Sunday 28 April 2013

முகநூல் வரமா ? சாபமா ?



இனிய நண்பர்களுக்கு வணக்கம் !
 
                    சமூக வலைத்தளம் வழங்கி உள்ள மிகப்பெரிய கொடை முக நூல் பக்கங்கள் ,இதை சொல்லும் போது எல்லோருக்கும் ஆச்சரியம் இருக்கலாம் ! என்ன நேரத்தை போக்க பயன்படும் இதை போய் இவ்வளவு உயர்த்தி பேசுகிறாரே என்று கூட நினைக்கலாம் உண்மைதான் , அது ஒரு சிலருக்கு ! அதை ஆழ்ந்து நோக்கும் போது தான் நம்மால் புரிந்து கொள்ள முடியும் .

                                  அறிமுகமே இல்லாதவரை ஒருவரை நேரே போய் அறிமுகம் செய்ய முடிகிறதே , "உருவு கொண்டு எள்ளாமை " என்ற குரலுக்குகேற்ப முகம் தெரியாத ஒருவரின்..... ரசனை ,அவரின் இடுகையை வைத்தே அவரை நண்பராக்குகிறோமே இவையெல்லாமே..................புதுமையானவை !

                     இவைகளெல்லாம் ஆச்சரியத்தை கொடுக்கவில்லையா ? தாம்தான் வீராதி வீரன் ! சூராதி சூரன் ! என்று நினைப்பவறேல்லாம் இங்கே வந்த பிறகு தான் அவர்களின் அறியாமையை உணர்த்தப்படவில்லையா ? அதுமட்டுமல்ல "உன் நண்பன் யார் என்று சொல் ! உன் யோக்கியதை என்ன என்று சொல்கிறேன் " என்ற ஆங்கில சொலவடையைப்போல் புதியவர்களை இணைக்கும் போது நம்முடைய பழக்கத்தில் உள்ள நண்பர்கள் இருக்கிறார்களா ? என்று நாம் பார்ப்பதில்லையா ?

                                         முக நூல் சிலருக்கு வரமாகவும் , சிலருக்கு சாபமாகவும் இருக்கலாம் அதுபற்றி நமக்கு கவலை இல்லை ! அவைகளை பயன்படுத்தி நாம் ஒரு கடுகளவேனும் நம் பார்வையை , நம் அறிவை விசாலப்படுத்தி இருக்கிறோமா ? என்ற கேள்விக்கான பதில் கிடைக்குமானால் முக நூலின் அருமை நமக்கு புலப்படும் ! இங்கே தாழ்வு மனப்பான்மை தகர்த்தெரியப்படுகிறது ! என்னோடு வயதில் ,அனுபவத்தில் , அறிவில் உயர்ந்து நிற்பவர்களைக்கூட எளிதாய் கை குலுக்க முடிகிறதே ....அது மட்டுமல்ல இந்த உலகில் வந்து விட்டாலே ...சுமைகளும் சோகங்களும் சுக்குனூராகிறதே ! ஓவியத்தைப்போல் உறக்கபெசுவதும் , காற்றைப்போல கை குலுக்குவதும் இங்குதானே நடக்கிறது !

                                    நீங்களும் நானும் எங்கோ ஒரு மூளையில் இருந்தாலும் ,கருத்துக்களால் முகம் பார்க்கும் இந்த கண்ணாடியை உடையாமல் பாது காப்போம் !



Friday 19 April 2013

கசப்பான சிகப்பு ..!


  
                                                                    

                                                                           

                                                                            சிகப்பு கொடியும் கையுமாய் வீதியில் போராடிக்கொண்டிருக்கும் மக்களை பார்க்கும் பொது இவர்களுக்கு வேறு வேலையே இல்லையா ? இச்சே ! ...ஆ ஊ இன்ன கொடியை பிடித்து கொள்ளவது கையை உயர்த்தி கத்துவது இதானா ? இவர்கள் கேட்டுத்தான் நடக்கப்போகிறதா? தேவையில்லாமல் கத்திக்கொண்டிருகிரார்கள் .. அதில் கொடுமை என்னான்னா ...இவர்களுக்கு மழையானாலும் கத்தறாங்க ...வெயிலானாலும் ...கத்தறாங்க ..அப்படி என்ன இவர்களால்முடிகிறது ? அதனாலேயே என்னமோ சிகப்புன்னா ....கடும் கோபமும் ...எரிச்சலும் வந்து வந்து போகும் !

                                             உண்டி கண்டு பிடித்ததே இவர்களுக்குத்தான்பா ! பின்ன என்னங்க ,இவங்க போராட நாம காசு கொடுக்கணுமா ? நம்ம காச வாங்கி கிட்டு நம்மளையே திட்றாங்க .......! இதுக்கெல்லாம் ஒரு கட்சியா ? இந்த லட்சணத்துக்கு இவங்க தேர்தலில் வேற நிக்க போறாங்களாம் ?

                                                     இப்படியெல்லாம் பேசிகொண்டிருந்த மக்களோடு மக்களாய் நானும் இருந்து இருக்கேன்.ஒரு முறை ஊர் பஞ்சாயத்தில் நிறு த்தப்படிருந்த ......சலவைக்கு போட்ட துணிய தொலைத்துவிட்ட அந்த பெண் . அவளை ஆளாளுக்கு அடித்தனர் . ,சுருண்டு விழுந்தவளுக்கு தண்ணீர் கொடுக்க கூட ஆளிலில்லை. அப்போது அங்கே வந்த நாற்பது வயதுக்காரன் " ஏன் அடித்தீர்கள் ...கேட்க ஆளிள்ளையா ? என்று துணிச்சலாய் கேட்டார் . கூட்டத்தில் இருந்த அனைவருக்கும் கோபம் வந்து ஆளாளுக்கு குதித்தனர் . கொள்ளாத அவன் இனி அவள் மேல் யாரவது கையை வைத்தால் நடப்பட்பதே வேறு என்றான் சற்று அமைதிக்கு பிறகு வேகமாய் வெளியேறினான்

                                                சிறுவனாக வேடிக்கை பார்த்துகொண்டிருந்த எனக்கு பேராச்சரியம் ! யார் அவர் என்றேன் .அவர் கம்யூனிஸ்ட் என்றார்கள் ...
எப்படி இவரால் முடிகிறது ? போலிஸ் கேட்காததை எப்படி இவரால் கேட்க முடிகிறது ............. புரியவில்லை ! அப்போ ........
என்னை பற்றி கேட்கிறார்கள் இப்போ ! புரியவில்லை என்ன சொல்வதென்று ? சிகப்பு மட்டும் அப்படியே .............கைகள் மட்டும் வேறு !