Sunday 15 October 2017

ஆண்களுக்கும் நிறம் உண்டு...!


இடதுசாரிய கருத்துக்களை
 தாங்கி ஒரு பத்திரிகை 
நடத்துவது என்பது அவ்வளவு
எளிமையான விஷயமல்ல...!

புதுச்சேரியில்1934 ஆம் ஆண்டு
தோழர்.சுப்பையா அவர்களால்
வெளிவந்த "சுதந்திரம்" பத்திரிக்கை தொடங்கி,
தமிழகத்தில் தோழர்.ஜீவா அவர்கள் முன் முயற்சியால்
நடத்தப்பட்ட " ஜனசக்தி " 
வரையில் இடதுசாரி 
சிந்தனையை விதைத்து 
வந்த வரிசையில் "தீக்கதிர்" நாளிதழும் நீங்கா இடம் பிடித்து
வருகிறது.

தீக்கதிர் நாளிதழை ஏறத்தாழ
முப்பது ஆண்டு காலமாக படித்து வருகிறேன். ஒவ்வொரு
வாரமும் தீக்கதிர் இணைப்பு
இதழாக வரும் வண்ணக்கதிரை
கூடுமான வரையில் படிக்காமல்
விடுபடுவதில்லை.

அப்படித்தான் ...
இன்றைய வண்ணக்கதிரையும் புரட்டினேன். அதில் "கரிசனத்திற்கும் நிறம்
உண்டு...!" என்ற சிறுகதையை
ரா. செம்மலர் எழுதி இருந்தார்.

பெண் சமூகத்தின் ஒட்டுமொத்தல்
பாதிப்பும் "ஆனாதிக்க சமூக ஒடுக்கு முறை "என்ற வட்டத்திற்குள் கொண்டு வந்தாலும், பிள்ளைபேறு இல்லாவிட்டால்...மலடி என்ற
பட்டம் மட்டுலல்ல ..அவளுக்கு
நிகழ் காலமும், எதிர் காலமும்
இல்லை என்பதை " வாழ்வின்
வேரே அறுந்து போகப்போகிறது" என்று செம்மலர் எழுதிய வரிகள் பெண்களின் ஒட்டுமொத்த
பிரதிபலிப்பு .

ஒரு பெண்ணின்
பாதுகாப்பு அவளின் 
பருவத்துக்கு ஏற்ப ...
பெண் குழந்தை என்றால்
தந்தை, மணம் முடித்தால்
கணவன், அவள் தாயானால்..
மகனுக்கு, இப்படி எல்லா
நிலையிலும் ஆணை சார்ந்தே
வாழவேண்டும் என்று நிர்பந்திக்கும் ஆனாதிக்க சமூகம் அவள் குழந்தை பெறவில்லை என்றால் மல்டிஎன்று அவமானபடுத்துவதோடு
அல்லாமல் அனாதையாக்கு
ஈவிறக்கமற்ற செயல் என்பதை
இதை தனக்கே உரிய எழுத்து
பாணியில் மிகச்சிறப்பாக எழுதி
உள்ளார்.

"நம்ப ஜாதகத்தை நம்பற அளவுக்கு மருத்துவத்தை நம்பறதில்லை . அதனாலதான்
நம்மூர் கல்யாணம் எதுவும்
மெடிக்கல் டெஸ்ட் செஞ்சு பார்த்து முடிவு செய்யறதில்லை.
வாழ்க்கை துவங்கின பின்னாடி தான் யாருக்கு என்ன குறைன்னே தெரிஞ்சுக்க முடியுது. அந்த குறையோட அவங்களை ஏத்துகிட்டு நேசிக்க
முடியணூம் .அதுலதான் வாழ்வின் உண்மையான அர்த்தம் ,வெற்றி. இரண்டும் இருக்கு."

இப்படி பெண்ணின் எதிர் காலம் குறித்த பாதையை ,பயணத்தை
இந்த சிறுகதையில் வழிகாட்டி
இருக்கிறார்.

அம்பை, ராஜம் கிருஷ்ணன்,
,லலிதாம்பிகை அந்தர்ஜனம், கோதாவரிபாருலேக்கர் ,
அ.பிரேமா என்ற வரிசையில்
ரா. செம்மலரும் தடம் பதிப்பார்
என்றே நம்புகிறேன்.

இந்த சிறுகதைக்கு
"கரிசனத்திற்கும் நிறம்உண்டு...!" என்று சொல்வதை காட்டிலும்,
ஆண்களுக்கும் நிறம்
உண்டு...! என்பதே சரியா
பொருள் படும்.

























Thursday 31 August 2017

மாதவிடாய் கறை....!





பாளையங்கோட்டை பள்ளியில் படித்த
12 வயது குழந்தையின் ஆடையில்
மாதவிடாய்உதிரப்போக்கின் கறை
படிந்ததை கண்டு ஆசிரியர்
அவமானப்படுத்தியதால்
தற்கொலை செய்து செத்துப்போனாள்.

