Wednesday 16 October 2013

ஈழம் என்பது........எது ?







                               தமிழகத்தில் அரசியல் பேசுகிறவர்களுக்கு வடக்கு மாகாணம் ,மலையகம் என்றெல்லாம் எதுவுமே தெரியாது ! அது பற்றி தெரிந்து கொள்ளும் ஆர்வமும் அவர்களிடம் இல்லை ! ஏனென்றால் தமிழகத்தில் பேசுவது... தமிழ் நாட்டில் ஓட்டு வாங்குவதற்கு...! இது தமிழ்நாட்டு அரசியல் ! "ஈழம் " என்று சொன்னால் தமிழ் "பற்றாளன் " என்று ஊரில் மரியாதை இருக்கிறது ! அதை நம்பி தமிழக மக்களும் ஒட்டுபோடுகிறார்கள் . எனவே ஈழம் என்று சொல்கிறார்கள் ...தனி ஈழம் என்று உரக்க சொல்கிறார்கள் ! அவர்களை காட்டி பணம் கேட்டால் பணம் தருகிறார்கள் ! ஓட்டு கேட்டால் ஓட்டு போடுகிறார்கள் .....அதைத்தாண்டி வேறு என்ன வேண்டும்?
                      இன்னும் எங்கள் நாட்டில் எம் ஜி ஆர் உயிரோடு இருக்கிறார் என்று சொல்லிகொண்டிருப்பவர்கள் இங்கு ஏராளம் ! ஆகவே எம் ஜி ஆரே உயிரோடு இருக்கும்போது " பிரபாகரன் ஏன் உயிரோடு இருக்கக்கூடாது ? இப்படிஎல்லாம் பேசுவதால் பைத்தியம் என்று சொல்லக்கூடாது ! அது மற்றவர்களை பைத்தியமாக்கி ஒட்டுவாங்குவற்காக பயன்படுத்துகிறார்கள் ! அதை கட்சி வித்தியாசமில்லாமல் ஆதரிகிறார்கள் ஊக்குவிக்கிறார்கள் ! 
 ஈழத்தில் செத்துப்போனவன் உண்மையிலே தலைவனென்றால் ..... அவன் நினைவுதினத்தை நெஞ்சில் ஏந்தவேண்டாமா ? அப்படியொரு நினைவுதினம் கடைபிடிக்கப்படுகிறதா ? அங்குமில்லை..... எங்குமில்லை !
ஈழப்பிரச்சனையில் கம்யூனிசம் பேசுபவரில்......மக்களை குழப்பாமல் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி விதிவிலக்காக இருக்கிறது என்பது வேறுவிஷயம் !
                     தமிழகத்தில் சாவையும் ( இந்திராகாந்தி ) ,நோவையும் ( எம் ஜி ஆர் ) காட்டியே கடந்த காலத்தில் ஓட்டுவாங்கி இருகிறார்கள் ! ஈழத்து படுகொலை பெரிய சாவு ! இந்தியாவில் ஒரு அரசியல்வாதி செத்துபோனாலே ஆட்சி மாறும் ! அங்கே ஆயிரக்கனக்கில் செத்துபோய் இருக்கிறார்களே ? எவ்வளவு நாட்கள் அரசியல் பேசலாம் ? இதைத்தான் தமிழக அரசியல்வாதிகள் பேசிக்கொண்டிருக்கிறார்கள் அரசியல்பேசிக்கொண்டே
நடந்துகொண்டிருக்கிறார்கள் !  
         ஈழம் வேறு தமிழகம் வேறு என்று சொல்பவர்களை தொப்புல்கொடியால் கட்டி தூர போட்டுவிட்டார்கள் ! இங்கே அடித்தொண்டையில் பேசினால் ஆழமான அரசியல்வாதியாகலாம் ! 
புலிக்கொடி என்ன ? ஓட்டு கிடைக்குமென்றால் நரிக்கொடி கூட எங்கள் நாட்டில் நாளைக்கே பறக்கும் ! நல்லவேளை ...? சமூகவளைதளம் இல்லையென்றால் என்ன நடக்குதென்ரே யாருக்கும் தெரியாது ! இன்று மலையகம் பற்றி மதிப்பிடமுடியாமல் போயிருக்கலாம் .
   இப்போதைக்கு மலையக மக்களை பாதுகாக்கு தனி ஈழம் ஏற்புடையதல்ல...!என்பதையும் புரிந்துகொள்ள முடிகிறது ! வடக்கு மாகாணசபை தேர்தலின் 
போது இன்றைய முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ள விக்னேஸ்வரனின்   அறிக்கை ஒரு புரிதலும் ,தமிழக அரசியல்வாதிகளுக்கு சாட்டையடியாகவும் இருந்தது மறக்கவியலாது . வடக்கு மாகாணசபை தேர்தல் மூலம் ஆட்சிக்கு வந்துள்ள தமிழ்கூட்டமைப்பு ஒரு சிறு முன்னேற்றம் என்று சொல்லலாமெயொழிய வேறு ஒன்றையும் பெரிதாய் செய்துவிடமுடியாது என்பதை உணருகிறோம்.
                     .அதே வேளையில் கடந்த காலங்களில் மத்திய மாகாணசபையில் இருவர் என்ற பங்கேற்பை பதினான்கு என்று உயர்ந்துள்ள இரட்டை இலக்கம் எளிதானதல்ல... இதன் மூலம் சிங்கள மக்களில் சிக்குண்டு கிடந்தாலும் மலையக மக்களின் உருக்கு போன்ற ஒற்றுமை உலகம் அறிந்துள்ளது ! இது சிங்கள-மலைய மக்களை பிளவுபடுத்தாமல் ஒற்றுமையை வளர்த்தெடுப்பது மலையக மக்களின் எதிர்காலம் சார்ந்தது. 
                               இந்த பார்வையில்தான் யாழ்ப்பாண தமிழனையும் -மலையக தமிழனையும் அரசியலாய் ஒன்று படுத்திட முயற்சிகள் வேண்டும் என்பதுதான் இன்றைய தலையாய கடமை !

