Sunday 30 October 2016

படைப்புகள் ...!





உடல் அவயங்கள் பளிச்சென்று
தெரியும் படியான படைப்புக்களை
கைதேர்ந்த படைப்பாளிகளால்
மட்டுமே சாத்தியமாகி இருக்கிறது .
அஜந்தா குகை ஓவியங்களும் ,
எல்லோரா சிலை படிமங்களும்
மனிதர்களின் எண்ணங்களின்
பிரதிபலிப்பே ...


பொதுவாக சிற்பிகள்
சிலைகளாக வடிக்கும்போதும் ,
ஓவியனின் படைப்புகளும்
மனதை சுண்டி இழுத்துவிடும் .
சிலைகளும் ஓவியங்களும்
மனித மனங்களை சிதைகிறது ,
நிஜ மனிதர்களைப்போல
வசீகரிக்கிறது . அதில் சிக்குண்ட
மனிதர்கள் அதற்கேற்பவே அது பற்றிய
விவாதத்தையும் எழுப்புகிறார்கள் .
ஓவியங்களும் சிலைகளும்
மனிதர்களை காட்டிலும் காட்டிலும்
உரக்க பேசுகிறது .அதன் உக்கிரம்
தாங்காமல் மனிதர்கள் தகிக்கிறார்கள் .


அவர்ளின் மனதை சிதைப்பதனால்
அதன் தாக்கத்தை அவரவர்களின்
மொழியில் ஆபாசம் என்றும் ,
அழகு என்றும் , உச்சரித்துக்கொண்டே
இருக்கிறார்கள் . ஆபாசம் என்பதை
தவறென்றோ ...? அழகு என்பதை
சரிஎன்றோ விவாதிக்க வரவில்லை .


ஒரு படைப்பாளியின் படைப்பு
பேசா மடந்தைகளை பேச வைத்து
இருக்கிறது . எழுதா மனிதர்களை
எழுத வைத்து இருக்கிறது . இனி வரும்
சமூகத்தையும் அவைகள் பேசவைக்கும்
சாகா வரம் படைத்தவைகள் .





Thursday 27 October 2016

மாற்றம் ...!





ஒரு ஆண் பெண்ணிடமும் ,
பெண் ஆணிடமும்
இவர் இல்லாமல் ..
இனியொரு வாழ்க்கை இல்லை
என்றே நினைக்கிறோம் .

அப்படியொரு எல்லைக்கே
போய் விடுகிறோம் . அப்படி
போவதத்திற்கு அவர்களின்
அன்பும், அணுகுமுறையும்
என்றே நம்புகிறோம் .

அது பொய்யாகிறபோது...
துரோகத்தின் உச்சம் என்றே ,
அனைத்தையும் இழந்து ...
மிருகமாகிறோம் . அங்குதான்
மனிதனாகவேண்டும் .

எதற்கும் மாற்று உண்டு .
எதற்கும் மாற்றமும் உண்டு
மாற்றும் ,மாற்றமும் நிச்சயம் .
அனைத்துக்கும் பொருந்தும் என்றால் ...
நம்பிக்கை மாறி தன்னம்பிக்கை
ஆகவேண்டும் .


Wednesday 26 October 2016

தீபாவளி ...



ஆட்டுக்கறி மட்டுமே போதும் ,
வாத்துக்கறி வேண்டாம் என்று
அம்மாவின் விடாப்பிடி வார்த்தையில் 
தொடங்கும் சண்டை ....!
அப்பாவின் வைராக்கியம்
வெற்றி பெற்று விடும் .
ஒரே நாளில் செலவு செய்ஞ்சா ...?
பட்டாசின் ஓசையைவிட
அம்மாவின் அலறல் ...
எல்லாம் இருந்தும் ,
அம்மா இல்லாமல்... 
ஒவ்வொரு தீபாவளி 
பட்டாசு வெளிச்சத்திலும் ,
இருண்டு கிடைக்கும் மனசு ...!

காதல் ...!

 



கடையில் விற்கும் சரக்கல்ல ...
கொடுத்த உடனே கிடைக்க ...
அது மனசு ...!
நிறையபேருங்க
உடலை வாங்குகின்றனர் .
பிணத்திடம் தழுவ ...!
மனுஷன் ஒரு மனுஷியோடுதான்
உள்ளத்தில் ஸ்பரிசிக்க முடியும் .

Monday 24 October 2016

அடுத்த தலைமுறை...





கடந்த காலங்களில் ...
நாம் நிறைய கடிதங்கள்
எழுதிஇருக்கிறோம் .
அதை இன்று எடுத்து படித்தால்
எவ்வளவு இனிமையாகவும் .
கடந்தகால நினைவுகள்
நமக்கு ஞாபகத்துக்கு வருகின்றது !