இந்த செய்தி பெரிய அளவில் மக்களின்
கவனத்துக்கு வரவில்லை , உப்பு சப்பில்லா
பிரச்சனையை கூட ஊதி பெரிதாக்கும்
ஊடகங்கள் இதை கண்டு கொள்ளாமல்
போனது ஆணாதிக்க மனோபாவத்தில
அன்றாடசெய்தியோடு ஒன்றாக மறைத்து
இரட்டடிப்பு செய்துவிட்டது கண்டனத்துக்கு
உரியது .

பெண் குழந்தைகளின் இயற்கை
உபாதைகாலங்களில் அவர்களை மனிதாபிமானத்தோடு எப்படி அணுக
வேண்டும் என்று கூட ஆசிரியர்களுக்கு தெரியவில்லை என்பது மன்னிக்க முடியாத குற்றமே.அதோடு பாதிக்கப்பட்டது தன்
 குழந்தையாக இருந்தால் ...?அதே ஆசிரியர் இப்படித்தான் நடந்துகொண்டு இருப்பாரா..?


ஆண் , பெண் குழந்தைகளின் வளரிளம் பருவ மாற்றங்கள் ,மூன்றாம் பாலினம் பற்றிய
விஞ்ஞான பார்வை , பெண் குழந்தைகளின் மாதவிடாய் பராமரிப்பு போன்றவை பள்ளி பாடத்திட்டதில் சேர்க்கப்பட வேண்டும்.
அதுபற்றி வெளிப்படையாக ஊடகங்களில்
பொது விவாததை ஏற்படுத்தவேண்டும்.

அண்ட வெளியில் ஆய்வு என்ற பெயரில் கோடிக்கணக்கான பணத்தை கொட்டி
அழும் அரசுகள், பள்ளியில் படிக்கும் பெண் குழந்தைகளுக்கு. சேனட்டரி நாப்க்கின்ஸ்
கொடுப்பது பற்றிய அடிப்படை அறிவே
இல்லையே என்பது பரிதாபத்துக்குரியது.

பெண் குழந்தைகளை பாதுகாக்க இனியும் தாமதிக்காமல் மன ரீதியாக ,உடல் ரீதியான
 அணுகு முறையை கடைபிடிக்க
ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்க
வேண்டும்.

"கறை நல்லது" என்று விளம்பரபடுத்தி
வியாபாரம்செய்யும் யுக்தியை வியாபாரியும்
அதன் மூலம்கோடிகளை குவிக்கும் ஊடகங்கள் "மாதவிடாய் கறையும் மனிதர்களுக்கு நல்லது..!
என்பதை காட்ட வேண்டும்.












Tuesday 29 August 2017

சரி நிகர் சமானமென...!




கடந்த 27 . 8 .2017 ல் என் ஊரில்
என் சொந்தக்கார பெண்மணி
ஒருவர் 86 வயதை கடந்து
முதுமையால் காலமானார்.

அவருடைய கணவர் 50 களில்
காங்கிரஸ் அரசியலில் இருந்து
பஞ்சாயத்து கவுன்சிலராக
போட்டியிட்டு வெற்றி பெற்றவர்.
பின்னர் விபத்து ஒன்றில்
பாதிக்கப்பட்டு காலமானார்.

இவர்களுக்கு ஆண் வாரிசு பெற
வேண்டும் என்ற முயற்சியில்
எட்டு பெண் குழந்தைகள் பிறந்தும்
அந்த வாய்ப்பு இல்லாலே போய்விட்டது.

அத்துனை பாரத்தையும் தன்
மனைவியின் தலையில்
சுமத்திவிட்டு போய்விட்டார்.
தன் கணவன் இறந்த பிறகு
பிள்ளைகளை படிக்க வைத்து
நல்ல நிலையில் திருமணமும்
செய்து வைத்து விட்டார்.

தான் செத்தால் கொள்ளி
போடுவதற்கு கூட ஆள்
இல்லையே ஏக்கம் அந்த
பெண்மணிக்கு சாகும்
வரை இருந்தது.

மகள் வழி பேரப்பிள்ளைகள்
இருந்தும் அவருடைய இறுதி
ஆசையை அவருடைய கடேசி
மகள் கொள்ளி சட்டியை கையில்
ஏந்திக்கொண்டு மற்ற சகோதரிகளும்
சேர்ந்து சுடு காட்டுக்கு வந்து
அங்கே செய்ய வேண்டிய அத்துனை
சடங்குகளையும் செய்து முடித்தனர்.

இத்தனைக்கும்
கொள்ளி வைத்த மகள்
இளநிலைப் பொறியாளராக
புதுச்சேரி அரசு மின் துறையில்
பணி புரிந்து வருகிறார்.

கொள்ளி போடுவதும், அதற்கு
பின்னால் சொத்துரிமை கோருவதும் ,
சம்பிரதாய சடங்குகளுக்குள்
ஆணாதிக்கத்தை பின்னிபிணைந்து
வைத்து இருக்கிறது இந்த
ஆணாதிக்க சமூகம்.

ஆணாதிக்கத்தின் மேல்
கட்டமைக்கபட்டு இருக்கும்
சம்பிரதாய சடங்குகளை
ஒட்டு மொத்தமாக
ஒழிக்க முயலவேண்டும்.

