Saturday 22 August 2015

வேறு வழியில்லை...!

வேறு வழியில்லை...!

உலகிலேயே
மிகக்கூரிய கொலைவாள்கள்
வார்த்தைகளாக இருக்கிறன .

நிறைந்த  போதையாகவும்
வார்த்தைகள்  இருகின்றன.

என்னை
மன்னித்துவிடு..!

உன்னை வீழ்த்த
வேறு வழியில்லை.

அந்த இரண்டில் ஒன்றை
பயன்படுத்துகிறேன் ...

Friday 21 August 2015

இலங்கை நாடாளுமன்ற தேர்தல் 2015..!

இலங்கை தமிழ் - மலையக மக்களுக்கு
கைகொடுக்குமா..?
நாடாளுமன்ற தேர்தல் ..!
-------------------------------------------------------------------------
இலங்கை நாடாளுமன்ற தேர்தல் போது
உலகம் முழுவதும் உள்ள தமிழ் மக்களும் ,
மனித உரிமை ஆர்வலரும் உற்று நோக்கி
அதன் முடிவுகளை எதிர் நோக்கி இருந்தனர் .

பெரிய அளவில் அசம்பாவிதம் ஏதுமில்லாமல்
ஜனநாயக முறைப்படியே தேர்தல் நடந்து முடிந்துள்ளது . உண்மையிலே வரவேற்க தக்க
நிகழ்வாகும் .

வியாபார நிறுவனங்களாக மாறிப்போன
மலையக தொழிற்சங்கம் அதன் குடும்ப வாரிசுகள்
தோற்றுப்போய் உள்ளது .தொழிலாளி வர்கத்தின்
அரசியல் விழிப்புணர்வை வெளிப்படுத்தி
இருக்கிறது .

இந்த தேர்தலின் போது ரணில் தலைமையில் உள்ள ஐக்கிய தேசிய கட்சியும் , ராஜபக்‌ஷேவின் ஐக்கிய மக்கள் சுதந்திரா கூட்டணியும் , தேர்தல் வாக்குறுதியாக எதையும் முன் வைக்கவில்லை . மாறாக பெரும்பான்மை சிங்கள மக்களின் தலையாய கட்சி தாங்கள் தான்என்பதையே போட்டிபோட்டுகொண்டு பிரச்சாரம்
செய்தனர் . இன்னும் ஒரு படி மேலே போய்
உள் நாட்டு போரின் போது புலிகளால் தாக்கபட்ட
வாகனங்களை பிரச்சாரத்துக்கு பயன்படுத்தினர் .
இவையெல்லாமே சிங்கள இன உணர்வை தூண்டி
வாக்குகளை அறுவடை செய்தனர் .

சம்பந்தன் தலைமையிலான தமிழ் தேசிய
கூட்டமைப்பும் , தமிழர்கள் வாழும் வடக்கு-கிழக்கு  மாவட்டங்களின் பாதுகாப்பு கேடயமே தாங்கள் தான்
என்று தமிழ் உணர்வை அறுவடை செய்துள்ளது .
அதற்கு மேல் எதையும் முன்வைக்கவில்லை .

 இலங்கை தீவில் வாழும் சிங்கள மக்களும் , சிறுபான்மை தமிழ் - முஸ்லீம் மக்களும்
ஒன்றுபட்டு வாழ எந்த விதமான எதிர்காலத்திட்டத்தையும்,எவரும் முன் வைக்கவில்லை என்பது அரசியல் அய்யோக்கிதத்தனத்தை காட்டுகிறது .

போருக்கு பிந்தைய காலத்தில் ஏதுமற்று
அனாதைகள் ஆக்கபட்ட குழந்தைகள் ,
விதவை பெண்கள் , ஊனமுற்றோர் ஆகியோரின்
நிகழ்காலம் ,எதிர்காலம் குறித்து எவரும்
கண்டுகொள்ளாமல் ஓட்டு பொறுக்குவதிலே
கவனப்படுத்தபட்டார்கள் என்பது வேதனைகுரிய
விடையம்.

அடுக்கபட்ட முட்டையில் அடிமூட்டையாக,
ஒடுக்கப்பட்டோரில் ஓட்டாண்டிகளான...
மலையக மக்களின் ரத்தத்தை அட்டைகளும் ,
உயிரை எஸ்டேட் முதலாளிகளும் உறிஞ்சி
குடித்தால் நடை பிணமாக்கப்பட்டவர்கள்
அரசியல் அதிகாரத்தை நினைத்துகூட
பார்த்ததில்லை .

இன்று...
அதில் மாற்றம் நிகழ்ந்துள்ளது .
அந்த மாற்றம் முழுமையானது
என்று சொல்வதற்கில்லை என்றாலும் கூட
ஏராளமான எதிர்பார்ப்பு இருக்கிறது .

மலையக மக்களின் அடிப்படை வாழ்வுரிமை ,
காணி உரிமை,சம்பள உயர்வு கோரிக்கை
இவையெல்லாம் பெறவேண்டும்
அதை நோக்கி தெரிவு செய்யப்பட்டவர்கள்
வாதாடி ,போராடி பெறுவார்கள் என்று
முழுமையாக நம்புவதற்கில்லை.