Tuesday 15 October 2013

காவலர்கள் உங்கள் நண்பனா ?




                         காவல்துறையும் - நீதி துறையும் நியாயமாய் மக்களுக்கு பாதுகாப்பாய் இருக்கவேண்டிவர்கள் ! ஆனால் இன்று அப்படி இல்லை , சென்னையில் ஒரு போலீஸ்காரர் பாதிக்கப்பட்டதை எடுத்து சொல்கிறீர்கள் ...வேதனைபடுகிறீர்கள் அது தவறென்று சொல்லவில்லை !
கடந்த காலத்தில் தமிழக காவல்துறையின் செயல்பாடு எப்படி இருந்தது ? என்பதை யோசிக்கவேண்டும் . விழுப்புரம் அத்தி ஊர் விஜயா காவல்துறை பலாத்தகாரம் . சிதம்பரம் பத்மினி 11 காவலர்களால் பலாத்தகாரம் ! முத்தாண்டிகுப்பம் வசந்தா காவல் நிலைய பலாத்தகார படுகொலை ! கோடியக்கரை விசாரணை கைதி சண்முகம் காவல் நிலையத்தில் தூக்கிட்டு கொலை ! அந்தியூர் காட்டுவாசிகள் வனத்துரையாலும் ,காவல்துறையாலும் பலாத்தகார கொலைகள் ! வாச்சாத்தி மலைவாழ் மக்கள் 200 க்குமேற்பட்டோர் பாலியல் பாலாத்த்காரம் படுகொலைகள் ! சமீபத்தில் தீவிரவாதி ,பயங்கரவாதி என்று சொல்லி சென்னையில் ஒரிசாவிலிருந்து வந்த தொழிலாளர்கள் மீது எண்கவுன்டர் ! இப்படி அடுக்கிக்கொண்டே போகலாம் ! இது பொய் இல்லை ! இவைகளுக்கு ஆதாரம் உள்ளது .
                பலவழக்குகள் நிருபிக்கப்பட்டு தண்டனையும் கொடுக்கப்பட்டுள்ளது .
இந்த நிலை காவல்துறைக்கு என்றால் நீதித்துறை அதைவிடவும் கேவலம் ...நேரடியாய் சமூகவிரோதிகளுடன் தொடர்பு என்பது எல்லோருக்கு தெரியும் ! உயர் நீதிமன்ற வழக்கறிஞர் விஜயன் படுகொலைக்கு காரணம் சமூகவிரோதிகளோடு அவர் தொடர்பு இருந்தது என்று ஒரு தகவல் ... ஆகவே இந்த இருவரில் எவரும் நியாயவான்கள் அல்ல ! என்பதை மரியாதைக்குரியஎனது நண்பர்கள் புரிந்துகொள்ளவேண்டும் !
அதே நேரத்தில் காவல்துறையும் --- நீதித்துறையும் யார் பெரியவர்கள் ? என்ற சண்டை தொடர்ந்து நடந்து கொண்டே இருக்கிறது ! அதன் உச்சகட்ட சண்டைதான் கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு சென்னை சட்டக்கல்லூரியில் நடந்த சண்டையும் -- காவல்துறையின் அத்துமீறலும் ,அந்த சண்டையும் , காவல்துறை தாக்குதலையும் தமிழக மக்கள் இன்னும் மறந்திருக்க மாட்டார்கள் ! இப்போ சொல்லுங்கள் இதில் யார் நல்லவர்கள் ? இவைகள் இருவரும் " மோசம் " "படு மோசம் " என்ற தகுதியில்தான் இருகிறார்கள் ! அது சிலநேரங்களில் " மோசம் " படுமோசமாகவும் , "படுமோசம் "மோசமாகவும் மாறும் ! அவ்வளவே !
