Friday 25 November 2016

அன்பை தவிர....



முகநூல் நண்பர்களுக்கு .......!
வணக்கம் ......
உங்களுடைய அபிமானத்திற்கு உரியவனாக
இருப்பது கண்டு மகிழ்ந்தேன் ....!

ஒரு நண்பரிடம் உள்ள நல்ல குணத்தை
பாராட்டுவது ஒரு நல்ல குணாம்சம் !
இப்படி ஒருவரையொருவர் பாராட்டுவது கூட
ஒருசில நண்பர்களுக்கு பிடிப்பதிலை ....!
என்ன ஒரே புகழ் பாடலா இருக்கே என்று கூட
கேட்கிறார்கள் .....! கேட்டுவிட்டு போகட்டும் .....
இருந்தாலும் அவர்களிடம் ஒரு கேள்வி ....!
ஒருவரின் நல்ல குணங்களை அவர் உயிரோடு
இருக்கும்போது மனம் திறந்து பாரட்ட முடியாத
நீங்கள் ....அவர் திடீரென்று போய்விட்டால் ....
பக்கம்பக்கமாக .....படம் போட்டு அஞ்சலி
செலுத்துவதால் என்ன பயன் ? என்ற
கேள்விக்கான பதில் மட்டும் தெரிவதே இல்லை ....!

ஒருவருடைய வறுமையும் ,இயலாமையும் ,
உடல்நலக்குறைவு,ஒருவருடைய நட்பை
பாதிக்கிறது என்பது உண்மைதான் ......!
ஆனால் அது எல்லோருக்கும் பொருந்தாது
என்பதை என்னுடைய நண்பர்கள்
உணர வேண்டும் ....!ஏனென்றால் ..?
அதையும் தாண்டி ஒருசிலர்
இருக்கத்தான் செய்கின்றனர் .....?
அதை தேடுவதுதான் சிரமம் ..!

தன்னுடைய வலியையும் ,
மன்னிப்பையும் ,புரிந்துகொண்டவர்களிடம்
மட்டுமே பகிர்ந்துகொள்ள முடியும்.
என்பது மட்டும் எல்லோருக்கும்
தெரிந்த உண்மை ...!

ஆகவே. ............
உங்களை புரிந்துகொண்டவர்களை மட்டுமே
மனம். திறந்து பாராட்டுங்கள் !
உங்களிடம் முடிவாய் ஒன்றை சொல்ல
விரும்புகிறேன் ......!
நான் நட்பாக கைகோர்த்து காலங்களில்

உங்களுக்காக எதையும் செய்யாமல் ,
எதையாவது உங்களிடமிருந்து பெறவேண்டும்
என்று நினைப்பது எந்த வகையில் நியாயம் ?
ஆகவே அன்பை தவிர மற்றதெல்லாம்
பின்னுக்கு தள்ளி வைக்கவேண்டியவையே ....!
-----உங்கள் நட்பை தொடர முயற்சிக்கும்
தோழன் .....மணிவண்ணன்.புதுச்சேரி.


Thursday 24 November 2016

அரிச்சுவடி .



ஊரெல்லாம் விஷக்காச்சல் வந்தால் ...?
அது நம்மையும் விட்டுவைப்பதில்லை.
அப்படித்தான் ஆணாதிக்க சமூக அமைப்பில்
அங்கும், இங்கும் , எங்கும் கட்டி அமைக்கப்பட்டுள்ள
பெண்ணடிமைத்தனம் விஷக்காச்சலைப்போல
எல்லோரிடமும் பரவி கொல்லுகிறது .


அதன் அடிப்படை ஆணிவேர் 
குடும்பத்திலிருந்து
தொடங்குவதால் அங்கிருந்தே 
அதை பிடுங்கி எறிந்திட
முயலவேண்டும் . 
பாலின சமத்துவத்தை பற்றி 
பேசுவதத்திற்கு முன்பு 
ஆணாதிக்க சமூகம் கட்டி அமைத்துள்ள 
ஆணாதிக்க வரம்புகளை 
உடைத்தெறிய வேண்டும் .

தன்னுடைய மகனுக்கு 
பெண் குழந்தைகளை பற்றி
சொல்லிக்கொடுப்பதும் , 
பெண்களின் பிறப்போடு
பின்னிப்பிணைத்திருக்கும் 
ஆண்டாண்டுகால 
ஆணாதிக்கஅடிமைத்தனத்திலிருந்து 
விடுதலை பெற தனது மகளுக்கு 
கற்றுக்கொடுப்பதும் 
பாலின சமத்துவத்துக்கான அரிச்சுவடி .


புதுச்சேரி முதல்வருக்கு மனம் திறந்த மடல் ...

மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு
என்ற வாக்கின் படி பெற்ற வெற்றியை
வாழ்த்துகிறேன் .

இடைத்தேர்தல் என்றால் ஆளும் கட்சிதான்
வெற்றிபெறும் என்ற அனுமானம் சரியாகிப்போனது
என்று எல்லோரும் சொல்வதுபோல நானும்
சொல்லப்போவதில்லை.

அதிகாரத்தை கைப்பற்ற எல்லா பலத்தையும்
பயன்படுத்த வேண்டிய கட்டாயத்துக்குள்
தள்ளப்படீர்கள் என்பதை உங்களை எதிர்த்த
கூட்டணி கட்சியினரின் பலத்திலிருந்து
அதுதெளிவாகிறது .