மலையகத்தில் தெரிவு செய்யப்பட்டவர்கள்
மலைய மண்ணின் மைந்தர்களாக இருக்கலாம்
ஆனால் அவர்களும் சராசரி மனிதர்களே ..!
அதோடு தொழிலாளி வர்க குனாம்சம் அவ்வளவாக
அவர்களிடம் இல்லை . அதிகாரத்தை பிடிக்க
வேண்டும் என்ற வெறி மட்டுமே இருக்கிறது .
வெற்றிக்கனியையும் மலையக மக்கள் அவர்களிடம் அள்ளிக்கொடுத்து இருக்கிறார்கள் .
பாராளுமன்ற ஜனநாயகத்தில் அவர்கள்  கரைந்து போகாமல் நீடிக்க தொழிலாளி வர்க்கசித்தாந்தம் இருக்கவேண்டும் . ஆனால் தெரிவு செய்யப்பட்ட எவருக்கும் அது இருப்பதாக தெரியவில்லை .

இருப்பினும் தெரிவு செய்யப்பட்ட தமிழ் -  மலையக
பாராளுமன்ற பிரதிநிதிகள் புதிய பாதையில்
பயணிப்பார்கள் என நம்புவோம் ..!
இல்லையேல் இவர்களும் தூக்கி எறியப்படுவார்கள்
என்பது நிச்சயம்.


Friday 14 August 2015

பேசா பொருள் ...!

முகநூலில் வெட்டித்தனமாக
பொழுதுபோக்குவோர்கள்
மத்தியில் பேசா பொருள் மீது
பேச வைப்போர் ஒரு சிலரே...

பொருளாதார ஏற்றத்தாழ்வினால்
அதிகம் பாதிக்கப்படுவது ...யார்...?
என்று சமீபத்தில் நல்லதொரு விவாதப்பொருள் வைத்துள்ள என் முகநூல் நண்பர் iskandar barak அவர்களை பாராட்ட வேண்டும் .

என்னுடைய பார்வையில் ...
பொருளாதார ஏற்றத்தாழ்விலிருந்து
அதிகம் பாதிக்கப்படுவது பெண்
என்பது மட்டுமல்ல ....!
அதிலிருந்து விடுவித்துக்கொள்ள
போராடும் சக போராளியும் பெண் ...!

பெண்ணாக பிறந்ததிலிருந்து
 சமூக - பொருளாதார பாதிப்பிலிருந்து
உயிர்வாழ. ஆண்களை காட்டிலும்  தொடர்ந்து போராடிகொண்டிருப்பவள் பெண் .. !

இன்று சமூகத்தின் பார்வையில் சமூக
பாதிப்பிலிருந்து விடுதலை பெறுவதற்கு
உள்நாட்டிலோ , அது வெளிநாட்டிலோ
கூடுதலாக உழைப்பவர்கள்  ஆண்கள்
மட்டும்தான் என்று எல்லோரும்
நினைக்கிறார்கள் அது முழுவதும்
உண்மையல்ல ...!

குடும்ப சுமையை தூக்கிச்சுமக்க
சக ஆண் உறவுகள் இல்லாத போது...?
உள்நாட்டிலும் வெளிநாட்டிலும்
எத்தனையோ பெண்கள் வேலை செய்து
தன் குடும்ப பொருளாதார ஏற்றத்தாழ்வுகளை
போக்க பாடுபட்டு வருகிறார்கள் என்பதை
எவரும் மறுக்கமுடியாது .

ஆண் ...ஆணை மையப்படுத்தியே
இந்த சமூகம் இயங்குவதால் ஆணின்
உழைப்பும் ,ஆணின் சுமையை மட்டுமே
கணக்கில் எடுத்துக்கொள்ளப்படுகின்றது .

பெண்ணின் சுமைகளும் ,
பெண்ணின் உழைப்பும் கணக்கில்எடுத்துக்கொள்ளப்படவில்லை.
ஆணின் உழைப்புக்கு  கூலியாகவும் ,
மாதச்சம்பளமாக பெறப்படுவது மட்டுமே
கணக்கில் எடுத்துக்கொள்ளும் சமூகம்
காலையிலிருந்து இரவு வரை குடும்ப
வேலைகளில் உழைப்பதை கண்டுகொள்வதுமில்லை...
பண மதிப்பீட்டில் கணக்கிடுவதுமில்லை...!

அது மட்டுமல்ல ...
வரதட்சணையால் பெண்ணும் ,
பெண் வீட்டாரும் ஒட்டுமொத்தமாக
பாதிக்கபடுகிறார்கள் .வரதட்சணை
பெறும் வீட்டாருக்காக ...வரதட்சணை
கேட்பதும் பெண் ....! தன் மகனுக்காக
கேட்கப்படும் வரதட்சனையால் சிறு
பயனை கூட அடையாமல் அவபெயரை
மட்டுமே சுமப்பவள் பெண் என்பது
பரிதாபத்துக்குரிய விஷயம் .