அதற்கு இடைபட்ட காலத்தில்
துணிந்து குடும்ப நிகழ்வுகளில்
இப்படிபட்ட  முயற்சிகளை
எடுக்கும் பெண்களை தலை
வணங்கி  வாழ்த்துவோம்...!













Saturday 26 August 2017

காமம்...



ஒளிந்து கொண்டு
இருப்பதை
மறைக்க முடியாத
யதார்த்தம்.

அதன்.
தொடக்கம்
காதல்...!

முடிக்கும்
காமம்.
.

Friday 21 April 2017

ஆணாதிக்க சமூகம் என்பது.....?y


ஒரு ஆண் தப்பு செய்வது
பற்றியோ, ஒரு பெண் தப்பு
செய்வது பற்றியோ, இங்கு
பேசப்படவில்லை.

ஆண்டாண்டு காலமாக
எந்த சமூகம் அடக்கப்பட்டு,
ஒடுக்கபட்டு, இருக்கிறது
என்பதே இங்கு விவாதப் பொருள்.

ஆண் சமூகம்தான் பெண்
சமூகத்தை அடக்கி,ஒடுக்கி
வைத்து இருக்கிறது. அதை
தொடர்ந்து கடைபிடிக்க அவளது உடல் மீது புனிதத்தை புகுத்தி ஆதிக்கத்தின் நுகத்தடியில்
பிணைத்து இருக்கிறது.

பெண் சமூகம்
எந்த விதத்திலும் உடைத்து கொண்டுதன்னைவிடுவிக்க இயலாத வகையில்
ஆனாதிக்கம் சமூகம்,
பெண் உடல் மீதும்,
அவள் சிந்தனை மீதும்
கட்டுவரம்புகளை எழுப்பி
சிறையிட்டு வைத்து
இருக்கிறது.

அதை நியாயப்படுத்த கடவுள்
மதம்,சாதி, சம்பிரதாய
சடங்குகளை நிறுவி
ஆணாதிக்க சமூகமாக
கட்டமைத்து இருக்கிறது.

அதையும் மீறி விடாமல்
இருக்கவே புனிதம்
யோனியில் இருக்கிறது
என்று பாடம் நடத்தும்
ஆணாதிக்க சமூகம்,
அந்த புனிதத்தை
அவர்களே
வன்புணர்ச்சியால்
மீறுவதும்,அதை பாதுகாக்க கடமைப்பட்டவர்கள்
பெண்களே என்றும் ,
 அதை காக்க
பெண்கள்தவறியதாகவும்
குற்றம் சுமத்துவதும்
ஆண்டாண்டு கால
ஐயோக்கியத்தனம்.

இதை தெரிந்து கொள்ள,
புரிந்து கொள்ள, இன்றைய
சமூக அமைபில் இருந்து
கொண்டு தெரிந்து கொள்ள
இயலாது.

மனிதன் தோன்றிய வரலாறு,
சமுதாயம் மாறிய வரலாறு,
போன்றவற்றை படிக்க வேண்டும்.

அதை விட்டு ...
இதிகாசங்களையும்,
புராணங்களையும் மேற்கோள்
காட்டுவதும், பேசுவது
சிறுப்பிள்ளைத்தனமானது

Saturday 15 April 2017

1...அம்பேத்கர் ...!

அம்பேத்கர் ....!
ஒரு தலைவரா...?
----------------------------
ஆமாம் என்றோ
இல்லை என்றோ
ஒரு வார்த்தியில்
சொல்லிவிட்டு சென்று விட
முடியாது..

அப்படி செல்ல ஒருவரால்
முடிகிறது என்றால்...?
அந்த இருவருமே வெவ்வேறு
வெவ்வேறு திசைகளில்
பயணிப்பவர்கள்.

அப்படித்தான் நானும் ,
 கடந்த காலத்தில்
இடதுசாரிகளும் கடந்து
போனார்கள் என்பதையே
என்னால் அறுதியிட்டு
சொல்ல முடியும்.

எவரும் துணிந்து தலித் மக்களுக்காக நிற்காத போது....
இடதுசாரிகள்
நாடுமுழுவதிலும் ஒடுக்கப்பட்ட ,
தாழ்த்தப்பட்ட மக்கள் மீது
சமூக ரீதியாகவும் ,
பொருளாதார ரீதியாகவும்
தொடுக்கப்பட்ட தாக்குதலை
தடுத்து நிறுத்த போராடினார்.
ஆனால் அம்பேத்கர் என்ற
தத்துவத்தை நிராகரிதார்கள்.

அம்பேத்கர் என்பது பெயரல்ல
அது ஒரு தத்துவம் என்பது
படித்தும் அதை சமூகத்தோடு
பொருத்தி பார்த்தும் அனுபவத்தோடு அதை தாமும்
அமலாக்க வேண்டும் என்று
உணரும் போது மட்டுமே
அந்த விஞ்ஞானத்தோடு
கைகோர்க்க முடியும்.