எந்த திறமையும் இல்லாமல் சாதியத்தை
மட்டுமே நம்பி ஆட்சி செய்து அதிகாரத்தை இழந்த
ரெங்கசாமியும் .அம்மா பாசறை அன்பழகனும் ,
மதவெறி பிஜேபியும் ஓரணியில் நின்று எதிர்த்தார்கள் .
அது வலுவான கூட்டணி என்பதை எவரும் மறுக்க முடியாது .

திமுக உங்களோடு நின்றாலும் அவர்களின்
பலம் எல்லோருக்கும் தெரியும் , தமிழகத்தில்
உங்களோடு இல்லாத சிறுத்தைகள் இணைந்தார்கள்
மதவெறி பிஜேபி ஆதரவாளர்கள் வென்று காலூன்ற
கூடாது என்பதற்க்காக ... மார்சிஸ்ட்டுகளின் கடுமையான
எதிர்ப்பையும் மீறி இந்திய கம்யூனிஸ்டு கட்சி உங்களுக்காக
தனது தளத்தை மதச்சார்பற்ற சக்தி வெல்லவேண்டும் என்ற
தேசிய காணோட்டத்தில் நின்று களமாடியிருக்கிறார்கள்
என்பதை மறந்துவிடக்கூடாது .

வெற்றிபெற்றது பகீரத முயற்சியாக இருந்தாலும் ...
கடந்த கால ஆட்சிக்கு மாற்றாக இந்த ஆட்சி
இருக்கவேண்டும் என்ற எதிர்பார்ப்பு புதுச்சேரி மக்களின்
நீண்டகால எதிர்பார்ப்பு அதை நிறைவேற்றுங்கள் .

ராஜாவை மிஞ்சிய விசுவாசியாக ...மக்கள் பிரதிநிதிக்கு
இல்லாத ராஜமரியாதை தனக்கு இருப்பதாக அனைத்து
சட்ட மீறலையும் செய்து வரும் துணைநிலை ஆளுநரின்
தான்தோன்றித்தனத்தை பொதுவிவாதத்துக்கு முன்வையுங்கள் .

மாநில அந்தஸ்து, கடந்த கால மத்திய அரசு கடன் தள்ளுபடி ,
மத்தியஅரசின் மாநில அரசுக்கான மானியம் , மத்திய ,மாநில அரசு
நலத்தித்திட்டங்கள்,முறையான வேலைவாய்ப்பு , காலால் வரி வசூல் ,
வாராக்கடன் என அவசிய அவசரமான நடவடிக்கைகள் தேவைப்படுகிறது .

சீர்கெட்டு கிடைக்கும் அரசு நிர்வாகத்தை சரிபடுத்துவதன் மூலமே
உண்மையான மக்களுக்கான ஆட்சிமலரும் .அதற்க்கான முதற்படியாக
இந்த வெற்றியை கருதவேண்டும் என்பதே எமது மனம் திறந்த வேண்டுகோள்.
 .

