Tuesday 18 September 2018

அருந்ததிய மக்களின் போராட்டம் சாதிய போராட்டம் அல்ல...


அருந்ததிய மக்களுக்கான ஒடுக்குமுறை
எதிர்த்த போராட்டம் . அவர்களுக்கான
கல்வி - வேலை வாய்ப்பில் இட ஒதுக்கீடு
பெறுவதற்கான போராட்டம் என முக நூலில் நான் போடும் பதிவுகளை படிக்கும்
நண்பர்கள் என் கோரிக்கைக்கான
நியாயத்தை பார்க்காமல் நான் யார் ... ?
என்பதை பற்றியே தேடுகிறார்கள் .

நான் அந்த சாதியும் இல்லை.
சாதிக்கு முக்கியத்துவம் கொடுப்பவனும் இல்லை..இட ஒதுக்கீடு சாதி அடிப்படையிலே கொடுக்கப்பட்டு வருகிறது.

அதனால் ...
சாதிய படிநிலை கட்டமைப்பை
உங்களை போன்ற சேவை செய்வோர் தெரிந்து கொள்ளவேண்டும் .

பெரியார் சமூக நீதி போராளி.
சமூக நீதி என்றால் ...?
1. சமூகத்தில் ...
2 .கல்வியில் ...
3.வேலைவாய்ப்பில் ...
சமத்துவம் வேண்டும்
என்று போராடியவர்.
அதற்கு இட ஒதுக்கீடு
வேண்டும்.
ஆகவே சாதிய கணக்கெடுப்பு
நடத்தி இட ஒதுக்கீடு கொடுக்க
வேண்டும் என்றார்.அதை போராடியும் பெற்று தந்தார்.

இட ஒதுக்கீடும் தற்காலிக
ஏற்பாடுதானேயொழிய
நிரந்த தீர்வு இல்லை என்பதையும் சொன்னார்.

அடுக்கப்பட்ட மூட்டையில்
அடி மூட்டை தலித் என்ற ஒடுக்கப்பட்டோர்.
என்றனர்.ஒடுக்கப்பட்டோர் என்றால்..?
தமிழகத்தில் பள்ளர் ,பறையர்
என்றனர்.

ஆனால் ...
அவர்களுக்கும் கீழே சக்கிலியர்
என்ற அருந்ததிய மக்கள் இருக்கிறார்கள் என்பதும் ,அவர்களை பள்ளரும் ,பறையர்
என்ற சமூகத்தினர் சமூக ரீதியாக ஒடுக்குகிற்றார்கள்என்பதும் , தமக்கு கீழே அருந்ததிய மக்கள் இருக்க
வேண்டும் என்றும் அவர்களோடு கொடுப்பனை,கொள்வனை செய்வது கூடாது என்று சொல்வதோடு அவர்களும் தீன்ண்டாமையை அருந்ததிய மக்கள் மீது கடைபிடித்தார்கள். 

கவுரவ கொலையை பறையர்
செய்தார்கள் என்ற செய்தி
கரடி சித்தூர் , திருப்வனை ,
சந்தையூர் தீண்டாமை சுவர்,
விழுப்பத்து அருகம்பட்டு
காதல் திருமணம் செய்தவர்கள்
என்ற காரணத்தை காட்டி அருந்ததிய
மக்கள் மீது வன்முறை நிகழ்த்தினர்.
இந்த செய்தி வெளியே வந்த பிறகே அருந்ததியசமூகத்து மக்களுக்கான சமூக ,
விடுதலை , கல்வி வேலை வாய்பில் இட ஒதுக்கீடு தேவைபற்றி பேசவேண்டிய தேவைஏற்பட்டது.

தாழ்த்தபட்ட மக்களை தொட்டால் தான்" தீட்டு என்று சொன்ன மனு தர்மம்.
மரம் ஏறி தொழில் செய்யும்
நாடார் ,(சாணார் , ஈழவர்கள் )
என்ற சாதிய மக்களை பார்த்தாலே "தீட்டு " என்றுஒதுக்கி வைத்ததோடு அவர்கள்
(ஜாக்கெட் அணியாமல் ) மேலாடை துணி ஏதும் போடாமல் திறந்த மேனியாகவே வாழ வேண்டும்என்று நிர்பந்தித்தனர்.
அதிலிருந்து போராடி அவர்கள்
இன்று வெற்றி பெற்று உள்ளனர்

ஆனால் ...
சக்கிலியர் சமூகம் என்ற அருந்ததிய மக்கள் தமிழகத்தில்ப்போராடி
பறையர்க்கு கொடுக்கப்பட்ட
இட ஒதுக்கீட்டில் 3 % உள்
ஒதுக்கீடு பெற்று விட்டனர்.
புதுச்சேரியில் இன்று வரை
அருந்ததிய சமூகத்து மக்களுக்கு இட ஒதுக்கீடுஇல்லை . 

அதை கேட்ட போராட்டம் தான்சமூக நீதி கட்சி சார்பில் கோவை .
பன்னீர்செல்வம் தலைமையில்
புதுச்சேரியில் நேற்று (17 - 9 - 2018 ) நடைபெற்றது
அது ஒரு சமூகத்து மக்களின்
சமூக நீதி போராட்டம் .
அது சாதிய போராட்டம் அல்ல..
நானும் சாதிக்காரன் அல்ல.
சராசரி மனிதனில் ஒருவன்.
என்பதை உணர வேண்டுகிறேன்.