இந்த அடிப்படையான புரிதலில்
பொது உடமைவாதிகளுக்கு மாற்றம் வரவில்லை.
இந்த அடிப்படையான கல்வியை
மூத்த தலைமுறைக்கு பயிற்றுவிப்பதோடு,
இளம் தலைமுறைக்கு
பாடமாக்கவேண்டும்.
அதை செய்யாமல்
லால் சலாமும் ,ஜெய் பீம்மும்
இணைய வேண்டும் என்று
எழுதுவதும் ,பேசுவதும் ,
விழலுக்கு நீர் வார்ப்பதற்கு
ஒப்பாகும்.
....................


Tuesday 11 April 2017

காதல் "அதை தொடுங்கள்...ம்



காதல் என்றாலே
எது காதல் என்று கூட
இன்றைய தலைமுறைக்கு
தெரியவில்லை.

ஏனென்றால் காதலின்
தன்மை மாறி வருகிறது.
தொழிற்நுட்ப விஞ்ஞானபுரட்சியில் காதலின்வீச்சு வேறு ஒரு தளத்துக்கு கொண்டு போகிறது.

கடந்த கால காதலின் பங்களிப்பு
சமூக மாற்றத்திற்கு எப்படி
உதவியது என்பது கூட
தெரியாது.

ஆகவே...
காதல் அது தொடாத இயக்கம்
எதுவும் இருக்க முடியாது.
அதில் இடதுசாரி இயக்கம்
விதிவிலக்கல்ல..

திராவிட இயக்கத்தில்
தொட்டு வந்த காதலுக்கும் ,
கம்யூனிஸ்ட்களை தொட்ட
காதலுக்கும் வித்தியாசம்
உண்டு.அதை இன்றைய
தலைமுறைக்கு தெளிவுபப்படுத்த
வேண்டிய அவசர அவசிய தேவை
இருக்கிறது.

அதோடு....
கவுரவம் கொலைகளை
தடுத்து நிறுத்த வேண்டும்
என்பதில் இடதுசாரிகள்தான்
முதலிடத்தில் இருக்கிறார்கள்.
அதை எவரும் மறுப்பதற்கில்லை.

திராவிட அமைப்புகள்
அதை எதிப்பதில் ,கண்டிப்பதில்
நாசுக்காக அணுகி
வருகிறார்கள். 

ஏனெனில்
சாதிய கட்டுமானத்தை உடைக்கும்
காதலை பற்றியும், காதல் திருமணங்களை
பற்றியும் அந்த இயக்கத்தில் உள்ள
பலரிடம் இன்னும் அகலாத சாதிய
பிடிமானமே காரணம்.

காதல் திருமணங்களை
ஆரிப்பது என்ற நிலையில்
இடதுசாரிகளின் நிலைபாட்டில்
குறிப்பாக தலித்துக்களின் காதலை
அங்கீகரிக்கப்பதும்,அதை பாதுகாக்க
போராடுவதையும் கொள்கை
நிலையில் நின்று "காதல் சாதி, மதம் கடந்து அனைத்து உயிர்க்கு பொதுவானது "
என்றே பார்க்கிறார்கள்

ஆனால்...
சாதிய-மதவாத சக்தியோடு
( பெண் பிள்ளைகளை பெற்ற )
வெகு மக்களும் எதிர்க்கிறார்கள்
என்ற ஆழமான கருத்து இருக்கிறது.

அதனால்தான் இடதுசாரி
இயக்கங்கள் வளரவில்லை
என்ற விமர்சனம் வெளியில்
மட்டுமல்ல ..உள்ளேயும் மிச்ச
சொச்சமாய் இருக்கிறது. என்பது
விவாதிக்கப்பட வேண்டியதே.

ஆகவே
மேற்கண்ட பொருள்களின்
மீது காதல் என்ற தலைப்பில்
அடைப்பட்டு கிடக்கிறது.

ஆகவே...
"காதல் "அதை தொடுங்கள்...
பேசுங்கள்...எழுதுங்கள்...
விவாதியுங்கள்..


Thursday 9 March 2017

மாறாப்பு துணி...




ஆணாதிக்கத்தை உருவாக்கிய
மதங்கள்.
அதற்கு சல்லிவேராக பற்றி
வேரூன்றி தழைத்து இருப்பதற்கு
மதஅடிப்படை பழமைவாதிகள்தான்...! என்பதை பெண்ணிய வாதிகள்
புரிந்து கொள்ள வேண்டும்.

அதனால்தான்...
பெண்ணியம் ஆணாதிக்கத்தை
எதிர்த்து போரட தன்னை தகவமைத்துக்கொள்கிறது.

ஆரம்ப காலங்களில் ....
பெண்கள் மார்பகங்களை
மூடும் மாறாப்பு துணி கூடாது
என்று விலக்கி வைத்தது மதம்.

அதை எதிர்த்து "மாறாப்பு துணி
அணியும் போராட்ட" த்தை
பெண்ணியவாதிகள் நடத்தினார்கள்.

இந்த காலத்தில்...
இதற்கு நேர் மாறாக பெண்ணை
அங்கியை போட்டு மறைக்கிறது
மதம். அதை எதித்த போராட்டத்தை பெண்ணியவாதிகள் நடத்துகிறார்கள்
.
அதற்காக....
அரை குறை ஆடை அணியும்
ஆபாசத்தை ஏற்பதாக அர்த்தமல்ல...!

