ல
முக நூல் !

எழைகளுக்கான அரசியலை
எவரும் படிக்கவில்லையே ?
ஏகடியம் பேசுவது
எல்லோருக்கும் தெரியும் !

முக்காடுபோட்ட முகனூலீல்
முகம் தெரியாமல் இருக்கலாம்
முக மூடி கிழிந்து ..........
முடை நாற்றம் மூக்கறுக்கிறதே !








Saturday 15 June 2013

தாயுக்கு பின் தாரமா......... ?



தாய்க்கு பின் தாரம் !! இதைத்தான் சொன்னார்கள் !
------------------------------------------------------------------------

                                                     தாயிக்கு பின் தாரமுமில்லை ,தாரத்துக்கு பின் தாயுமல்ல ! இருவருமே பெண்கள் இருவருமே ஆண்களுக்கு ( மகனாக இருக்காலாம் ,கணவனாகவும் இருக்கலாம் ) சேவை செய்பவர்களே அப்படி இருக்கும் பொது எந்த சேவகன் சிறந்தவன் என்ற வாதத்துக்கே இடமில்லை ! தந்தைக்குப்பின் தமையன் என்று ஏன் சொல்லப்படவில்லை ? அப்படி சொல்லும் அதிகாரம் பெண்ண்களுக்கு இல்லையா ? ஏன் பெண்கள் சொல்லாக்கூடாதா ? ஏனென்றால் ஆணுக்கு பெண் கட்டுபட்டவள் ,

                                                   ஆணுக்கு பெண் அடிமை ,ஆணுக்கு பெண் சேவகம் செய்வதுதான் உலக நியதி ,என்றெல்லாம் இந்த ஆணாதிக்கசமூகம் 'பெண் " என்ற தாயை ,மனைவியை அவளுக்கு தெரிந்தும் ,தெரியாமலும் கட்டுப்பாடு என்ற அடிமை நுகத்தடியில் அவளே கட்டுப்பட்டு கிடக்கிறாள் ,மீறுபவர்களை கட்டிப்போட்டு வைத்திருக்கிறோம் .




Sunday 9 June 2013

" தோட்டி " இது வார்த்தையல்ல ! வாழ்க்கை......

                                                 

                                                தினமும் காலையில் எழுந்த உடனே முகநூல் திறந்து அதில் கடவுள் பிரார்த்தனைப்போல் "நல்லதை நினையுங்கள் ! " நல்லதை செய்யுங்கள் ! " இனிமையாகட்டும் " இப்படி எழுதுவது என் வழக்கம் ! என் முகநூல் நண்பர்கள் என்னை வம்பிழுக்க எதையாவது போட்டு விவாதத்துக்கு இருத்தால் ".ஏன் காலையிலே தேவை இல்லாமல் டென்ஷன் " என ..நான் அவர்களிடமிருந்து "லைக் " மட்டும் கொடுத்துவிட்டு கழண்டுவிடுவேன் !

                                                        குறிப்பாய் காலையில் குறும்படம் பார்ப்பதில்லை ! ஏனென்றால் என்னுடைய இணையர் மிக திறமையான புத்திசாலி அவர் வீட்டு வேலை செய்து கொண்டே என் பதட்டத்தை எளிதில் புரிந்துகொண்டு "ஏன் காலையிலே இது தேவையா ? " ஏன் உடனே விமர்சனம் எழுத வேண்டும் ? கண்டிப்பதல்ல ! கரிசனப்படுவார் . அப்படித்தான் காலை பொழுதும் தவிர்க்க வேண்டும் என நினைத்து மற்றவர்கள் பதிவை மட்டும் பார்ப்பது என முடிவெடுப்பேன் .
                             முகநூல் நண்பர் .திருமதி .மணிமேகலை அவர்களின் பதிவில் நெடுந்தீவு முகிலனின் "தோட்டி " குறும்படத்தை... பதிவேற்றிருந்தார்.இந்த பதிவையும் தவிர்க்கவே முயன்றேன் . ஆனால் அந்த கும்படத்தின் தலைப்பு என்னை அதிர செய்தது .

                                              "தோட்டி " இந்த வார்த்தை என் முகநூல் அறிமுகத்தில் என்னையே புரட்டிப்போட்ட சொற்றொடர் !...................... ஏனென்றால் என் வலைபதிவிற்கு (BLGGER )ஒரு பெயர் வைக்கவேண்டும் என்று முயன்றபோது " தோட்டி " என்று பெயர் வைக்கலாம் என்று நண்பனிடம் சொன்னேன் .. குப்பைக்கூட்டும் தொழிலாளி படத்தோடு வடிவமைக்கவேண்டிய என்னுடைய வலைபதிவு வடிவமைப்பை கேட்டு " நீ அந்த ஜாதிக்காரனல்ல ! குப்பை கூட்டுபவன் தாழ்ந்தவன் ,நீ தாழ்ந்தவனா ? நீயே உன்னை ஏன் தாழ்த்திக்கொள்ளவேண்டும் ? என்று கேட்டு ஏற்க மறுத்துவிட்டார்.

                                                         என் ஆலோசனையை ஏற்று வெளிநாட்டில் உள்ள முகநூல் நண்பர் " தோட்டி " க்கு உதவி செய்தார் என்பது வேறு விஷயம் ! அதன் பிறகு குப்பை கூட்டும் படத்தை எடுக்கச்சொல்லி ஒருசாரார் மல்லுகட்டினர் . முடிவாய் படமில்லாமல் "தோட்டி " தன்னாள் முடிந்த குப்பையை கூட்டிகொண்டிருக்கிறான் .

                                                          " தோட்டி " இது வார்த்தையல்ல ! வாழ்க்கை என்பதை உணர்ந்தேன் . எவ்வளவோ முற்போக்கானவர்கள் என்று காட்டிகொள்ளும் எங்களைப்போன்றவர்கள் இன்னும் " அம்பேத்கர் " என்ற பெயரை இன்னும் எங்கள் வீட்டில் பிறக்கும் குழந்தைகளுக்கு சூட்டமுடியவில்லையே ? அது ஏன் ? இன்னும் எங்கள் ரத்தத்தில் கலந்துபோன சாதிய அணுக்களின் ஆதிக்கமேயொழிய வேறொன்றுமில்லை !

                                                  இந்த சூழலில்தான் திருமதி.மணிமேகலையின் பதிவு " யாரது " என்று என்னை திரும்பிப்பார்க்க வைத்தது. நான் எதிபாத்ததைவிடவும் ,நெடுந்தீவு முகிலனீன் " தோட்டி "இன்னும் ஆழமாகவே பதிவு செய்யப்பட்டுருக்கிறது ! அந்த குழந்தை நட்ச்சத்திரம் பசியை " (ஆகாய )தோட்டியை " விரட்டி வென்று இருக்கிறாள் !

                        ஈழத்தின் மிச்சசொச்ச ரத்தத்துளிகளின் கறைகள் போகவில்லை ! இன்னும் நிறைய "தோட்டிகள் " வரவேண்டும் ! விருதுகளுக்கல்ல.......ஈழ விடுதலை விழுதுகளுக்காக ......!






                             யாழ் தமிழ் மகள் மணிமேகலை தயாரிப்பில் நேற்று யாழ் இந்துக்கல்லூரி குமாரசாமி மண்டபத்தில் வெளியிடப்பட்டட நெடுந்தீவு முகிலனின் 5வது குறும் படம் .தோட்டி"