Wednesday 23 November 2016

நண்பர் கொளஞ்சி அவர்களே ,

நண்பர் கொளஞ்சி அவர்களே , வணக்கம் !.உங்களின் செய்தியை படித்தேன் .நல்ல நடை ......! பாரதியின் " நேர்படப் பேசு " என்ற வாக்கின்படி நீங்கள் நேரடியாக சொன்ன உங்கள் செய்தி என்னை மட்டுமல்ல ,என்னை போன்ற எல்லோருக்கும் பிடிக்கும் . அதுவும் குறிப்பாக மாற்றம் எங்கிருந்து தொடங்க வேண்டும் ? அது தன்னிலிருந்து தான் தொடங்கவெண்டுமெயொழிய டெல்லியிலிருந்து அல்ல ! என்ற புள்ளியும் மிக சரியானதே , மக்களின் மனங்களில் மட்டுமே மாற்றம் வந்தாலே ..இப்படி பட்ட சமூக விரோத செயல்கள் நடக்காது என்பது உண்மைதான் ஆனால்...........ஒலி .ஒளி .காட்சி ஊடகங்களால் ,திரைப்படங்களால் ,அச்சு ஊடககங்கலால் மாசு பட்டு போன இதயத்தை எப்படி டயாலிசீசஸ் செய்ய போகிறீர்கள் ? அதற்க்கு என்ன வழி ? நீங்கள் சொன்ன படி மக்கள் மனது மாறினால் மட்டும் போதுமா ? அல்லது ஆண்கள் மனம் மாறி கொடுக்கும் சுதந்திரத்தால் இந்த ஒடுக்குமுறை போய்விடுமா ? இந்திய ஊடகங்கள் ஆண் - பெண் இருபாலரையுமே தினமும் காலையிலிருந்து மாலைவரைபாலுணர்வை தூண்டி சூடேற்றி கொண்டேஇருக்கிறது அப்படிஇன்றைய நிலைமை இருக்கும் போது ...... ..நீங்கள் சொல்லும் ஆண் --பெண் மனமாற்றம் என்ன ஆகும் ? ஆகவே மனம் மட்டுமல்ல இந்த விஷயத்தில் ஆட்சியாளர்கள் அரசின் பங்கு ,தலையீடு ,அதன் கடமை , அரசியல் சட்டத்தின் கட்டுப்பாடு.இவைகளெல்லாம் பாலியல் வன்கொடுமையை தடுக்காமல் வேடிக்கை பார்த்துகொண்டிருந்துவிட்டு இன்றுதான் ஒரேஒரு பெண்மீது ,இன்றுதான் பலாத்காரம் நடந்துவிட்டதை போல ஊடகங்கள் ஓலமிடுகின்றன .ஆட்சியாளர்களும் ஆழ்ந்த அஞ்சலி செலுத்துகின்றனர் . நடந்து முடிந்த கொலை மிகவும் கொடூரமானது... காட்டுமிராண்டித்தனமானது ,கண்டிக்கத்தக்கது என்பதில் மாற்று கருத்தில்லை .இந்த கொலை மீது அனைவருக்கும் மறைமுகமான பங்கு இருக்கிறது . இவகளைபற்றிஎல்லாம் நீங்கள் பேசாமல் போனது வியப்பாக இருக்கிறது ! அரசனின் மகளில்தொடங்கி ,ஆண்டியின் மனைவி வரை பெண்ணாய் பிறந்தால் எவ்வளவு ஒடுக்குமுறை என்பதை மட்டும் சொல்வதில் எந்த பயனுமில்லை , அதை போக்க அதற்க்கு தீர்வு சொல்ல வேண்டாமா ? அதேபோல் டெல்லி பெண்ணுக்கு ஒரு நீதி ? தமிழ் பெண்ணுக்கு ஒரு நீதியா ? அது இலங்கை தமிழச்சிக்கு இல்லையா ?நீங்கள் எந்த அர்த்தத்தில் கேட்கிறீர்கள் என்று என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை ? இது அபத்தமானது.இதுவரை கேட்கவில்லை என்பதற்காக இன்றும் கேட்ககூடாது என்று சொல்கிறீர்களா ? இன்றுகூட ஆசியாளர்கள் நிலை ஒன்றுதான் அதில் மாற்றமில்லை ! இன்று இந்த பிரச்சனை மீது இந்திய நாட்டின் மக்களின் எழுச்சிதான் ஆட்சியை ஆட்டம் காண வைத்துள்ளது உங்களை என்னை , உலகமே தன பார்வையை திரும்பி ஐநா சபை தலைவர் பான் கி மூன் வரை பேசவைத்துள்ளது .இந்த எழுச்சியை பயன்படுத்தி, உலகமுழுவதும் உள்ள பெண்களின் பாதுகாப்பிற்கு முன்னுதாரணமாக , நமது நாட்டில் ஒரு வலுவான சட்ட பாதுகாப்பு ஏற்ப்பாட்டை செய்வதன் மூலமே நிரந்தர தீர்வை எட்டமுடியும் . அதை ஆட்சியாளர்கள் அவ்வளவு எளிதில் நிறைவேற்ற போவதில்லை ! பெண்ணுக்கான அரசியல் உரிமை...... சட்டமன்றத்திலும் நாடாளுமன்றத்திலும் 33 % இட ஒதுக்கீடு மசோதா இன்னும் புழுதி படிந்துபோய்கிடக்கிறது. அதற்கெல்லாம் ஆண்கள் தட்டு கழுவினால் மட்டும் போதாது .இவற்றையெல்லாம் கொண்டுவர பெண்களோடு சேர்ந்து ஆண்களும் போராட வேண்டும் .போராட்டத்தை மூடிவிட்டு போக சொல்கிறீர்களே என்ன நியாயம் ? போராட்டம் வேண்டாமென்றால் மாற்று வழி என்ன ? 18 ஆம் நூற்றாண்டில் பிறந்த பாரதியின் வாக்கின்படி "கொடுமையை எதிர்த்து நில். " என்றான் . அப்படியே அதை மெய்யாக்குவோம் ! நல்ல விவாதத்தை ஏற்படுத்தி இருக்கிறீர்கள் , தவறு இருப்பின் தாராளமாக திருத்திக்கொள்ள தயாராக இருக்கிறேன் . நன்றி ! !


மனித உணர்வுகள் ...

மனித உணர்வுகள்
பரிமாற்றத்துக்கு உட்பட்டவை .
அதை மனிதர்களால்
மட்டுமே உணர முடியும் .

ஆடுகளும் மாடுகளும்
அரங்கம் போட்டு பேசுவதிலை ...
மனிதர்களால் மட்டுமே
இரங்களும் அரங்கமாகிறது .

மனித உணர்வுகள்
பரிமாற்றத்துக்கு உட்பட்டவை .
அதை மனிதர்களால்
மட்டுமே உணர முடியும் .




Tuesday 22 November 2016

விதைப்பு ....!




இன்னும்..நெருங்கிய படி
காற்றுக்கு மட்டுமல்ல ...
கனவுக்கும் இடமில்லை.

ஒலித்துக்கொண்டிருக்கும்
ஒலிகளை ...
காதுகள் கவ்விக்கொண்டன.

போர்த்திகொண்டது...இருள் ..!
எதுவும் தென்படவில்லை .
அடர்ந்த ரோமங்களை தவிர.....

ஆட்டுகிடாக்கள்
முறுக்கி விடுவதில்லை .
அடர்ந்து கிடப்பவையை...