ஆண்களின் கண்ணுக்கு மட்டுமே தெரியும் பெண்களின் ஆடை ஆபாசம் ...பெண்களுக்கு
தெரியவில்லை என்று சொல்லும் ஆணாதிக்க நுட்பம்
விந்தையிலும் விந்தை...!
அதற்கும் ஒரு சில பெண்கள்
பலியாவது அ்றியாமை.

ஆண்கள் அனைவருமே
கண்ணியமானவர்கள் போலவும்,
ஆண்கள் உடுத்தும் ஆடைகள்
ஆபாசமே இல்லாது போலவும்
அது பற்றி பெண்ணியவாதிகள்
வாய்பேசாமல் இருப்பதும் jஅவர்களுக்கே தெரியாமல்
ஆணாதிக்கத்தில் அடிபணிய
வைத்து இருப்பது வினோதம்


Saturday 11 February 2017

தேவரின் ...தங்க ஈட்டிகள் !




விடுதலைப்போராட்ட வீரர்களை
பொதுவில் நினைவுபடுத்தி ...
அவர்களுக்கான விழாவை
அனைத்து சமூகத்தினரும்
கொண்டாட தவறியதன்
விளைவு .....?

அம்பேதகர் - தலீத் தலைவராகவும்
வஉசி - பிள்ளைமார் தலைவராகவும்
வாஞ்சிநாதன் - பிராமணாள் தலைவராகவும்

காந்திஜி - செட்டியார் சங்க தலைவராகவும்

சிரவேலர் - மீனவர் சங்க தலைவராகவும்

முத்துராமலிங்கதேவர் - தேவர் சங்கத்தளைவராகவும்
அந்தந்த சமூக மக்கள் கையில் எடுத்துகொண்டார்கள்
இது யாருடைய தப்பு ?

இதில் எல்லோருக்கும் பங்கு இருக்கிறது
அதைவிடுத்து ..வியாக்கானம் பேசுவது ,
முறையுமல்ல ... சரியுமல்ல ...

காந்திஜியின் வேண்டுகோளை ஏற்று
தேவர் அவர்கள் தலைமையேற்று
அரிஜன மக்களை மதுரை மீனாட்சியம்மன்கோவிலில்
" ஆலைய பிரவேசம் " செய்த
ஒரு மகத்தான தலைவர் முத்துராமலிங்கதேவர் !

அந்தகாலத்தில் வேறு எவர் இதை செய்து இருந்தாலும் ,
நூற்றுக்கணக்கில் தலைகள் உருண்டு இருக்கும் !

இன்று...வரலாறு தெரியாமல் தென்மாவட்டங்களில்
தலீத் - தேவர் இன மக்களும் மாய்த்துக்கொள்வது
தேவருக்கு செய்யும்
 மிகபெரிய துரோகம் !

இன்றைய தலைமுறையினர் வேண்டுமானால்
மரம் வெட்டிகளும் - மகத்தான தேவரும் ஒன்றுதான்
தேவரின் ...தங்க ஈட்டிகள் !என்று வாதிடலாம் ....

வரலாற்றை எவராலும் மறைக்க முடியாது !
அன்று ஆலையபிரவேசம்
 செய்த " தேவர் "
தனக்கு பிற்காலத்தில் தங்க கவசம்
பொடுவார்கள் என்றா ? போராடினார் !

போதும் ...போதும் ... போதும்
இத்தோடு நிறுத்துங்கள்
உங்கள் தங்கமும் -தங்க ஈட்டிகளுமாய்
தேவரை குத்துவதை நிறுத்துங்கள் ...!

மதுரை மண்ணில் ...
இன்னும் சிகப்பு சிந்தனை மரித்துபோகாமல்
இருக்கிறது என்று சொன்னால்
அன்றைய தேவரும் ,தேவர் வழிவந்த
அய்யா நல்லக்கண்ணுவும் 
 "தேவர்"ஜாதி சங்க
தலைவர்கள் இல்லையே ?

விடுதலை போராளிகளை ஓட்டுக்காக
யார்வேண்டுமாலும்....
சங்க உறுபினறாக்கிகொள்ளட்டும் !
படித்த நீங்கள் ...படுகுழியில் வீழாதீர் ...




விடுதலைப்போராட்ட வீரர்களை
பொதுவில் நினைவுபடுத்தி ...
அவர்களுக்கான விழாவை
அனைத்து சமூகத்தினரும்
கொண்டாட தவறியதன்
விளைவு .....?

அம்பேதகர் - தலீத்  தலைவராகவும்
வஉசி - பிள்ளைமார்  தலைவராகவும்
வாஞ்சிநாதன் - பிராமணாள் தலைவராகவும்
காந்திஜி - செட்டியார்  சங்க தலைவராகவும்
சிங்காரவேலர் - மீனவர் சங்க தலைவராகவும்
முத்துராமலிங்கதேவர் - தேவர் சங்கத்தளைவராகவும்
அந்தந்த  சமூக மக்கள் கையில் எடுத்துகொண்டார்கள்
இது  யாருடைய தப்பு ?
இதில் எல்லோருக்கும் பங்கு  இருக்கிறது
அதைவிடுத்து ...வியாக்கானம்  பேசுவது ,
முறையுமல்ல ... சரியுமல்ல ...

