Thursday 12 September 2013

கத்திமேல் நடப்பவர்கள் ...!

                                         
                        விமர்சனம் என்பதை புத்தி ஜீவிகளாய் தெரிபவர்கள் கூட " குறை " சொல்வதாக தமிழில் வேறு அர்த்தப்படுத்திக்கொள்கிறார்கள் ..... உங்கள் மீது ,உங்கள் கருத்தின் மீது விமர்சனம் வைப்பவர் யார் என்பதை கூடவா பார்க்கவேண்டாமா ? உங்கள் நண்பர்கள் உங்கள் மீது அக்கறை உள்ளவர்கள்.... அவர்கள் உங்கள் மீது வைக்கும் விமர்சனம் உங்களை வீழ்த்த அல்ல.... வீழ்ந்துபோகாமல் காப்பதற்கே ! என்பதைகூடவா புரிந்து கொள்ள முடியவில்லை !.

                               எல்லோராலும் எல்லோரையும் புகழ முடியும் ....ஆனால் ஒருவரின் கருத்தின் மீது சுட்டிக்காட்டுவது, மாற்று கருத்து வைப்பது அவ்வளவு சுலபமல்ல....அவ்வளவு எளிமையானதுமல்ல ....... அப்படி சுட்டிக்காட்டும்போது எதிரே உள்ளவர் இணைபிரியா நண்பராகவோ ? அவர் தயவில்தான் வாழவேண்டும் என்ற நிலையில் உள்ள அதிகாரியோ ? அல்லது அவரிடம் எதையாவது எதிர்பார்ப்பவராகவோ , தான் நேசிக்கும் கட்சியாகவோ , அமைப்பாகவோ இருக்கும்போது ...... எங்கே..? சுலபமாக சுட்டிக்காட்டமுடியுமா ? என்ன ? எனவே புகழ்வதைக்காட்டிலும் விமர்சன ரீதியாய் சுட்டிக்காட்டுவது கத்திமேல் நடப்பவை ! அதில் வீழ்ந்து இரண்டாக துண்டாடப்பட்டவர்கள் ஏராளம் .....
                                                 
                             அதே நேரத்தில் அந்த கத்தியில் சின்ன காயம் கூட இல்லாமல் விமர்சனத்தை முன்வைப்பவர்களும் சில நேரங்களில் தப்பிப்பதில்லை ..தன் நலனைவிடவும் மற்றவர்களின் நலனே அடிப்படை என்ற கண்ணோட்டத்தோடு , முன்வைப்பவர்களே அதிலிருந்து தப்பிகின்றனர் ..". சரியான விமர்சனம் " என்பதற்கு என்னதான் அளவுகோல் ? "மக்கள் "தான் அளவுகோல் ! மக்களென்றால்.....? எந்த அடையாளமும் இல்லாத "வெகு மக்கள் " இவைகளை உள்வாங்கியவர்கள் எதற்கும் தயங்காமல் ...எவருக்கும் பயப்படாமல் விமர்சனத்தை முன்வைக்கின்றனர் .

உயிரோவியம் ; மணிவர்மா !

No comments:

Post a Comment