Sunday 4 August 2013

அரேபியர்கள் ...இந்தியரல்ல ..!

                                                     
                   

                                                                        அரபு நாடுகளில் நிறைவேற்றப்படும் மரண தண்டனைகளை சில நண்பர்கள் பதிவு செய்கிறார்கள் அதை பார்த்து .மனம் சங்கடப்பட்டது .மிக்க வேதனை அடைந்தேன் . அவர்கள் இந்த காட்சியை எதற்காக பகிர்ந்தீர்கள் என்று எனக்கு புரியவில்லை . இதை விடவும் கொடுமையாக மரணதண்டனை ஒரு பெண் விபச்சாரம் செய்தாள் என்பதற்காக அவளை உயிரோடு கழுத்து மட்டம் வரை புதைக்கப்பட்டு கல்லால் அடித்து கொல்வதையும் , இன்னொருவர் வாளால் வெட்டி மரணதண்டனை நிறைவேற்றுவதையும் பார்த்து இருக்கேன் . இந்த மரண தண்டனைகள் நிறைவேற்றப்படும்போது பள்ளிவாசலிருந்து "பாங்கு" வாசிப்பதையும் அதன் பிறகே தண்டனை நிரவேற்றப்படுவதையும் பார்த்தேன்
                                                                                                                                                                                .                              இதை முதன் முதலில் பார்க்கும்போது என்னால் தூங்க முடியவில்லை !நான் அவர்களிடம் கேட்பது என்னவென்றால் " இஸ்லாம் மார்க்கத்தை தழுவாத, ஷரியத் அல்லது அரபு நாட்டின் சட்டம் தெரியாத மக்களுக்கு நீங்கள் பகிர்ந்த இந்த பகிர்வு பார்க்கும் என்ன மாதிரியான உணர்வு தோன்றும் என்பதை நீங்கள் ஊகித்தது உண்டா ? சரி இப்படிப்பட்ட பதிவுகள் பதிவு செய்வதன் மூலம் என்ன சொல்ல வருகிறீர்கள் ? இஸ்லாமிய சட்டம் உங்களுக்கு வேண்டுமானால் உங்கள் புரிதலுக்கு சரியாக இருக்கலாம் ! மற்றவர்களுக்கு ? ஓரளவுக்கு புரிதல் கொண்ட என்னாலே அவற்றை தாங்க முடியவில்லை . ஏற்கனவே இஸ்லாமிய மக்கள் "விரோதிகள் "என்ற வெறி ஊட்டப்பட்டுள்ள இந்திய மக்களுக்கு இந்த பதிவு எப்படி இருக்கும் ?

                                  அதுமட்டுமல்ல இப்படிப்பட்ட கொடூரமான மரணதண்டனை நிறைவேற்றுவது அரபு நாடுகளுக்கு வேண்டுமானால் வழக்கமாக .... மரபாக , நெறியாக இருக்கலாம் இந்தியாவில் ? அங்கு நிறைவேற்றப்படும் தண்டனையை இங்கே மனதில் பதியும்படி பதிவிடுவது ஏன் ?
எங்கள் ஊரில் உள்ள பள்ளி வாசலின் பாங்கு சத்தம் கேட்டவுடன் மரணதண்டனை நிறைவேற்றப்படும் காட்சி என் மனத்திரையில் இன்றும் ஓடுகிறது ! இதற்கெல்லாம் உங்களைபோன்ற ஞானம் இல்லாதவர்களின் செயல்பாடு என்று என் மனதை சரிகட்ட முடியவில்லை !

                                                                     இஸ்லாத்தை தழுவிய மனிதநேயமிக்க நல்ல நண்பர்கள் இன்றும் என்னுடன் இருகிறார்கள் என்னை பொருத்தவரை மதங்களைவிடவும் ,மனிதர்களை நேசிப்பவன் நான் . யாரும் உங்களிடம் சொல்ல தயங்கி இருப்பார்கள் ,இல்லையென்றால் கண்மூடித்தனமாக உங்கள் செயல்பாட்டை....,இஸ்லாத்தை..... தூற்றி இருப்பார்கள் !