                           இந்த காலத்தில் மருத்துவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார் ! அதனால் உங்களுக்கு தெரிகிறது ....கோடான கோடி ஏழை எளிய மக்கள் அண்டை வீட்டு சண்டைக்கு கூட வழக்குபோடப்பட்டு ஆண்டாண்டு காலமாக நீதிமன்ற படிகட்டுகாலை ஏறி இறங்கி கொண்டிருக்கிறார்கள் என்பதையும் புரிந்துகொள்ளவேண்டும் ! காவல்துறை " உங்கள் நண்பன் "என்று எல்லாகாவல் நிலையங்களிலும் எழுதப்பட்டுள்ளது என்பது உண்மைதான் ! துணைக்கு ஆள் இல்லாமல் ஒரு பெண் தனியாக பகலில் கூட காவல் நிலையத்துக்குள் போய்வர முடியுமா ? போய்வந்தவர்களை கொஞ்சம் கேட்டு பாருங்கள் ! காவல்துறையினர்தான் ஏழை எளிய மக்கள் மீது வழக்கு பதிவு செய்து கோட்டுக்கு அனுப்புகின்றனர் ..ரத்தம் குடிக்கும் மூட்டை பூச்சுகளைப்போல் வழக்கறிஞர்கள் ஏழைகளின் ரத்தத்தை உருஞ்சிறார்கள். இவர்களில் எவரும் நல்லவர்கள் அல்ல ! இவர்களுக்கு வக்காலத்துவாங்குவதை விடவும் ஏழை எளிய மக்களைப்பற்றி யோசிக்கவேண்டும் ஆதரவற்ற பெண்கள் மீது அனுதாபப்படுங்கள் !
                             
ஒரு சில பெண் முக நூல் நண்பர்கள் ..சில அநீதிகளை கண்டு கொதித்துபோகிறீர்கள் ! முக நூலில் உள்ள பெண்கள் எத்தனை பேர் ? பாதிக்கப்படும் பெண்களுக்குஆதரவாய் ...சமூக நீதிக்கு ஆதரவாய் ..... பாலியல் வன்முறைக்கு எதிராய் .... ஆட்சியாளர்களுகு எதிராய்.... பதிவேற்றம் செய்கிறார்கள் ? குறைந்தபட்சம் தங்களின் கண்டனத்தையாவது தெரிவிகிறார்களா ? முழுவதும் இல்லை என்று சொல்ல முடியாது 100 க்கு 2 சதம் கூட இல்லையே ? 
                             பெரும் பகுதி பெண்கள் குரல் கொடுக்காதபோது ஒன்றிரண்டு பெண்கள் அநீதிகளை எதிர்த்து போராடினால் அழித்தொழிக்கப்படுவார்கள் என்று அஞ்சுகிறேன் . அதனால்தான் அப்படிப்பட்டவர்களை பாதுகாக்கவேண்டும் என நினைக்கிறேன் . தங்களின் கருத்துக்கு ஆதரவான சக்திகளை சேர்க்கவேண்டும் இல்லையேல் இந்த கொடுமைகளுக்கு எதிராய் போராடும் கட்சிகளோடு இணையவேண்டும் !