அதே வேளையில் ...
அன்றைய மனோ நிலையும் நன்கு புரியும் .
ஆனால் இன்று அப்படி இல்லை .
எல்லாம் காதோடு ,,....
பார்வையோடும் போய் விடுகிறது .

அப்படி இருக்கும் பொழுதும்
சற்று ஆறுதலான விஷயம்
வலைதள பதிவுகள் .
அதில் கூட நட்பை வளர்க்கும்
விதமாக இல்லாமல் பொழுது போக்கவும் ,
வேறு சில தேடுதளுக்காகவுமே
சிலருக்கு இருக்கிறது .

அதனால்...
எதையும் தேடக்கூடாது என்பதல்ல ........
அதற்காக அதுவே முழு நேர
வேலையாகிவிடக்கூடாது .
நம் வலைதள பதிவுகளை

நமது குடும்பத்தார் பார்க்க நேரிட்டால்...?
நம்முடைய நண்பர் பட்டியலில்
சிலர் இணைந்ததனாலேயே
எதை வேண்டுமானாலும் ,
எப்படி வேண்டுமானாலும்
என்று நினைப்பது சரியில்லை
என்று கூட தெரிவதில்லை .

யாரிடம் எதை பேசுகிறோம்
என்ற வரம்புகளும் சிலருக்கு
தெரிவதில்லை !
அதை நாம் கற்று கொடுக்கவும்
முடியாது !

வெட்டிக்கூச்சல் போடும்
ஊடகங்கள் ".சமுக வலைதளத்தில் நாம்"
என்ற தலைப்பில் டிவியில்
ஒரு கலந்துரையாடல் கொடுங்கள் !
வலைதளத்தில் நாம் எப்படி
பயன்படுத்த வேண்டும் என்பதையாவது
தெரிந்து கொள்ளட்டும் !

அதேபோல் நமது தலை முறையில் தான்
இப்படி பட்ட புரிதல் இருக்கிறது !
அடுத்த தலைமுறையில் இவைகள்
மாறும் என நம்புகிறேன் .

புதியவர்கள் ...





கடந்த காலங்களில் ...
நாம் நிறைய கடிதங்கள்
எழுதிஇருக்கிறோம் .
அதை இன்று எடுத்து படித்தால்
எவ்வளவு இனிமையாகவும் .
கடந்தகால நினைவுகள்
நமக்கு ஞாபகத்துக்கு வருகின்றது !

அதே வேளையில் ...
அன்றைய மனோ நிலையும் நன்கு புரியும் .
ஆனால் இன்று அப்படி இல்லை .
எல்லாம் காதோடு ,,....
பார்வையோடும் போய் விடுகிறது .

அப்படி இருக்கும் பொழுதும்
சற்று ஆறுதலான விஷயம்
வலைதள பதிவுகள் .
அதில் கூட நட்பை வளர்க்கும்
விதமாக இல்லாமல் பொழுது போக்கவும் ,
வேறு சில தேடுதளுக்காகவுமே
சிலருக்கு இருக்கிறது .

அதனால்...
எதையும் தேடக்கூடாது என்பதல்ல ........
.அதற்காக அதுவே முழு நேர
வேலையாகிவிடக்கூடாது .
நம் வலைதள பதிவுகளை
நமது குடும்பத்தார் பார்க்க நேரிட்டால்...?

நம்முடைய நண்பர் பட்டியலில்
சிலர் இணைந்ததனாலேயே
எதை வேண்டுமானாலும் ,
எப்படி வேண்டுமானாலும்
என்று நினைப்பது சரியில்லை
என்று கூட தெரிவதில்லை .

யாரிடம் எதை பேசுகிறோம்
என்ற வரம்புகளும் சிலருக்கு
தெரிவதில்லை !
அதை நாம் கற்று கொடுக்கவும்
முடியாது !

வெட்டிக்கூச்சல் போடும்
ஊடகங்கள் ".சமுக வலைதளத்தில் நாம்"
என்ற தலைப்பில் டிவியில்
ஒரு கலந்துரையாடல் கொடுங்கள் !
வலைதளத்தில் நாம் எப்படி
பயன்படுத்த வேண்டும் என்பதையாவது
தெரிந்து கொள்ளட்டும் !

அதேபோல் நமது தலை முறையில் தான்
இப்படி பட்ட புரிதல் இருக்கிறது !
அடுத்த தலைமுறையில் இவைகள்
மாறும் என நம்புகிறேன் .

