Sunday 17 March 2013

திரைப்பட சாத்தானின் உண்டியல் நிரம்பி வழிகிறது ......!


                  திரைப்பட உலகின் ஆரோக்கியம் திட்டமிட்டே கெடுக்கப்பட்டுள்ளது. அது ஏனோ நடப்பதல்ல அதும் வியாபாரம் .....வியாபாரம் என்று வந்த உடன் காசு பார்க்கவேண்டும் ! சாதாரண பெட்டிக்கடை வைத்து இருப்பவனே ஒரு முறுக்கு விற்றால் அதில் எவ்வளவு கிடைக்கும் என்று கணக்கு போட்டு விற்று காசு பார்க்கும் பொது ,சினிமா சாதாரண தொழில் அல்ல கோடிகள் முதலீடு போட்டு பல கொடிகளை சம்பாதிக்கும் தொழில் என்பதால் அதில் லாபம் சம்பாதிக்க எல்லா மக்களும் கவரக்கூடிய விளம்பரம் தேவை

                    விளம்பரம் இல்லமால் எந்த வியாபாரம் இன்று இருக்கிறது ? அந்த விளம்பரம் கூட ஏனோதானோவென்று செய்ய முடியாது அதனால் அவர்கள் மனிதர்களின் பண்பாட்டு தளத்தில் ஓங்கி அடிக்க வேண்டும் என்று அடிகிறார்கள் . அப்படி அடிக்கும்போது ஜாதி ,மதம் ,மொழி , இனம் , என்று எதில் அடித்தாலும் மக்களின் உணர்வுகளை எளிதில் தூண்டிவிட முடியும் ,அப்படி தூண்டி விடும் பொது அதை ஆதரித்தோ ,எதிர்த்தோ அவர்கள் போட்ட முடிச்சில் அனைவரும் வீழ்ந்து விடுகின்றனர் .

                  அப்புறம் என்ன.......? விவாதம் , பேட்டிகள் , ஆலோசனை கூட்டங்கள் , வழக்கு , நீதிமன்ற முறையிடு , இதுவே பெரிய விளம்பரம் அதிலும் போதவில்லை என்றால் கலையின் மீது தாக்குதல் ஆகவே நான் கலைஞன் கலையை காப்பாற்ற யாருமில்லாத தேசத்தில் நான் இருப்பதில் நியாயமில்லை நான் வேறு தேசத்தை நோக்கி ஓடிபோகிறேன் . என்று மிரட்டல் விட்டால் இதை விட வேறு விளம்பரம் தேவையா ? கண் கச்சிதமாய் திரைப்படம் என்ற தொழில் கண் மூடித்தனமாக மத உணர்வு மீது , மொழி உணர்வு மீது ஏறி மிதித்து பணவேட்டையாடி வருகிறது !

                  சமீபத்திய அத்துணை திரைப்படங்களும் விஞ்ஞான தொழில் நுட்பம் ,என்கின்றனர் , முற்போக்கான கருத்து என்கின்றனர் , ஆனாலும் மக்களிடையே மோதலும் ,பதட்டத்தையும் விதைகின்றனர் , இதற்க்கெல்லாம் ஒரே வார்த்தையில் பழமைவாதிகள் என்றோ ? , பிற்போக்குவாதிகளேன்றோ ? கலைகளின் மீது தொடுக்கப்பட்ட தாக்குதல் என்றோ ? சொல்லி திரைப்பட சாத்தானின் ( முதலாளிகளின் ) உண்டியல் நிரம்பி வழிகிறதேயோழிய வேறொன்றுமில்லை ! அவர்களுக்கு தேவை பணம் ! பணத்தை உழைப்பாளி மக்களிடமிருந்து உரிஞச யாரை வேண்டுமாலும் ,எதை வேண்டுமானும் காவு கொடுக்க இன்றைய திரைப்பட முதலாளித்துவம் தயாராக இருக்கிறது ! 

                                  அதற்கு சில உலக நாயகன்களும் ,உன்னத இயக்குனர்களும் , ப்ரோக்கர்களாக செய்ல் படுகிறார்களே தவிர ..........கலையாவது ? ,மண்ணாகட்டியாவது ? கலைகளும் , இலக்கியங்களும் , மக்களுக்கே ! என்பதுதான் மக்களின் விடுதலையை பிரதிபலித்து , மக்களின் வாழ்வை பாதுகாக்கும் ! இன்றைய கலைகளும் ,இலக்கியமும் , பணமட்டுமே வேண்டும் என்ற சாத்தானின் கைகளில் இருக்கும் வரை திரைப்படம் குறித்து மாபெரும் விவாதம் நடத்தவேண்டிய தேவை இருக்கிறது !