காந்திஜியின்  வேண்டுகோளை ஏற்று
தேவர் அவர்கள் தலைமையேற்று
அரிஜன மக்களை மதுரை மீனாட்சியம்மன்
கோவிலில் " ஆலைய பிரவேசம்  " செய்த
ஒரு மகத்தான தலைவர் முத்துராமலிங்கதேவர் !
அந்தகாலத்தில் வேறு எவர் இதை  செய்து  இருந்தாலும் ,
நூற்றுக்கணக்கில் தலைகள்  உருண்டு இருக்கும் !

இன்று...வரலாறு தெரியாமல்  தென்மாவட்டங்களில்
தலீத் - தேவர் இன மக்களும் மாய்த்துக்கொள்வது
தேவருக்கு  செய்யும் மிகபெரிய  துரோகம் !

இன்றைய தலைமுறையினர் வேண்டுமானால்
மரம் வெட்டிகளும் - மகத்தான தேவரும் ஒன்றுதான்
என்று வாதிடலாம் ....
வரலாற்றை எவராலும் மறைக்க முடியாது !
அன்று ஆலையபிரவேசம் செய்த " தேவர் "
தனக்கு பிற்காலத்தில் தங்க கவசம்
பொடுவார்கள் என்றா ? போராடினார் !

போதும் ...போதும் ... போதும்
இத்தோடு நிறுத்துங்கள்
உங்கள் தங்கமும் -தங்க ஈட்டிகளுமாய்
 தேவரை குத்துவதை நிறுத்துங்கள் ...!

மதுரை மண்ணில் ...
இன்னும் சிகப்பு சிந்தனை மரித்துபோகாமல்
இருக்கிறது என்று சொன்னால்
அன்றைய தேவரும் ,தேவர் வழிவந்த
அய்யா நல்லக்கண்ணுவும்  "தேவர்"ஜாதி சங்க
தலைவர்கள்  இல்லையே ?

விடுதலை போராளிகளை  ஓட்டுக்காக
யார்வேண்டுமாலும்....
சங்க உறுபினறாக்கிகொள்ளட்டும் !
படித்த நீங்கள் ...படுகுழியில் வீழாதீர் ...
..........மணிவண்ணன் ...புதுச்சேரி

Monday 6 February 2017

மீண்டும் விடியல்...

சோகத்தையும் ,
சுகத்தையும் கூட
யாரோடையும் பகிர்ந்துகொள்ள
முடிவதில்லை...!

கேட்போர்
நம்மீது எடுத்துக்கொள்ளும் அக்கரை ...
வேறு ஒரு சிந்தனைக்கு
எடுத்து செல்கிறது .

அது சரிதான்
என்று அவர்களோடு
போகவும் முடியாமல் ...

தப்பென்று
உதறித்தள்ளவும் முடியாமல் ...?

மீண்டும்...
மீண்டும்....
சரிகட்டலிலே ஓய்ந்து போனது
வாழ்க்கை...!

 இவர்களைப்போல யாரும் வாழ முடியாது..!
என்று எல்லோரும் பாராட்டும்போது....
எல்லாமே புதைந்து போகிறது..!

மீண்டும் விடியல்....சூரியன் ....
இரவு....நிலா....வானம்....!


Friday 3 February 2017

காலம்...

இப்படியே...
காலமும், நாமும்
கடந்து போகிறோம்.
மாற்றி யோசிக்க முடியாமல்....

எல்லா மாற்றமும்
முன்னோக்கியே
இருப்பதில்லை.
தலை கீழ் பிம்பங்களை
தினமும் சந்திப்பதால்...!


Wednesday 25 January 2017

2017- போராட்டத்தின் குறியீடு...!


எதையும் இழக்காமல்
எதையும் பெறமுடியாது.
ஆனால் ...
மாணவர்களும் -இளைஞர்களும்
இழந்ததுதான் அதிகம்.

அதிகார வர்க்கம் அப்பட்டமாக
அவமானப்பட்டு போனதால்
அதற்கு ஈடாக காவல் நிலைய
தீவைப்பை காரணம் காட்டி
காட்டுமிராண்டி த்தனத்தின்
உச்சகட்ட அரங்கேற்றத்தை
நடத்தி இருக்கிறது.

மாணவர்களுக்கு கிடைத்த பெற்றி
காலத்தால் அழியாமல்
வரலாற்றின் பக்கத்தில் பொறிக்கப்பட்டு விட்டது.
அதற்கு அரசு கொடுத்த வலியும்
மாறாத வடுக்களாகி விட்டது.

இந்த வலிக்கான பிரதிபலிப்பாக
இனி வரும் காலங்களில்
அதிகாரத்தையும் போட்டி இட்டு கைப்பற்றலாம். அதை காலம்
தீர்மானிக்கும்.

இந்த போராட்டத்தின் வீச்சு
உலகலாவிய தமிழர்களுக்கும்
இந்திய தமிழனுக்கும் இணைப்பு
பாலத்தை போராட்டத்தின் மூலம்
இணைத்து இருக்கிறது.