ஆணாதிக்க சமூகத்தின் அத்தனை
சிலுவைகளையும் சுமந்துகொண்டு
ஆண்களை வாழவைப்பவள்
பெண் ...!

இவையெல்லாமே
விவாதிக்கபடாமல்...?
ஆணின் மனநிலையில்
மாற்றம் வர வாய்பில்லை...!


Saturday 8 August 2015

முகநூலில் .....!



நண்பர்கள் ...
நண்பர்களாக இருக்கவேண்டும் ..!
------------------------------------------

பரபரப்பு....
அரசியல்..பற்றியோ...
ஆட்சி மாற்றம் பற்றியோ...
அன்றாட நிகழ்வு பற்றியோ...
 தமது பக்கத்தில் பதிவிடும்  போதும்..

அதிகமாக...
உணர்ச்சிவசபடுகிறார்கள் ..!
அது அவர்கள்  மனதுக்கு மட்டுமல்ல ...
உடலுக்கும் நல்லதல்ல ...
இது  கிண்டல் அடிக்க அல்ல...!
உண்மை ...
இது ஏதோ ஒரு சிலர் மட்டுமல்ல ...
இவர்களைப்போல பலர் இருக்கிறார்கள் .

உண்மையாக ...
ஒளிவு மறைவு இல்லாமல் பேசுகிறவர்கள்
அப்படி பேசுவதாலேயே...
அவர்கள் நினைப்பதலேயே ....
 அத்தனையும் சரியென்று நினைக்கிறார்கள் .
அவர்கள் காட்டும் பாதையில்
பயணிக்கவேண்டும் என வாதிடுகிறார்கள் .

மாற்று கருத்துக்கோ ...
மாற்று சிந்தனைக்கோ ...
இடமில்லை என்பது போல பேசுவதும்,
சமூக விரோதியைப்போல சித்தரிப்பதும்
சகிக்க முடியவில்லை .

மாற்று கருத்துக்கு காதுகொடுப்பதும்,
மாற்று சிந்தனையை ஆக்கபூர்வமாக
எதிர்கொள்ளும், விவாதிப்பது
 சரியான பார்வை ..!
இவைகள் ....முகனூலில் உள்ள
படித்தவர்களிடமும் கூட இல்லை.

விஞ்ஞான ரீதியாக எல்லாத்துக்கும்
இரண்டு பக்கங்கள் இருக்கிறது ..
என்பதை ஏற்க மறுக்கிறார்கள் .....

ஒரு கருத்தின் மீதோ..
நிகழ்வின் மீதோ எதிரும் புதிருமான கருத்து
வந்தால்தானே...?
எது சரி என்று ஆய்வு செய்ய முடியும் .

 நான் நினைப்பதைத்தான்
மற்றவர்கள் நினைக்க வேண்டும் என்பதும் ,
நான் எழுதுவதைத்தான மற்றவர்களும்
எழுத வேண்டும் என்று நினைப்பது எப்படி சரியாகும்...? சமமாகும் ...?....

நம்மோடு ...
ஓரளவுக்கு ஒத்துபோகிறவர்களோடு தான்
ஒத்து போகமுடியும் .மறுப்பதற்கில்லை .
அதற்காக....
நமக்கு சரி நிகர் சமானமாக
யாருமே இல்லை.....என்ற முடிவில் பேசுவது
எழுதுவது முறையற்றது .

இவையெல்லாமே
முக நூல் நட்பை வளர்க்காது.
என்பதை சுட்டிகாட்ட விரும்புகிறோம் .
கண்மூடித்தனமாக ...
எனக்கு அது பற்றி கவலை இல்லை
என்போரை எதில் சேர்ப்பது...?
விடுவிப்பதே ....நலம்


மன்னிப்பு ..!

மன்னிப்பே ..!
உம்மை மன்னிப்போம் .. ! !
--------------------------------
மற்றவர்களுக்கு ஏற்படும் பாதிப்பில் கருத்து
சொல்வதில் தப்பில்லை . ஆனால் அதே பாதிப்பு
தனக்கு வரும்போது உங்களால் கருத்து சொல்ல
முடியுமா..?

இந்த கேள்வியில் இருந்துதான் எல்லா நியாயங்களும் மறைக்கப்பட்டு சதைக்கு சதை,
ரத்தத்துக்கு ரத்தம், பழிக்கு பழி. என்ற
காட்டுமிராண்டித்தனம் நெஞ்சில் அறயப்படுகிறது .

மன்னிப்பு என்பது அகராதில் ஏற்றப்பட்டுள்ள
வெறும் எழுத்தல்ல ..! மன்னிப்பதும் ,மன்னிப்பை
பெறுவதும் எந்த மிருகங்களும் ,பறவைகளும் செய்வதில்லை . மனிதர்களால் மட்டுமே செய்ய கூடிய மகத்தான தியாகம் .

அந்த தியாகத்தை நீங்களோ..?நானோ..?
அவ்வளவு எளிதில் செய்துவிட முடியாது.
அதற்கு பக்குவமும்,பயிற்சியும் தேவை.
அதை மடங்களும் , மதங்களும் செய்ய
முடியாமல் தோற்று போய்விட்டன .