Thursday 24 December 2015

இந்திய வம்சாவளி எனும் அடிமை சொல்...!



இலங்கை மலையக
முகநூல் நண்பர்களே ...!
வணக்கம் .

,இலங்கையில் வாழும் மலையக மக்கள் பல நூறு
ஆண்டுகளாய் மூன்றாம் தர மக்களாய் வாழ்ந்து
வருகிறார்கள் .

அவர்கள் பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு
பஞ்சம் பிழைக்கவே இந்தியாவிலிருந்து
குறிப்பாக தமிழகத்திலிருந்து போனவர்கள்
என்பது மறுக்கமுடியாது .

கடந்த ஐந்து தலைமுறையாக
இலங்கையில் மலையக பகுதியில் தேயிலைத்தோட்டத்.தொழிலாளியாக
வாழ்ந்து வருகிறார்கள் .

 இலங்கை அரசும்  இதுவரை
எந்தவித அடிப்படை உரிமையும்
செய்து கொடுக்காத்தது மட்டுமல்ல ...

தனியார் தேயிலை எஸ்டேட்  நிர்வாகமும்
லயன்கள் என்ற கொட்டடையில்
மலையக மக்களை எந்தவித அடிப்படை
வாழ்வுரிமையும் கொடுக்காமல் உழைப்பை
சுரண்டுவதையும் கண்டுகொள்வதே இல்லை .

பல பிரதேசங்களில் பிரஜா உரிமை கூட
இல்லாமலே வாழ்ந்து வருகிறார்கள் .
வெளி உலகிற்கே தெரியாது .

மலையக மக்களுக்காக குரல் கொடுப்போம்
என்று சொன்னவர்கள் எல்லாம்
மலையக மக்களின் வாக்குகளை
வாங்கி சென்று ஆளும் அரசுக்கு அடிபணிந்து அவர்களின் செருப்பை நக்கியே பிழைத்து போனார்கள் .

இலங்கை பேரினவாத அரசோடு போராடிய
ஈழ போராளிகளில் சக போராளியாக போராட
வந்த இளைஞர்களையும் பெரியண்ணன்
மனோபாவத்தில் இருந்த போராளி குழுக்கள்
தீண்ட தகாதவர்களாக மலையக இளைஞர்களை
வெறுத்து ஒதுக்கினார்கள் .

ஒடுக்கப்பட்டவர்களில் மலையக மக்கள் தான்
அடுக்கப்பட்ட மூட்டைகளில் அடிமூட்டையாக
அழிந்து போனவர்கள் . இவர்களுக்கான
விடுதலை பற்றிபேசுவர்களும்
இந்திய வம்சாவளியினர் என்று சொல்வதன் மூலம்
வந்தேரிகள் நாங்கள் என்று. தாங்களாகவே    தம்பட்டம் அடித்துக்கொண்டு வருகிறார்கள் .

நீண்டகாலமாக என் நெஞ்சில் இந்திய வம்சாவளி
என்று கதை அடிப்போர் பற்றி எழுந்த கேள்விகளை கிழே தொகுத்துள்ளேன் .

விளக்கம் சொல்லும் தகுதி உள்ளவர்கள்
விளக்கலாம் .

 1. இந்திய வம்சாவளியினர் என்று சொல்வது சரியா.?

 2. அப்படி தொடர்ந்து மலையக மக்கள் சொல்வதால்
அவர்களுக்கு அது நன்மையா ...? தீமையா...?

"3. இந்திய வம்சாவளி " என்ற. சொற்றொடர் சரியா...?

4. இல்லை ,"இந்திய வம்சாவழியினர் " அல்லது
"இந்திய வழித்தோன்றல் " என்பது சரியா...?

5. அடிப்படையான வாழ்வுரிமை இல்லாமல் அல்லாடும் மலையக மக்களை இந்திய வம்சாவழியினர் என்று தொடர்ந்து சொல்வது மூலம். அவைகளை பெறமுடியுமா ...?

இந்த கேள்விக்கெல்லம் விடை காணமுடியாமல்
இருந்து வருகிறேன் .
தங்களால் முடிந்தால். எவர் வேண்டுமானாலும் விளக்கவும் .