குட்டித்தீவில்...
ஆயுதம் போராட்டம் நடத்திய
தமிழனின் தோல்வியை
அறப்போராட்டத்தின் மூலம்
மீண்டும் தமிழன் என்ற அடையாளம் நிறுவப்பட்டு இருக்கிறது என்பதே
போராட்டத்தின் குறியீடு.

எனக்கு பிடிக்காத சொல் தோழர்...!



"சும்மா வாங்க...!
சென்னைக்கு போய் வரல்லாம்."
செலவு கூட நான் பாத்துகிகிறேன்..!என்று என்னை டெய்லர் ஒருத்தர் கூப்பிட்டார்.

என்னங்க..
என்னை மட்டும் கூப்பிட்டீங்க...
இப்போ பஸ் நிறைய ஜெனங்க....
எல்லோரும் தோழர்...தோழர்...ன்னு
கூப்பிடறாங்க...எனக்கு பிடிக்கலங்க...!
என்றேன்.

அட விடுங்க...!
அவங்க எதாவது கூப்பிட்டு
போறாங்க...என்று சாதாரணமாக
சொன்னார்  டெய்லர்.

போகும் போது வண்டலூர் ஜூ....
சிங்கம்...புலி...பாம்பு...கிளி...
குரங்கு ...
கால் இடறி கீழே வீழ்ந்த என்னை
கை பிடித்து தூக்கிய எழுபது
வயது கிழவன் சொன்னான்.

என்ன தோழர் பாத்து வரக்கூடாதா..?
பதில் பேச முடியவில்லை ...என்னால்..!

சென்னையை நெருங்கியது பஸ்..

தண்டயார் பேட்டை...!
பார்க்கும் இடமெல்லாம் சிகப்பு...

தோழர்....தோழர்....தோழர்.....
பிடிக்காத வார்த்தை....!

எங்கும் எல்லோரும்... தோழர்..என்ற
வார்த்தை ..ஆண்  - பெண் - குழந்தை
குட்டி....எல்லோரும். தோழர் என்றே
கூப்பிட்டார்கள்.

ஒரே குழப்பம்...
"தோழர் "என்ற சொல் ஆணா...?
பெண்ணா...? கேட்க வேண்டும்.

"தோழர்" என்ற சொல் ஆணா...?
பெண்ணா...? சொல்லுங்க தோழர்
என்றேன்.

பிறகு பேசுவோம்..தோழர்..என்றார்.
டெய்லர் செல்வராஜ்.






Saturday 21 January 2017

தடுமாறி நிற்கும் பாரதியின் சீடர்கள்...!




தங்களால் மட்டுமே ,
தங்களது அமைப்பின் மூலம் தான்
நாட்டில் மாற்றத்தை கொண்டுவர
முடியும் என்று மார்தட்டிய,முற்போக்கு
சிந்தனையாளர்களும்,

1917- ல் ஏற்பட்ட ரஷ்ய புரட்சியை
இங்கிருந்து பாடிய மகாகவி. பாரதியின்
சீடர்கள் நாங்கள் தான் என்று மேடைதோரும் முழங்கும் கொள்கை வாதிகளும்,

ஜல்லிக்கட்டு பாரம்ப்பரிய 
விளையாட்டை பாதுகாக்க 
போராடும் இளைஞர்களின்
போராட்டத்தை உதாசினமாக பார்ப்பதுவும், கேவலமாக பேசுவதும், எழுதுவது தொடர்கிறது.

பேசுவது மட்டும்
எல்லோருக்குமானதாகவும்,
எல்லோரும் போராடினால்,
தன் அமைப்பில் நின்று
பூனை பார்வையில் சுருண்டு
கிடக்கிறார்கள்.

வெளியே வாருங்கள்...
யார் போராடினாலும்,
அதை உள்வாங்கிகொள்ளுங்கள்.

காட்டாற்று வெள்ளம்
கரைபுரல்கிறது.
அணைபோடமுடியாது.
ஒதுங்கி நின்று பாருங்கள்.

பாரதியின் பார்வையில்
விசாலப்படுங்கள்.
கால்களின் தடுமாற்றம்
நின்று போகும்.




















Friday 20 January 2017

தோழர். பாலனுக்கு ....


தோழர். பாலனுக்கு மனம் திறந்த மடல்...
----------------------------------------------------------------
தோழர்.பாலபாரதியை ஜல்லிக்கட்டு
எதிர்ப்பாளர்கள் பேச விடவில்லை
என்ற காரணத்தால் தங்களின் கண்டன
பதிவை படித்தேன்.

நீங்கள் கேட்பதில்
நூறு சதவீதம் நியாயம் இருக்கலாம்...!
தோழர். பாலன் போன்றோர் ஆத்திரத்தில்
எதை வேண்டுமானாலும்
பேசுவது முறையன்று...!