அம்புகள்
அயர்ந்து கிடக்கின்றன .
அம்பூராதூனியில்..

வெற்றியும் இல்லை
தோல்வியும் இல்லை
விதைப்புகள் ....







Saturday 19 November 2016

அது உயிர் ...

ஆண் என்று சொல்லும்
எவரும் ஆண் அல்ல ...! 

ஆண் என்பதை ஒரு பெண்தான்
தீர்மானிக்க முடியும் ...!

அவள் பெண் என்பதை
ஆண்தான் மதிப்பிடமுடியும் .

ஆண் என்பதும் பெண் என்பதும்
உறுப்புக்கள் அல்ல ...

அது உயிர் .
அது உயிர் . 

சிரிப்பு மன்னன் 23- ம் புலிகேசியின் ஆட்சியில் ...

முகேஷ்ஜி அம்பானியின் ஜியோ நிறுவனம் இலவசமாக
தன்னோடைய சேவையை தொடங்கி இருக்கு... இலவசமாக
எந்த முதலாளியாவது மக்களுக்குசேவை செய்ததாக கேள்வி
பட்டு இருக்கிறீர்களா ...?அந்த இலவச சேவைக்கு மக்களிடமிருந்து
ஆதார் அட்டையும் அதோடு கைக்குறியும் வாங்கி இருக்கிறார்கள் .
இதெல்லாம் எதற்க்காக ...?

தன்னிடம் இருக்கும் பணத்தை வெள்ளை நோட்டாக
மாற்றும் முயற்சியே இந்த இலவச சேவையின் பின்னால்
மறைந்து இருக்கும் நிஜம் . கொஞ்சம் பொறுத்து பாருங்கள்
எத்தனை ஆயிரம்கோடிகள் அந்த நிறுவனத்துக்கு வெள்ளை
பணமாக மாற்றப்பட்டு வரப்போகிறது என்று தெரியும்.

அதோடு கோடீஸ்வரர்கள் எவரும் வங்கிக்கு வரவில்லையே ...?
அவர்களிடம் பணம் இல்லையா ...? இல்லை இதற்குமுன்பே
அவர்கள் மாற்றிவிட்டார்களா ...? இந்த இரண்டு கேள்விகளுக்கு
பதில் உங்களுக்கு தெரியுமானால் என்னிடம் கேள்வி கேட்பதை
விட்டு விடுவீர்கள் .

நவம்பர் 8ந்தேதியன்று பிரதமர் 500 ரூபாய் ,
1000 ரூபாய் செல்லாது என்று அறிவித்த அன்றைய தினம்
காருக்கு சில மணி நேரங்களுக்கு முன்னால் டெல்லி உள்ளூர்
பாஜக கிளையின் சார்பில் ஒரு கோடி டெபாசிட் செய்யப்பட்டு
இருக்கிறது .

நாட்டில் புழக்கத்தில் உள்ள 1,418 லட்சம் கோடியில்
வெறும் 0.028 சதவீதம் அல்லது 400 கோடி ரூபாய் தான்
கள்ள நோட்டுக்கள் ஆகும் இதை நிதி அமைச்சர் நாடாளுமன்றத்தில்
அறிவித்து இருக்கிறார். 80 சதவீதம் அமைப்புசாரா தொழிலாளர்களை
கொண்ட இந்திய தேசத்தின் உயிரோட்டமே பண பொருளாதாரத்தில்தான்
இருக்கிறது .அப்டி இருக்கும் பொது பணமில்லாத பொருளாதாரத்துக்கு
எப்படி தாவி குதிக்க முடியும்...?

இந்தியாவில் வாழும் மக்களில் 46 சதவீதம் பேருக்குத்தான்
வங்கியில் கணக்கு இருக்கிறது . இணைய இணைப்பு
22 சதவீதம்பேருக்கத்தான் சென்றடைந்து இருக்கிறது .
எப்படி எல்லோரையும் கிரடிட் கார்டு ,டெபிட் கார்டுகளை கொண்டு
பண பரிவர்த்தனனை செய்ய சொல்ல முடியும் ...?

500 ரூபாய்களாக ,1000 ரூபாய்களாக பதுக்கி வைத்து இருக்கும்
பழைய முதலாளிகளுக்கு புதிய 2000 நோட்டுகளை கொடுத்து
பதுக்க வைக்கும் திட்டமேயொழிய வேறொன்றுமில்லை.

Thursday 17 November 2016

கம்யூனிஸ்ட்டுகள் தவறும் போது....

கம்யூனிஸ்ட்டுகள் தவறும் போது
பாசிஸ்ட்டுகள் உருவாகிறாா்கள்....!
--------------------ரோசா லக்ஸம்பர்க்
உண்மை நிலைமையும் இதுதான் ..!

இந்திய கம்யூனிஸ்டுகளின்
அதி மேதாவி முட்டாள்த்தனத்தால்
தமது தளத்தை இழந்து இப்போ விழி பிதுங்கி
இங்கே நிற்கிறார்கள் .

ஜோதி பாசு மத்திய அரசில் பிரதமர் பதவி ஏற்கவேண்டுமென்று
இந்திய நாட்டில் உள்ள அரசியல் வாதிகள் ஒத்த குரலில்
சொன்னபோது ....?சிபிஎம் அப்போ இவர்களின் சித்தரகுத்த புத்தகத்தின்
( கட்சி திட்டம் , ) கடேசி பக்கங்கள் இடித்தது .அவர்கள் ஏற்கவில்லை .
அதனால் ஒட்டு மொத்த இடதுசாரிகளுக்கு உள்ள எதிர்காலத்தை
இழந்தார்கள் .