ஆண்மை .. .. !








#ஆண்மை என்பது மூக்குக்கும் கீழே
இருக்கும் முடியை முறுக்கி விடுவதல்ல .. .. ..
ரணங்களையும் , வலிகளையும் ,
தாங்கிக்கொள்ளும் மனமே ..ஆண்மை .


இவைகள் ...
ஆணுக்கும் , பெண்ணுக்கும் பொதுவில் இருக்கு.
ஒரு பெண்ணுக்குள். ஆண்மையும் ,
ஒரு ஆணுக்குள் பெண்மையும் ,
ஒளிந்து கிடக்கிறது .......

பெண் பலகீனமானவளா ..?

Tuesday 11 October 2016

1985- ஷாபானு ( 62 ) ...!

மத்திய பிரதேசத்தில் உள்ள
இந்தூர் நீதி மன்றத்தில் (1978
ஆண்டில் தனது கணவனால் 
விவாகரத்து பெறப்பட்ட பிறகு...)
ஜீவனாம்சம் வேண்டி வழக்கு
தொடர்ந்தார்.
1985 - களில் நடைபெற்ற
ஷாபானு வழக்கு தொடர்பாக ...
இஸ்லாமிய நண்பர்கள்
படுமோசமாக விமர்சனம் செய்து வருகிறார்கள் .

விவாதிப்பது நல்லது .
அது ஆரோக்கியமான
விவாதமாக அமைய வேண்டும் .
குறிப்பாக என்னுடைய
நண்பர்கள் பட்டியலில்
பெரும்பான்மையாக
இஸ்லாமிய நண்பர்களே
இருக்கிறார்கள் .
என்னிடமிருந்து
எதோ ஒரு பண்பு
பிடித்து இருக்கலாம் .
நல்லது . என்னுடைய
நண்பர்களுக்கு எப்படி
அவர்களுக்குள் இருக்கும்
கருத்தை வெளிப்படுத்த
உரிமை இருக்கிறதோ
அதுபோல எனக்கும் இருக்கிறது
என்பதை அவர்கள் புரிந்துகொண்டு
என்கருத்தை அவர்கள்
அனுமதிப்பார்கள் என நம்புகிறேன் .
ஷாபானு வழக்கு தொடர்பாக
உங்கள் கருத்துக்கு மாற்று கருத்து
இருக்கிறது ....நண்பரே .
அது தொடர்பாக உங்களுக்கு மட்டுமல்ல .
இந்தியாவில் உள்ள அனைத்து
இஸ்லாமியருக்கும் மாற்று கருத்து இருந்தது .
அடிப்படையில் வயதான ஷாபானுவின் போராட்டம்
ஷரியத் சட்டத்தை எதிர்த்து அல்ல
என்பதை புரிந்துகொள்ள வேண்டும் .
வயதான ஷாபானு ஜீவனுத்துக்கு
கூட ஆதரவற்ற நிலையில்
வேறு வழியில்லாமல் தனது கணவனிடம்
ஜீவனாம்சம் கேட்க்கும் நிலைக்கு
தள்ளப்பட்டார் .
அப்படி ஜீவனாம்சம் கொடுப்பது ஷரியத்தில்
இல்லை என்பதால் ..? ஜீவனாம்சம் கேட்பதே ஷரியத்துக்கு
எதிராளியாக சித்தரிக்கப்பட்டார். ஷரீயத் சட்டம்
அனுமதிக்காதபோது வேறு வழியின்றி
அவர் ஜீவனாம்சம் கோரி நீதி மன்றத்தை
நாடினார் .
அதை அரசியலாக அன்றைக்கு இருந்த ராஜீவ்
அணுகினார் . அதை மனித உரிமையாக ,
வாழ்வுரிமையாக ,கம்யூனிஸ்ட்டுகள்
ஆதரித்தார்கள் . ஷாபானுவுக்கு ஜீவனாம்சம்
வழங்க வேண்டும் என்று நீதிமன்றம்
ஆணை பிறப்பித்தது .
இறுதியாக ...
இன்றைய நிலை அன்று இல்லை .
அன்றைய நிலையை
இன்றைய நிலையோடு
இணைத்து பேசுவது முறையன்று ...!




யாராவது வாருங்கள் ...

என் உடலை விற்ற முடியவில்லை 
ஆண் என்பதால் ...

உழைப்பை விற்றக முடியவில்லை 
கிழடு தட்டுப்போனதால் ...

பொய்யை விற்றக முடியவில்லை 
யதார்த்தத்தை பேசுவதால் ...

கருணை கொலை செய்ய 
யாராவது வாருங்கள் .