அதும் ஒரு எழுத்தாளர்.
மேடை பேச்சாளர். அவர்
வாயிலிருந்து " என்னத்த போராடி
என்னத்த கிழீக்கப்போரீங்க...?
என்று கேட்பது....அனுபவம் இல்லை
என்று எடுத்துக் கொள்வதா....?
அவர்கள் போராட்டத்தை பற்றிய
பார்வை இல்லை என்று எடுத்து கொள்வதா...?   என்று புரியவில்லை.

அரசியல் வேண்டாம் என்பதே
ஒரு அரசியல் என்பது தோழர்
பாலனுக்கு புரியாமல் போனது
என்ன...?

அவர்களின் பின் புலத்தில்
யார் ...யார்...இருக்கிறார்கள்
என்ற கேள்வி மேல் கேள்வி
கேட்கும் புத்திஜீவிகள் ஒன்றை
புரிந்து கொள்ள வேண்டும்.

மோடியின் அரசியலை
டாரு டாராக கிழிக்கிறார்கள்.
கார்பிரெட் நிறுவனங்களின்
ஆதிக்கத்தை எதிர்க்கிறார்கள்.
அதிமுகவின் இரட்டை வேடத்தை
அம்பலப்படுத்துகிறார்கள்.
இன்றைய இளைஞர்களுக்கு
அரசியலற்ற தன்மை இருக்கிறது
என்பதை அடித்து நொருக்கி இருக்கிறார்கள்.
இது மட்டுமே இப்போதைக்கு போதுமானது.
இது நீடிக்குமா...?
தொடருமா...? தெரியாது .அது அவர்களுக்கு
தேவை இல்லாமலும் இருக்கலாம்

தோழர். பால பாரதியை
பேச வேண்டாம் என்று
சொன்னதில் கோபப்படும்
நீங்கள் ஸ்டாலினையும்
பேசவிடவில்லை என்பது
உங்களுக்கு தெரியாதா...?
உங்களுக்கு வேண்டுமானால்
இருவரும் ஒன்றல்ல...
அவர்களுக்கு....?

 ஆனால்...
அவர்கள் சொல்வது
"அப்பட்டமான அரசியல்
சாயம் பூசியவர்கள் வேண்டாம்..!
என்று சொல்கிறார்கள்.
அது சரிதானே....?

வெகுஜன அமைப்பை எப்படி
நடத்துவது என்று கரைத்து
குடித்த சிபிஎம்- க்கு தெரியாமல்
போனது என்ன...?
அவர்கள் வெகுஜன அமைப்பாக
நடத்தியதால் குழப்பம் ஏற்பட்டுவிட்டதா...? என்ன...!

கூடங்குளம் அணுமின் நிலையம்
எதிர்ப்பு போராட்டத்தை உதயகுமார் நடத்திய போது
சி பி எம் நிலை என்ன....?
வேண்டாம் என்பது....!
த மு எ க ச நிலை வேறு
என்று சொல்லி ஆதவன் தீட்சண்யன் தலைமையில்
ஒரு குழு போய் ஆதரிக்கவில்லையா...?
கோட்டை விட்டது நீங்கள்
குறை அவர்கள் மீது அல்ல...





Thursday 19 January 2017

ஊர் சொல்லும் சில்லான் ...!




இன்டெர் நெட்டில்
இன்றைய உலகம்
இயங்கி கொண்டிருந்தாலும் ,

இன்றும் ....
எங்கள் ஊரில்
எல்லோருக்கும்
ஊருக்கு பொதுவான
தகவல் சொல்லுவது
சில்லான் என்ற
தலீத் ....!

சமூகத்தில்
இழி தொழிலாக
கருதும் எதையும்
செய்யக்கூடாது
என்பதுதான்
என்னுடைய
ஆழ்ந்த கருத்து ...!

ஆனால்....
சில்லான் அப்படியல்ல
அப்படி சொல்வதை
'நான் ஏற்கமாட்டேன் '
என்னை யாரும்
இழிவாக பார்க்கவில்லயே..?
என்று வாதிடுவார் .

சில்லானை பொறுத்தவரை
அது உண்மையும் கூட
தன்னை தாழ்வாக அணுகினால்
எவராக இருப்பினும் ...
உயர்ந்தவர், தாழ்ந்தவர்
பேதமில்லாமல்..
கிழித்தெரிந்து விடுவார் .

பேதமில்லாமல்
அண்ணன் என்றே
கூப்பிடும் எனக்கு
நீண்ட காலத்துக்கு பிறகே
தெரிந்து கொண்டேன் ...
அவர் பெயர் சுப்பராயன்
என்று......!

Tuesday 3 January 2017

அவன் மனிதன்...! .....y


அவமானங்களும் ,
அசிங்களும் ,
இனி இல்லை.
வலிகளைத்தவிர ..!

மரங்களை கட்டித்தழுவி,
பாறைகளை முத்தமிட்டு ,
விலங்கின் முரட்டுத்தனத்தை
சகிக்கவில்லை .

ஏய்...!
நல்லா இருக்கீயா..?
சின்ன சீண்டலில்..
மாராப்பு துணி மூடியது.

வேர்வையும்,
எண்ணை பிசிக்கும்,
சாராய நெடியில் ...
மனம் குமட்டவில்லை .

அவன் மனிதன்...!



.....