" இது இமாலய தவறு " என்று தோழர் ஜோதிபாசு சொன்னார் .
அது அப்போது எவர் காதிலும் விழவில்லை .

அதன் பிறகு அவர்களின் ( சி பி எம் )தங்களின் திட்டத்தை திருத்தி
சாரி மேம்படுத்தி ( வார்த்தை போடுவதில் இவர்களுக்கு நிகர் இவர்களே )
மத்திய மாநில அரசில் கிடைக்கும் வாய்ப்பை நிலைமைக்கேற்ப அங்கம்
வகிப்பது என்று திருவநநதபுரத்தில் நடந்த சிறப்பு மாநாட்டில் ஏற்றுக்கொண்டனர் .

இப்படி மாநாடு நடத்தி கிழே சொல்லி முடிக்கும் வரை
அரசியல் என்ன அங்கே நிற்குமா...? என்ன ...
இப்போ மாநாடு கூடி ஒரு முடிவு எடுத்தாலும் ,
சென்ற மாநாட்டில் எடுத்த முடிவு அமலாக்கமுடியவில்லையே ...? .
.இதான்இன்றைய இடதுசாரிகளின் நிலைமை .பலமும் அதுதான் ...
அவர்களின் பலகீனமும் அதுதான் ...!

சிங்கூர் ,நந்திகிராம் பிரச்சனையில் முதலில் சிபிஎம்-கு அடிகொடுத்தது இவர்கள் சொல்லும் இடது சாரிகள் தான் ...! நெக்ஸலைட் ,டியூப் லைட் எல்லாம் மமதாவின் முந்தானையின் மறைவில் நின்றுகொண்டு சிபிஎம்மை அடித்து நொறுக்கினார்கள் . அது கண்டிக்கத்தக்க நடவடிக்கை என்றாலும் அது ஒட்டு மொத்த இடது சாரிகளுக்கு ஏற்பட்ட தடைக்கல் .திரும்ப இடதுசாரி ஒற்றுமை ,ஐக்கியம் .இதெல்லாம் வேற்று கோஷம் . சிபிஐ - சிபிஎம் இணைப்பு ...அதை இருவருமே சொல்கிறார்கள் .உண்மையிலே அது தேவை ...நல்லது ... நாம் அதை வரவேற்போம் .


ஆனால்....சமீபத்தில் சிபிஎம்-ன் முதுபெரும் தலைவர் பிரகாஷ் காரத் சொன்னார் ... "தங்கள் பலத்தை உயர்த்திக்கொண்டு இரு கட்சிகளும் இணைவதாம் ...? " இதுதான் உலக மகா ஜோக் ...!

எதிரியை வீழ்த்த போதிய பலம் இல்லாததால்தான்.....
இரு கட்சிகளும் பலகீனமாக இருப்பதால்தான் இரு கட்சிகளும் ஒன்றாக இணையவேண்டும் என்ற கோஷமே வருகிறது ...? இருவரும் பலம் பெற்றால்...? ஏன் இணையவேண்டும் ...? இது சிறுபிள்ளைக்கு கூட தெரியும் அவ்வளவு  பெரிய தலைவருக்கு தெரியவில்லையா ...?


முடிவாக இன்றைய தேவை ...இடது சாரி ஐக்கியம் ! ...
இது தனி நபர்களின் அபிலாஷையல்ல ...
கொள்கையற்ற பதவிக்கான ஆசையல்ல ...
இன்றைய அவசிய அவசர தொழிலாளிவர்கத்தின் தேவை .
இரு கட்சிகளும் உணரவேண்டும் .


அப்படி அது நடைபெற ஒவ்வொரு கட்சியின் பெரியண்ணன்
மனோபாவம் தூக்கி எரிந்து விட்டு ....! ஆக்கபூர்வமான விவாதத்தை
மேற்கொண்டு ஐக்கியத்துக்கான முயற்சியை மேற்கொள்ளவேண்டும் என்பதே முற்போக்குவாதிகளின் எதிர்பார்ப்பு . ...!


Saturday 12 November 2016

. நட்பு தொடரும் ...




12 - 11-2016 மறக்க முடியாத இந்த நாள் ...!
என்னோடு 19 வயதில் அதாவது 1983 - 84 - களில்
நெருங்கி பழகிய என்னுடைய பள்ளி தோழியை
இன்று சந்தித்து பேசினேன் .

கடந்த 33 ஆண்டுகள் சந்திக்க முடியாதவர் .
இன்று சந்தித்ததும் உண்மையிலே ஏதும்
பேச முடியவில்லை . முகம் ,குரல் ,உருவம்
எல்லாமே மாறிப்போய் இருந்தது .

என்னுடைய மகன் திருமணத்திற்கு எப்படியோ
தேடி கண்டுபிடித்து அவருடைய வீட்டில் பத்திரிகை
வைக்க சென்றேன் . அப்போது கூட அவரை சந்திக்க
முடியாமல் அவருடைய கணவரிடம் கொடுத்துவிட்டு
என்னை அறிமுகப்படுத்திக்கொண்டு வந்துவிட்டேன் .