Monday 14 October 2013

முக நூலில் மண்டியிடும் கடவுள் ...!

                                               

                                           
ஜாதிய-மத பாகுபாடுகள் குழந்தை பருவத்திலிருந்தே உணவோடு சேர்த்தே ஊட்டப்படுகிறது .

அதனால் ...
தாயும்-தந்தையும் தரம் குறைந்தவர்களல்ல .... 
அந்த காலத்தில் ஜாதி - மதம் பற்றி அவர்களுக்கு இருந்த பார்வை அவ்வளவுதான் ! 

படிக்க தெரிந்த நாம் ! 
நவீன உலகில் இருக்கும் நாம் ! 
அந்த கால மனிதர்களைப்போல் 
பிரித்து பார்ப்பது ,தரக்குறைவாய் மதிப்பிடுவது சரிதானா ? என்பதுதான் என்னுடைய கேள்வி .

நான் மட்டும் சுத்த சுயமல்ல ...
இந்த குப்பைகள் என்னிடமும் இருக்கிறது அதை கொஞ்சம்கொஞ்சமாய்வெளிஏற்றுகிறேன்.
அதற்காக முயற்சி எடுக்கிறேன்.

இந்த கேள்விகள் என்னைவிட .... 
அதிகம் படித்த , விபரமானவர்கள் , 
சமூகத்தில் மிக உயர்ந்த பொறுப்பில் உள்ளவர்கள் , , புத்தி ஜீவிகளுக்கு தெரியவில்லையே ? 
என்பதுதான் புரியாத புதிராய் இருக்கிறது !
எனக்கு மதங்களைக்காட்டிலும் ,மனிதர்களிடம் நம்பிக்கை இருக்கிறது .
                                               
எனக்கு எந்த மதத்தின் மீதும்
நம்பிக்கை இல்லாமல் இருக்கலாம்,
என் நண்பர்களுக்கு ? என் நேசத்துக்குரியவர்களுக்கு ?
 என் நம்பிக்கைக்குரியவர்களுக்கு....
 அதன் மீது நம்பிக்கை இருக்கிறதே !
அதுதான் பிரச்சனையே !

அதை நாம் கூடாது என்று சொல்வதற்கு
எந்த உரிமையுமில்லை!
 ஒவ்வொருவரும் சக மனிதனுக்குள்ள
திறமைகளை , பண்புகளை
ஆராய்வதற்கு பதிலாக ...
மற்றவர்களின் கடவுளின் நம்பிக்கையயும் ,
மத சிறுமைகளையும் ஆராய்கின்றனர் .

அதனால்தான்

தெரிந்தோ தெரியாமலோ மதத்துக்கும் ,கடவுளுக்கும் வக்காலத்து வாங்கி
என் மதம் , என் கடவுள் என்று ..
ஆதரவு குரல்களும் ,
அடிகோடிட்ட பதிவுகளும்
நம்மை அதிர வந்து சேர்கின்றன .
மதத்தையும் ,கடவுளையும் ,தனிப்பட்ட முறையில் ஆதரிக்கவும் , வணங்கவும் உரிமை இருக்கிறது . அதில் தப்பேதுமில்லை ,

அவரவர்களின் தனிப்பட்ட வழிபாட்டு சுதந்திரத்தை மற்றவர்கள் மீது திணிப்பதும் தப்பு .
அதுபோல் மற்றவர்களின் மதத்தில் ,
வழிபாட்டு உரிமையில் மூக்கை நுழைப்பதும் தப்பு
என்பதை புரிந்து கொண்டால் ...?

