Sunday 18 August 2013

நட்பின் ஆழம் புரிதல் ......!



                                                               சில நண்பர்களின் அறிமுகம் கிடைக்கும்போது இவர்களை போல நல்லவர்கள் நம் வாழ் நாளில் கிடைக்க மாட்டார் என்று எண்ணி பழகுகிறோம் ,ஆனால் அப்படிப்பட்டவர்களின் உறவு நீடிப்பதில்லை . ஏன் இப்படியெல்லாம் நமக்கு மட்டும் நடக்கிறது என்று பல நாட்கள் ...பல மணி நேரங்கள் யோசித்து பார்ப்பதுண்டு முடிவில் நாம் அவர்களோடும் ,அவர்கள் நம்மோடும் இணையாமலே போய்விடுகிறோம் . 
                                                        அப்படி பிரிந்து போகக்கூடியவர்கள் தான் அதற்கு காரணமாக இருகிறார்களா ? என்றால் அப்படி அவர்கள் பக்கம் மட்டுமே தள்ளிவிட முடியவில்லை ! ஒவ்வொருவரும் ஒரு காரணத்தை சொல்லும்போது அவற்றை முழுமையாய் ஒதுக்கித்தள்ளவும் முடியவில்லை ! அதற்கு நாமும் பொறுப்பாளியாய் ஆகிறோம் , குறிப்பாய் நம்முடைய இயலாமையை ,வறுமையை , உடல் நலக்குறைவை வெளிப்படையாய் நம்மைப்பற்றி முழுமையாய் புரிந்து கொள்ளாதவர்களிடம் சொல்லிவிடுகிறோம் . அவர்கள் சமூக பொருளாதார நிலையோடு நம்மை ஒப்பிட்டு இப்படிப்பட்டவர்கள் நம்மோடு எப்படி ஈடுகொடுக்க முடியும் ? என்று தீர்மானித்துவிடுகிறார்கள் .
                                ஆகவே மன்னிப்புகூட புரிந்து கொள்ளக்கூடியவர்களிடம் மட்டுமே  கேட்க முடியும் ! புரிதல் இல்லாதவர்களிடம் மன்னிப்பு மட்டுமல்ல ...நட்பும் கேலிக்கூத்தாகிவிடும் ! நட்பின் ஆழம் புரிதல் ......நட்பின் மனதைத்தவிர எதையும் எதிர் பார்க்காத புரிதல் !

1 comment:

  1. படித்து என்னோட பக்கத்தில் பகிர்ந்தும்...கொண்டேன் நன்றிகள்......புரிதல் இல்லாதவர்களிடம் மன்னிப்பு மட்டுமல்ல ...நட்பும் கேலிக்கூத்தாகிவிடும் !,,,,அருமை......

    ReplyDelete