Sunday 28 July 2013

அரேபியர்கள் ......இந்தியரல்ல !

                             


                                                                   









                            அரபு நாடுகளில் நிறைவேற்றப்படும் மரண தண்டனைகளை சில நண்பர்கள் பதிவு செய்கிறார்கள் அதை பார்த்து .மனம் சங்கடப்பட்டது .மிக்க வேதனை அடைந்தேன் . அவர்கள் இந்த காட்சியை எதற்காக பகிர்ந்தீர்கள் என்று எனக்கு புரியவில்லை . இதை விடவும் கொடுமையாக மரணதண்டனை ஒரு பெண் விபச்சாரம் செய்தாள் என்பதற்காக அவளை உயிரோடு கழுத்து மட்டம் வரை புதைக்கப்பட்டு கல்லால் அடித்து கொல்வதையும் , இன்னொருவர் வாளால் வெட்டி மரணதண்டனை நிறைவேற்றுவதையும் பார்த்து இருக்கேன் . இந்த மரண தண்டனைகள் நிறைவேற்றப்படும்போது பள்ளிவாசலிருந்து "பாங்கு" வாசிப்பதையும் அதன் பிறகே தண்டனை நிரவேற்றப்படுவதையும் பார்த்தேன் . இதை முதன் முதலில் பார்க்கும்போது என்னால் தூங்க முடியவில்லை ! 

                                            நான் அவர்களிடம் கேட்பது என்னவென்றால் " இஸ்லாம் மார்க்கத்தை தழுவாத, ஷரியத் அல்லது அரபு நாட்டின் சட்டம் தெரியாத மக்களுக்கு நீங்கள் பகிர்ந்த இந்த பகிர்வு பார்க்கும் என்ன மாதிரியான உணர்வு தோன்றும் என்பதை நீங்கள் ஊகித்தது உண்டா ? சரி இப்படிப்பட்ட பதிவுகள் பதிவு செய்வதன் மூலம் என்ன சொல்ல வருகிறீர்கள் ? இஸ்லாமிய சட்டம் உங்களுக்கு வேண்டுமானால் உங்கள் புரிதலுக்கு சரியாக இருக்கலாம் ! மற்றவர்களுக்கு ? ஓரளவுக்கு புரிதல் கொண்ட என்னாலே அவற்றை தாங்க முடியவில்லை . ஏற்கனவே இஸ்லாமிய மக்கள் "விரோதிகள் "என்ற வெறி ஊட்டப்பட்டுள்ள இந்திய மக்களுக்கு இந்த பதிவு எப்படி இருக்கும் ? அதுமட்டுமல்ல இப்படிப்பட்ட கொடூரமான மரணதண்டனை நிறைவேற்றுவது அரபு நாடுகளுக்கு வேண்டுமானால் வழக்கமாக .... மரபாக , நெறியாக இருக்கலாம் இந்தியாவில் ? அங்கு நிறைவேற்றப்படும் தண்டனையை இங்கே மனதில் பதியும்படி பதிவிடுவது ஏன் ?

                                                               எங்கள் ஊரில் உள்ள பள்ளி வாசலின் பாங்கு சத்தம் கேட்டவுடன் மரணதண்டனை நிறைவேற்றப்படும் காட்சி என் மனத்திரையில் இன்றும் ஓடுகிறது ! இதற்கெல்லாம் உங்களைபோன்ற ஞானம் இல்லாதவர்களின் செயல்பாடு என்று என் மனதை சரிகட்ட முடியவில்லை !

                                                               இஸ்லாத்தை தழுவிய மனிதநேயமிக்க நல்ல நண்பர்கள் இன்றும் என்னுடன் இருகிறார்கள் என்னை பொருத்தவரை மதங்களைவிடவும் ,மனிதர்களை நேசிப்பவன் நான் . யாரும் உங்களிடம் சொல்ல தயங்கி இருப்பார்கள் ,இல்லையென்றால் கண்மூடித்தனமாக உங்கள் செயல்பாட்டை....,இஸ்லாத்தை..... தூற்றி இருப்பார்கள் !

                                                எல்லா மதங்களிலும் நோன்பு கடைபிடிக்கப்படுகிறது. அதில் வித்தியாசம் இருக்கலாம் . நோன்புக்கென்று ஒரு மாதத்தை ஒதுக்கி " இறைவன் மட்டுமே பெரியவன் " அவன் இம்மைக்கும் மறுமைக்கும் "வழி காட்டுபவன் என்று விரதம் இருக்கும் இந்த நாட்களிலா ..... இப்படிப்பட்ட செய்திகள் ....... ? இப்படிப்பட்ட பகிர்வுகளை பதிவிடும் நண்பர்கள் கவனிப்பார்கள் என்ற நம்பிக்கையில் இதை பதிவிடுகிறேன் ! தவறு இருப்பின் பெரும்தகையாய் மன்னிக்கவும் ....

No comments:

Post a Comment