அவர் வரவில்லை என்பது கூட நினைவில் நிற்கவில்லை .
இன்று அவரை சந்தித்தபோது... வர முடியாமைக்கு
வருத்தம் தெரிவித்துக்கொண்ட போதுதான் மீண்டும்
அவரின் நினைவு மனதில் நின்றது .

ஏதும் அறியாத அந்த பருவத்தில் ... தன்னோடு படித்தவரை
மனதில் நிறுத்திக்கொள்ள முடிந்ததேயொழிய ...
அதற்கு எந்த அர்த்தத்தையும் கொடுக்க முடியவில்லை .

இன்று ....
இருவருமே இரண்டு குடும்பத்தின் பொறுப்புள்ள தலைவர்கள் .
காலம் கடந்த அந்த தோழமை ஒரு அர்த்தத்தை இருவருக்கும்
பொதுவில் வைத்தது . நட்பின் இலக்கணம் இன்னும் தொடரும் என்று ...


Friday 11 November 2016

பெண்ணுரிமை பேசும் மூடநம்பிக்கைவாதிகள்...




உலகில் பிறக்கும் எவரும் ,
பிறக்கும்போதே சமத்துவ சித்தாந்தத்தை
உள்வாங்கிக்கொண்டு பிறப்பதில்லை .
இந்த ஆணாதிக்க சமூகத்தில் எல்லாமே
ரத்தத்தில் இரண்டற கலந்துவிட்டது .


அதை உடனடியாக சுத்திகரிப்பு பண்ணி
எடுத்துவிட முடியாது . அதை செய்யவேண்டும்
என்பதைத்தான் பொதுவுடைமைவாதிகள்
முயல்கிறார்கள் .சீர்திருத்தவாதிகளும் அதற்க்கான
செயற்பாட்டில் இயங்குகிறார்கள் .




பெண்ணுரிமை பேசுவபவர்கள்
எல்லோரும் இப்படித்தான் இருக்கவேண்டும் என்று
ஒரு மீட்டர் வைத்து பரிசோதனை செய்யமுடியாது .
அதனால் பேசுவது ஒன்றும் செயலில் ஒன்றுமாக
இருங்கள் என்று சொல்ல வரவில்லை .
பேச்சும் செயலும் ஒன்றாக இருக்கவேண்டும்
என்பது சரிதான் ...!

அதுக்காக ஆண்கள் எல்லோரும்
சுத்தமில்லை .ஆண்கள் பேசினால் அது சுத்தமான
பெண்ணுரிமையாக இருக்காது என்ற தொனியில்
பேசுவதும்,எழுதுவதும் சாடுவதும் பித்துக்குளி நிலை
என்பதை இப்படி பேசும் ஒரு சில பெண்ணியவாதிகள்
உணரவேண்டும் .

பெண்ணாக பிறந்து பெண்ணுரிமை பேசுவோர்
மட்டுமே சுத்தம் சுயம்பிரகாசம் என்று நினைக்கும்
மூடநம்பிக்கைவாதிகளுக்கு பொருந்தும் .


Wednesday 9 November 2016

வார்த்தைக்குள் ...



அன்பும் , அழகும்
வார்த்தைக்குள்
அடங்குவதில்லை .

அழகு





எத்தனை முறை மறைத்தாலும் ..
உயிரைப்போல எங்கோ
ஒளிந்துகிடக்கிறது ..! அழகு .



Saturday 5 November 2016

பன்னாடை...!




பன்னாடை தென்னை - பனை மரத்தை ( குருத்தை )
பாதுகாக்கும் உறை .குருத்து வலுவடைந்து
ஓலை வெளியே வந்த பிறகு அந்த மரத்துக்கு
அது தேவையற்றதாக ஆகிவிடுகிறது .
அதை மரமேறிகள் கள்ளை வடிகட்ட
பயன்படுத்துகிறார்கள் .

வடிகட்டாத கள்ளை குடிகாரர்கள் பார்த்தல் ...?
ஒருவேளை குடிக்காமல் இருக்க வாய்ப்பு இருக்கிறது .
ஏனென்றால் கள்ளில் பாம்பு...பல்லி ...பூரான் ...சிலந்தி...
கருவண்டு ....தேள் வண்ணத்துப்பூச்சி , கிடக்கும் .
அதை மரத்தின் மேலே வடிகட்டப்படும். அதற்கு நல்ல பில்டர் ...
இந்த பன்னாடை....!
சரியானதை தவறாக பயன்படுத்தப்படும் சொல் .


Friday 4 November 2016

மூளையை கழுவுங்கள் ...!


பதிவுக்கு விமர்சனம் வந்தால்
அதற்க்கான நியாயமான பதிலை
சொல்லவேண்டும். அதை சொல்ல
வரும்போது அதை கேள்வி கேட்டவர்
பொறுமையாக காதுக்கொடுக்கவும் ,
( பொறுமையாக படிப்பது ) தெரியணும் .

இதற்கு அறிவாளி ,முண்டம்
என்பதெல்லாம் ஒன்றுமில்லை .
பதிவு போடுபவரைவிட படிப்பவர்கள்
புத்திசாலிகளாக இருக்கிறார்கள்
என்பதை பதிவிடும் எவரும்
நினைக்கவேண்டும்.

