Thursday 12 September 2013

.உறுப்புகளற்ற...அவள் !









வெட்டப்பட்ட ஆடுகளைப்போல்
இங்கு எல்லாமே வியாபாரம்தான் !

கிழிக்கப்பட்ட சதை விற்பனையாகிறது,
அவள் சம்மதமில்லாமலே .!

அத்துமீறல்கள்....
அரங்கேற்றப்படுகிறது !

உடல் மீது அவர்களும் ,
உள்ளத்தை ஊடகங்களும்...!

சிந்திய ரத்தமும் ,துணியும்
சிறுத்தைகள் ஆராய்கின்றன '

முறத்தால் அடித்தவள் ...இன்னும்
முடிந்துபோகவில்லை !

வருவாள் ....உறுப்புகளற்ற அவள்
ஆயிரமாயிரமாய் ........!

கத்திமேல் நடப்பவர்கள் ...!

                                         
                        விமர்சனம் என்பதை புத்தி ஜீவிகளாய் தெரிபவர்கள் கூட " குறை " சொல்வதாக தமிழில் வேறு அர்த்தப்படுத்திக்கொள்கிறார்கள் ..... உங்கள் மீது ,உங்கள் கருத்தின் மீது விமர்சனம் வைப்பவர் யார் என்பதை கூடவா பார்க்கவேண்டாமா ? உங்கள் நண்பர்கள் உங்கள் மீது அக்கறை உள்ளவர்கள்.... அவர்கள் உங்கள் மீது வைக்கும் விமர்சனம் உங்களை வீழ்த்த அல்ல.... வீழ்ந்துபோகாமல் காப்பதற்கே ! என்பதைகூடவா புரிந்து கொள்ள முடியவில்லை !.

                               எல்லோராலும் எல்லோரையும் புகழ முடியும் ....ஆனால் ஒருவரின் கருத்தின் மீது சுட்டிக்காட்டுவது, மாற்று கருத்து வைப்பது அவ்வளவு சுலபமல்ல....அவ்வளவு எளிமையானதுமல்ல ....... அப்படி சுட்டிக்காட்டும்போது எதிரே உள்ளவர் இணைபிரியா நண்பராகவோ ? அவர் தயவில்தான் வாழவேண்டும் என்ற நிலையில் உள்ள அதிகாரியோ ? அல்லது அவரிடம் எதையாவது எதிர்பார்ப்பவராகவோ , தான் நேசிக்கும் கட்சியாகவோ , அமைப்பாகவோ இருக்கும்போது ...... எங்கே..? சுலபமாக சுட்டிக்காட்டமுடியுமா ? என்ன ? எனவே புகழ்வதைக்காட்டிலும் விமர்சன ரீதியாய் சுட்டிக்காட்டுவது கத்திமேல் நடப்பவை ! அதில் வீழ்ந்து இரண்டாக துண்டாடப்பட்டவர்கள் ஏராளம் .....
                                                 
                             அதே நேரத்தில் அந்த கத்தியில் சின்ன காயம் கூட இல்லாமல் விமர்சனத்தை முன்வைப்பவர்களும் சில நேரங்களில் தப்பிப்பதில்லை ..தன் நலனைவிடவும் மற்றவர்களின் நலனே அடிப்படை என்ற கண்ணோட்டத்தோடு , முன்வைப்பவர்களே அதிலிருந்து தப்பிகின்றனர் ..". சரியான விமர்சனம் " என்பதற்கு என்னதான் அளவுகோல் ? "மக்கள் "தான் அளவுகோல் ! மக்களென்றால்.....? எந்த அடையாளமும் இல்லாத "வெகு மக்கள் " இவைகளை உள்வாங்கியவர்கள் எதற்கும் தயங்காமல் ...எவருக்கும் பயப்படாமல் விமர்சனத்தை முன்வைக்கின்றனர் .

உயிரோவியம் ; மணிவர்மா !

Wednesday 4 September 2013

மாதா -பிதா -- குரு ......தெய்வம் !






செப்டம்பர் --5 ஆசிரியர் தினம் !
----------------------------------------------------------
வெளியே பயிரை மேயலாமா ?
---------------------------------------------------------------

மாதா -பிதா -- குரு ......தெய்வம் ! .....உண்மையா ?
-----------------------------------------------------------------------------------------