பள்ளிவாசலில்....
 தேவாலயத்தில்......
கோவில்களில்...
இருக்கவேண்டிய கடவுள் ....
முக நூலின் மண்டி இடவேண்டிய
அவசியமில்லை .






Tuesday 8 October 2013

பாராளுமன்றம் பன்றிகளின் தொழுவமா ?



                                         


                                             இந்தியாவில் உள்ள நடுத்தர மக்கள்என்ற பெரும்பகுதி மக்கள் ஓட்டு போடுவதற்கு வருவதில்லை ...என்ன ஏதுன்னு விசாரித்தால் யாருமே சரியானவர்கள் இல்லை அதனால் நாங்கள் ஓட்டுபோட விரும்பவில்லை என்று சொல்கிறார்கள் . அப்போதுதான் அரசு இந்த முடிவுக்கு வருகிறது ஓட்டு உரிமை ஜனநாயக உரிமை அந்த உரிமையை எப்படியாவது பயன்படுத்தட்டும் என்றுதான் இதை கொண்டுவந்தார்கள் . வந்த பிறகும் அந்த மேதாவிகள் அந்த 49 o வை 99 சதவீதம் பயன்படுத்துவதே இல்லை என்பதுதான் உண்மை ! இனி வரும் காலங்களில் அப்படி பயன்படுத்திவிட போகிறார்கள் என்ற அச்சத்தில்தான் என்னுடைய பதிவு ! அப்படி வாக்காளர்கள் பயன் படுத்தி வேட்பாளர்களைவிடவும் 49 ஓவை பயன்படுத்தி 49 ஓ க்கு அதிக ஓட்டுகள் போட்டு இருந்தாலும் வேட்பாளர்களில் யார் அதிகம் ஓட்டுகள் வாங்கி உள்ளனரோ அவரே வெற்றி பெற்றவராக தேர்தல் துறை அறிவிக்குமாம் . 
                                                                செல்லாத ஓட்டுக்கும் இந்த 49 ஓ க்கும் என்ன வித்தியாசம் ? அப்போ எதற்குத்தான் இந்த 49 ஓ என்று கேட்கிறீர்களா ? வாக்கு பதிவின் எண்ணிக்கையை கூட்டுவதற்குத்தானாம் ! இந்த கூத்தெல்லாம் இந்தியாவில்தான் நடக்கும் . நாம் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும் இந்த தேர்தல் முறை தவறானது ..... அதை மாற்றவேண்டும் ! அதை மாற்ற போராடவேண்டும் .... அதுவரை அதற்காக தேர்தலில் பங்கேற்கமாட்டேன் என்று சொல்வதும் தப்பு . இப்போ நடை முறையில் இருக்கிறது அதில் பங்கேற்று அதை நிர்மூலமாக்கவேண்டும் ! 
                                    இன்றைக்கு பாராளுமன்ற அமைப்பு ஆளும் வர்கத்துக்கும் ,பெருமுதாளிகளுக்கும் ஆதரவாகத்தான் இருக்கிறது இதில் மாற்று கருத்து இல்லை . அதை நாம் எப்படி பயன்படுத்தப்படவேண்டுமேன்றால் அதும் ஒரு போராட்டக்களமாக ,அது ஒரு பிரச்சார மேடையாக பயன்படுத்த வேண்டும் என்பதையும் மறக்ககூடாது ! 
                               
பாராளுமன்ற ஜனநாயகம் பன்றிகள் வாழும் தொழுவம் என்று தலைவர்கள் சொன்னதாக சிலர் சொல்கின்றனர் , அவர்கள் சொன்னது எப்போ எங்கே , எந்த சூழலில் என்பதை மட்டும் யாரும் சொல்வதே இல்லை ...பன்றிகள் தொழுவம்தான் இப்போ இருக்கிறது என்றால் அதை நிர்மூலமாக்காமல் இன்னொரு அமைப்புக்கு போக முடியாது ! வாதத்துக்கு வேண்டுமானால் பேசலாம் ! அது பயன்படாது !