                                  எல்லா மதங்களிலும் நோன்பு கடைபிடிக்கப்படுகிறது. அதில் வித்தியாசம் இருக்கலாம் . நோன்புக்கென்று ஒரு மாதத்தை ஒதுக்கி " இறைவன் மட்டுமே பெரியவன் " அவன் இம்மைக்கும் மறுமைக்கும் "வழி காட்டுபவன் என்று விரதம் இருக்கும் இந்த நாட்களிலா ..... இப்படிப்பட்ட செய்திகள் ....... ? இப்படிப்பட்ட பகிர்வுகளை பதிவிடும் நண்பர்கள் கவனிப்பார்கள் என்ற நம்பிக்கையில் இதை பதிவிடுகிறேன் ! தவறு இருப்பின் பெரும்தகையாய் மன்னிக்கவும் ....  

         

                                   

5 comments:

  1. idiot first of all u read our quran aan hadeed, it will gives u right way ok

    ReplyDelete
  2. R Manivannaa Mani உங்களுக்கு உங்களது கருத்து சரியாகவிருக்கலாம், அத்துடன் உங்கள் நாட்டில் மருத்துவக்கல்லூரி மாணவி கற்பழிப்பு மற்றும் வினோதினி போன்றோருக்கெதிராக இடம்பெற்ற சம்பவங்களுக்கு என்ன தண்டனை கொடுக்க போகின்றீர்கள்!!??

    உங்கள் நடைமுறையில் காமக்கொடூரர்களுக்கு தண்டணை என்ன, தண்டணை கொடுக்காமல் அவர்களை விட்டு விடலாமா, அவர்களை விட்டு வைத்து ஏனைய பெண்களையும் அவர்களுக்கு இரையாக்கி விடுவோமா!!??

    தலை வெட்டப்பட முன் பாங்கு சத்தம் கேட்பதாக சொன்னீர்கள் அது பாங்கு அல்ல, பாங்கில் வருகின்ற அல்லாஹு அக்பர் என்ற வார்த்தை மட்டுமே, பாங்கு ஒரு நாளைக்கு 5 தடவைகள் சொல்லப்படுவது தொழுகைக்கு மட்டுமே.

    உங்கள் குடும்பத்தில் ஏதாவது சம்பவங்கள் நடைபெறாத வரை இத்தண்டணைகள் கொடூரமானதாகவேயிருக்கும் மன்னிக்கவும்.......

    உங்கள் குடும்பங்களில் ஏதாவது அசம்பாவிதங்கள் இடம்பெற்றால், பாரிய தண்டணை கொடுக்க வேண்

    ReplyDelete
  3. மனித இனம் தவருகள் செய்யக் கூடியவைதான் ஒவ் ஒரு விதத்திலும் வெவ் வேரு வையிலும் மனிதன் தவருகள் செய்துகொண்டுதான் இருக்கிரான்.மனிவன்னன் சொல்வது 100சதவிதம் சரியே,,. சவுதியன் அத்தனை பேரும் உத்தமனா?

    ReplyDelete
    Replies
    1. I don't even consider to give respect for you like illiterate bast#$@#.. but I do.. yes mr.samsudeen.. in Quran or Hadith its no where said take saudi people as your role model or all saudia's are perfect.. Man does mistake ofcource yes its true and nature.. but understand mistake never associate with sin... oki first know the difference b/w this.. and then come to comment idoi$#... if you have ny personal disputes with saudia's show to them. don't be a coward you stup$#

      Delete
  4. மனித இனம் தவருகள் செய்யக் கூடியவைதான் ஒவ் ஒரு விதத்திலும் வெவ் வேரு வையிலும் மனிதன் தவருகள் செய்துகொண்டுதான் இருக்கிரான்.மனிவன்னன் சொல்வது 100சதவிதம் சரியே,,. சவுதியன் அத்தனை பேரும் உத்தமனா?

    ReplyDelete