                                         புதுச்சேரி மாநிலம் பாகூர் அடுத்துள்ள குக்கிராமம்தான் இருளன் சந்தை ! அந்த ஊரில் உள்ள ஆரம்பபள்ளியில் 5ஆம் வகுப்பு வரை மாணவ -மாணவிகள் படிக்கிறார்கள் ! அந்த பள்ளியில் ஆசிரியராக பணியாற்றும் அரிக்கிருஷ்ணன் (வயது -57 ) என்பவர் கடந்த ஒரு மாத காலமாக தன் வகுப்பில் படிக்கும் 3ஆம் வகுப்பு மாணவிகளை நிர்வாணப்படுத்தி தகாத இடங்களில் கில்லியும் , துன்புறுத்தி வந்துள்ளார் . வலி தாங்க முடியாத குழந்தைகளில் ஒன்று தன் வீட்டிலில் தாயார் குளிக்க வைக்கும்போது விளக்க தெரியாமல் விளக்கி இருக்கிறது !
ஆவேசம் கொண்ட மக்கள் வீதியில் இறங்கி போராட..... வழக்கமாக காவல்துறை வருகை ! வழக்கு ...கைது .... 15 நாட்கள் சிறை ......இன்னும் கொஞ்ச நாளில் எல்லாம் மறந்து போகும் ! வேறு ஒரு பள்ளியில் அந்த ஆசிரியர் பணியாற்றலாம் !
                                         # ஏதோ இப்போதுதான் இப்படி ஆசிரியர்கள் செய்வதாக ...கருதக்கூடாது .......இவையெல்லாம் வழக்கமான ஒன்றுதான் ! இப்போதான் இவையெல்லாம் வெளியில் பேசப்படுகிறது ! அவ்வளவே....! என்றெல்லாம் வெளிப்படையாகவே பேசப்படுகிறது ! ..... ஆசிரியர்களில் எல்லோருமே அப்படித்தான் என்று பேசவில்லை ! ஒரு ஆசிரியர் செய்தாலும் தெய்வத்துக்கு இணையாக மதிக்கப்படுகின்ற " குரு " இப்படி செய்யலாமா ?
                                         இந்த உலகில் யாரை நம்புவது ? யாரை நம்பாமல் இருப்பது ? 3 ஆம் வகுப்பு படிக்கும் குழந்தை எந்த மாதிரியான சிந்தனையில் பள்ளிக்கு அனுப்பபட்டிருக்கும் ? அந்த வெள்ளை குருத்து அந்த ஆசிரியனின் மனதை கெடுத்துவிட்டாள் என்று எவராலும் சொல்ல முடியுமா ? இப்படியெல்லாம் நடந்து கொண்டிருக்க என்னதான் காரணம் ? இவையெல்லாம் வெளியில் தெரியாது ...அப்படியே தெரிந்தாலும் ஏதும் செய்துவிட முடியாது ! என்ற அலட்சியமான மனோ நிலை ! 
                                ஆணுக்கு வெறி வந்துவிட்டால் குழந்தையோ ? பெரியவளோ ? குமரியோ ? கிழவியோ ? எதையும் பார்ப்பதில்லை ! அப்படித்தானே ? இதுவும் ஆணாதிக்க வெறிதானே ? குழந்தையாக இருந்தாலும் ,குமரியாய் ,கிழவியை இருந்தாலும் அவள் பெண் என்ற காரணத்தாலே அவளை உடமையாய் பார்க்கப்பட்டு , உடமையை கைப்பற்றும் மனோ நிலை..... ஆணாதிக்க வெறியல்லாமல் வேறென்ன ?
                                            அரபு நாடுகளில் அமலாக்கும் கடுமையான சட்டங்களை நமது நாட்டிலும் போடப்பட்டால் இப்படிப்பட்ட குற்றங்களை தடுத்துவிடலாம் என்றெல்லாம் புத்தி ஜீவிகள் ஆலோசனை சொல்கிறார்கள் . ஒரு தலையை வெடி வீசிய பின்பு அந்த நாடுகளில் அந்த வகையான குற்றங்கள் இல்லாமலே போய் இருக்கவேண்டும் ! அப்படிபோய் விட்டதா ? என்ன ? அங்கே மாதத்தில் இரண்டு தலைகளுக்கு மேல் வெட்டப்படும்போது ...அந்த தண்டனைகளால் அந்த குற்றத்தை என்ன செய்துவிட முடிந்தது ! இதையும் கருத்தில் கொள்ளவேண்டும். 
                                            அதற்காக தண்டனைகளே கூடாது என்பதல்ல அர்த்தம் .
பாலியல் குற்றமிழைத்த குற்றவாளி எக்காரணத்தைகொண்டும் வெளியே வரமுடியாதபடி வாழ்நாள் தண்டனை அனுபவிக்கும்படி செய்யவேண்டும் ! அரசும் முழு கவனத்துடன் பெண்கள் - பாலியல் - சமூக குற்றம் தொடர்பான கல்வியை..... ஆரம்ப கல்வியிலிருந்து கொடுக்கப்படவேண்டும் .
                                           - பொது விளம்பரங்கள் - தொலைக்காட்சி -சினிமா போன்ற ஊடகங்களில் பெண்களை கண்ணியகுறைவாய் காட்டாமல் இருக்க கறாரான தணிக்கை முறைகள் கொண்டுவரவேண்டும் ! 
                      குறைந்த பட்சமாக இவையெல்லாமே செய்யாமல் ஆட்சியாளரும் ,சமூகமும் இருக்குமேயானால் ..... பெண் அடையாள ஜீவன்களுக்கு வீடுகளே சவக்கூடமாகவும் , பள்ளிகள் கல்லறைகலாக மாறுவதை எவராலும் தடுக்க முடியாது !