குறிப்பாக பெண்கள் பக்கங்களில்தான்
இப்படிப்பட்ட விமர்சனங்கள் வருகிறது .
இவைகள் உண்மையில்லை என்று
சொல்வதற்கில்லை . 99% உண்மைதான் .
கீழ்த்தரமான பதிவுகள் ,பதில்கள் வரும்போது
அதை தடை செய்ய முயலாமல் பதிலுக்கு
அதைவிட கேவலமாக பேசுவதும்,
எழுதுவதும் கேடுகெட்டத்தனம் .

அதுமட்டுமல்லாமல் நீ யாருன்னு சொல்லு,
இல்லேன்னா இன்பாக்சில் நீ எழுதிய
அத்தனையும் வெளியிடுவேன்னு மிரட்டுவது ...?
இதை ஆணும் பெண்ணும் இருவருமே
செய்கிறார்கள் .

சென்ராயன்,டுபுக்கு ,காலாக்கிறாங்க ,
அலப்பறை , என்ன டிஸைன்னோ ,
கழுவி,கழுவி ஊத்துவது ...?
இதெல்லாம் என்ன மொழி, என்ன
அர்த்தம்...?

குறிப்பாக ....கழுவி,கழுவி ஊத்துவது ...?
இந்த வார்த்தையை சகிக்க முடியவில்லை .
எண்ணத்தை கழுவி ஊத்துவது ...?
யார்... யார் மீது கழுவி ஊத்துவது ...?
எதை கழுவி ஊத்துவது ...?
எங்கே கழுவி ஊத்துவது ...?
இவற்றையெல்லாம் எழுதுவோருக்கு
ஒரு வார்த்தை சொல்ல விரும்புகிறேன் .

உங்கள் உடலை கழுவுகிறீரோ இல்லையோ ...?
உங்கள் மூளையை கழுவி நாக்கை வழித்து
பேனாவை சுத்தப்படுத்தி எழுதுங்கள் .
உங்கள் எழுத்து உலகம் முழுவதும்
நாறிக்கிடக்கிறது .



Thursday 3 November 2016

ஒரு முறையே போதுமானது ...



ஒவ்வொரு மனிதனும்
ஒரு முறைதான் பிறக்கிறான் .
மீண்டும் வருவான் என்பதெல்லாம் ...
மதங்களின் வெற்றுவார்த்தை .


ஒரு முறையே போதுமானது
பிறருக்காக வாழும் பொது ...


Wednesday 2 November 2016

மறதியே உன்பேர்த்தான் " தமிழனோ ..? "

 



          கடந்த ( 2016 ) செப் - 22 ல் கோவையில் உள்ள சுப்ரமணியபாளையத்தில் இந்து முன்னணி பிரமுகர் சசிகுமாரை அடையாளம் தெரியாத மர்ம கும்பல் ஒன்று கொலை செய்து விட்டு ஓடிவிட்டதாக சொன்னார்கள் . மத்திய இணை அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணனோ, தமிழகத்தில் இந்து இயக்க தலைவர்கள் கொலையில் சர்வதேச சதி இருக்கிறது என கூறியிருந்தார்.

              ஐம்பதுக்கும் மேற்பட்ட கடைகள் சூறையாடப்பட்டன . முஸ்லீம் செல்போன் கடை அடித்து உடைத்து கொள்ளையடிக்கப்பட்டது . 20 க்கு மேற்பட்ட பஸ்கள் உடைத்து, எரிக்கப்பட்டன.துடியலூர் மகாலட்சுமி பேக்கரிக்குள் நுழைந்தும் சூறையாடினர். முஸ்லீம் பிரியாணி கடையை உடைத்து பிரியாணி குண்டானை காலி செய்தனர் .
முடிவில் அதே இந்து முன்னணியை சேர்ந்தவர்களே சசிகுமாரை வெட்டிக் கொன்றது அம்பலமானது .

           அரசு பஸ்சும் , முஸ்லீம் கடைகளும் அடித்து நொறுக்கப்பட்டதில் பல கோடி ரூபாய்சேதமடைந்ததோடு வெறியாட்டத்தை நடத்தினார்கள் .இதற்கெல்லாம் யார் பொறுப்பேற்றார்கள் ..? மதவெறி பிடித்த இந்து முன்னணி மீது தமிழக அரசு என்ன நடவடிக்கை எடுத்தது ...? எல்லாவற்றிக்கும் சர்வரோக நிவாரணி நீதிமன்றம் என்று ஊடகங்கள் பறை சாட்டுகிறதே ...?

           இந்த கலவரத்துக்கு பொறுப்பான இந்து முன்னணி மீது அவர்களின் தலையீடு என்ன ...? காலம் கடந்தால் எல்லாம் மறந்துபோகும் என்ற கீழ்த்தரமான
நம்பிக்கைக்கு இன்னும் எத்தனை காலம்தான் தமிழன் உயிர் கொடுக்க போகிறானோ தெரியவில்லை.



Tuesday 1 November 2016

மயிர்பிளக்கும் விவாதம்...




முக நூலில் நிறைய பெண்கள் இருந்தாலும்
ஒரு சில பெண் தோழர்களே பெண்ணியம் ,
ஆணாதிக்கத்தை எதிர்த்த பதிவுகளை பதிவிடுகிறார்கள் .
அவர்களிடம் ஒரு சிலர் இன்பாக்சில் போய்
கீழ்த்தரமாக பேசுவதாக ஒரு சிலர்
அவர்களின் பக்கத்தில் பதிவு செய்கிறார்கள் .

