Monday 29 July 2013

நேசிப்பு ......உடலையல்ல ! உள்ளத்தை .....


                                                                   

                                                   எற்றத்தாழ்வுகளுக்கான சமூக கட்டு வரம்புகளை உடைத்தெறிந்து   அதையும்     தாண்டி நேசிப்பை    விசாலப்படுத்தும்போது உலகில் உயிர் பெற்ற அத்தனை உயிர்களும் உங்கள் வசப்படும் !    காக்கை குருவி எங்கள் ஜாதி ! நீள்கடலும் மலையும் எங்கள் கூட்டம் ! நோக்க நோக்க களியாட்டம் நோக்கும் திசையெல்லாம் ..... என்றான் அந்த மகா கவி !   நாம் மகா கவியாய் ஆகாவிட்டாலும் மனிதனாகவாவது     இருக்கவேண்டாமா ?

                               நேசிப்பு என்றாலே பெண் -ஆணையும் ,ஆண் - பெண்ணையும் நேசிப்பதையே அர்த்தப்படுத்தப்படுகிறது .அது இன கவறுதலுக்கான நேசிப்பு ! எந்த ஒருமனிதன் தன்னை நேசிக்க கற்றுக்கொண்டானோ ? அவனே சக மனிதனை நேசிக்க கூடியவன்

                                                ஒவ்வொரு மனிதனும் பிறரை மதிக்க..  வேண்டும் என்பது யாரும் எழுதிய சட்டமல்ல ......... மாறாக மனிதர்கள் கடைபிடிக்கும் ஒழுங்கு   முறை ,   மதிக்கவேண்டும்    என்பதன்    அர்த்தம்தான்      என்ன ? மற்றவர்களை நேசிப்பதே மதிப்பதாகும் .மற்றவரை   நேசிக்கும்    எண்ணம் ஒருவருக்கு வந்துவிட்டாலே அவரின் செயல்பாடு மாறிவிடும் அந்த மாற்றம் உடல் மொழியாக மாற்றம் பெரும் ! . தன்னை தானே      வெறுத்தொதுக்கும் எவரும் நீண்ட நாட்கள் வாழ்வதில்லை !ஆகவே முதலில் தன்னை நேசிக்க கற்றுக்கொள்ளுங்கள்

                                               தாய் தன் குழந்தைக்கு கொடுத்த முத்தத்தை எண்ணி சொல்ல முடியுமா ? அந்த நேசிப்புக்கு அளவு இல்லை , தன் குழந்தையை தன் உடலின் ஒரு பகுதியாகவே அவள் பார்ப்பதால் எச்சில் .மல ஜலம் எதுவும் அவளுக்கு தெரிவதில்லை ! மனிதன் அளவிட முடியாத அந்த    நேசிப்பை தாய்மை என்ற ஒரு வார்த்தைக்குள் அடைக்க முடியவில்லை . நேசிப்பும் , சகிப்பும் கொண்ட அவளை எத்தனை விடுதியில்         விட்டாலும் இன்னும்...... இன்னும்.....மிச்சம் வைத்திருக்கிறாள் தான் உருவாக்கிய உயிருக்காக நேசிப்பை ! மனிதனாக இருப்போம் ! சக மனிதனை நேசிப்போம் !

No comments:

Post a Comment