அப்படி இன்பாக்சில் கேவலமாக நடந்துகொள்பவர்கள்
எவராக இருந்தாலும் அதை அனுமதிக்க முடியாது .
அவர்களை பற்றி ரிப்போர்ட் அடிக்க முடியும் .
இல்லையென்றால் அவர்களை ஒரேயடியாக
நண்பர் பட்டியலிலிருந்து நீக்க முடியும் .
சைபர் கிரைம் பிரிவில் புகார் கொடுக்க முடியும் .
அதை செய்யுங்கள். அதுதான் சரியாக இருக்கும் என
நினைக்கிறேன் . அதை விடுத்து வீணர்கள் செய்த
அநாகரீகத்தை மீண்டும் பதிவிட்டு காலத்தை
வீணடிக்கின்றனர் .

இப்படி சொல்வதால் ஆண்களுக்கு வக்காலத்து அல்ல .
எருமை மாடு சேற்றில் படுத்து உருண்டுவிட்டு
வழியே செல்லும் நம் மீது வாலில் உள்ள சேற்றை
வீசினால் ...? நாமும் சேற்றைவாரி அதன் மீது
வீசுவதல்ல . ஏன் இதை சொல்கிறேன் என்றால்
முற்போக்கான பெண்கள் ஒரு சிலரே முக நூலில்
இருக்கிறார்கள் .அப்படிப்பட்டவர்களின் சிந்தனையை
வேறு பக்கம் திருப்புவதற்கு இப்படிப்பட்ட வேலைகளை
அவர்கள் திட்டமிட்டு செய்வதற்கும் வாய்ப்பு இருக்கிறது .

வீணர்களிடம் வெட்டி,ஒட்டி மயிர்பிளக்கும் விவாதத்தை
நடத்துவதைக்காட்டிலும் பெண்ணிய ஒடுக்குமுறைக்கு
எதிரான கருத்து பிரச்சாரத்தை சமூக வலைதளத்தில் 
செய்ய வேண்டிய அவசர அவசிய தேவை இருக்கிறது 
என்பதை அவர்களின் மேலான கவனத்திற்கு கொண்டு 
வருகிறேன்.

நினைவு ஸ்துபி



நிராயுதபாணிகள்
களமாடுவதில்லை .

மௌனித்து கிடக்கும்
யுத்த களம் .


நினைவு ஸ்துபியாய்
நின்று தொலைக்கட்டும் .



வீணர்கள் அல்ல ... பெண்கள் .





முக நூலில் நிறைய பெண்கள் இருந்தாலும்
ஒரு சில பெண் தோழர்களே பெண்ணியம் ,
ஆணாதிக்கத்தை எதிர்த்த பதிவுகளை பதிவிடுகிறார்கள் .
அவர்களிடம் ஒரு சிலர் இன்பாக்சில் போய்
கீழ்த்தரமாக பேசுவதாக ஒரு சிலர்
அவர்களின் பக்கத்தில் பதிவு செய்கிறார்கள் .





அப்படி இன்பாக்சில் கேவலமாக நடந்துகொள்பவர்கள்
எவராக இருந்தாலும் அதை அனுமதிக்க முடியாது .
அவர்களை பற்றி ரிப்போர்ட் அடிக்க முடியும் .
இல்லையென்றால் அவர்களை ஒரேயடியாக
நண்பர் பட்டியலிலிருந்து நீக்க முடியும் .
சைபர் கிரைம் பிரிவில் புகார் கொடுக்க முடியும் .
அதை செய்யுங்கள். அதுதான் சரியாக இருக்கும் என
நினைக்கிறேன் .




அதை விடுத்து வீணர்கள் செய்த அநாகரீகத்தை

மீண்டும் பதிவிட்டு காலத்தை
வீணடிக்கின்றனர் .இப்படி சொல்வதால் ஆண்களுக்கு

வக்காலத்து அல்ல .எருமை மாடு சேற்றில் படுத்து

உருண்டுவிட்டு வழியே செல்லும் நம் மீது வாலில்

உள்ள சேற்றை வீசினால் ...? நாமும் சேற்றைவாரி

அதன் மீது வீசுவதல்ல ....!




ஏன் இதை சொல்கிறேன் என்றால் ...

முற்போக்கான பெண்கள் ஒரு சிலரே முக நூலில்
இருக்கிறார்கள் .அப்படிப்பட்டவர்களின் சிந்தனையை
வேறு பக்கம் திருப்புவதற்கு இப்படிப்பட்ட வேலைகளை
அவர்கள் திட்டமிட்டு செய்வதற்கும் வாய்ப்பு இருக்கிறது .







வீணர்களிடம் வெட்டி,ஒட்டி மயிர்பிளக்கும் விவாதத்தை
நடத்துவதைக்காட்டிலும் பெண்ணிய ஒடுக்குமுறைக்கு

எதிரான கருத்து பிரச்சாரத்தை சமூக வலைதளத்தில்

செய்ய வேண்டிய அவசர அவசிய தேவை இருக்கிறது

என்பதை அவர்களின் மேலான கவனத்திற்கு கொண்டு வருகிறேன் .