Sunday 9 June 2013

" தோட்டி " இது வார்த்தையல்ல ! வாழ்க்கை......

                                                 

                                                தினமும் காலையில் எழுந்த உடனே முகநூல் திறந்து அதில் கடவுள் பிரார்த்தனைப்போல் "நல்லதை நினையுங்கள் ! " நல்லதை செய்யுங்கள் ! " இனிமையாகட்டும் " இப்படி எழுதுவது என் வழக்கம் ! என் முகநூல் நண்பர்கள் என்னை வம்பிழுக்க எதையாவது போட்டு விவாதத்துக்கு இருத்தால் ".ஏன் காலையிலே தேவை இல்லாமல் டென்ஷன் " என ..நான் அவர்களிடமிருந்து "லைக் " மட்டும் கொடுத்துவிட்டு கழண்டுவிடுவேன் !

                                                        குறிப்பாய் காலையில் குறும்படம் பார்ப்பதில்லை ! ஏனென்றால் என்னுடைய இணையர் மிக திறமையான புத்திசாலி அவர் வீட்டு வேலை செய்து கொண்டே என் பதட்டத்தை எளிதில் புரிந்துகொண்டு "ஏன் காலையிலே இது தேவையா ? " ஏன் உடனே விமர்சனம் எழுத வேண்டும் ? கண்டிப்பதல்ல ! கரிசனப்படுவார் . அப்படித்தான் காலை பொழுதும் தவிர்க்க வேண்டும் என நினைத்து மற்றவர்கள் பதிவை மட்டும் பார்ப்பது என முடிவெடுப்பேன் .
                             முகநூல் நண்பர் .திருமதி .மணிமேகலை அவர்களின் பதிவில் நெடுந்தீவு முகிலனின் "தோட்டி " குறும்படத்தை... பதிவேற்றிருந்தார்.இந்த பதிவையும் தவிர்க்கவே முயன்றேன் . ஆனால் அந்த கும்படத்தின் தலைப்பு என்னை அதிர செய்தது .

                                              "தோட்டி " இந்த வார்த்தை என் முகநூல் அறிமுகத்தில் என்னையே புரட்டிப்போட்ட சொற்றொடர் !...................... ஏனென்றால் என் வலைபதிவிற்கு (BLGGER )ஒரு பெயர் வைக்கவேண்டும் என்று முயன்றபோது " தோட்டி " என்று பெயர் வைக்கலாம் என்று நண்பனிடம் சொன்னேன் .. குப்பைக்கூட்டும் தொழிலாளி படத்தோடு வடிவமைக்கவேண்டிய என்னுடைய வலைபதிவு வடிவமைப்பை கேட்டு " நீ அந்த ஜாதிக்காரனல்ல ! குப்பை கூட்டுபவன் தாழ்ந்தவன் ,நீ தாழ்ந்தவனா ? நீயே உன்னை ஏன் தாழ்த்திக்கொள்ளவேண்டும் ? என்று கேட்டு ஏற்க மறுத்துவிட்டார்.

                                                         என் ஆலோசனையை ஏற்று வெளிநாட்டில் உள்ள முகநூல் நண்பர் " தோட்டி " க்கு உதவி செய்தார் என்பது வேறு விஷயம் ! அதன் பிறகு குப்பை கூட்டும் படத்தை எடுக்கச்சொல்லி ஒருசாரார் மல்லுகட்டினர் . முடிவாய் படமில்லாமல் "தோட்டி " தன்னாள் முடிந்த குப்பையை கூட்டிகொண்டிருக்கிறான் .

                                                          " தோட்டி " இது வார்த்தையல்ல ! வாழ்க்கை என்பதை உணர்ந்தேன் . எவ்வளவோ முற்போக்கானவர்கள் என்று காட்டிகொள்ளும் எங்களைப்போன்றவர்கள் இன்னும் " அம்பேத்கர் " என்ற பெயரை இன்னும் எங்கள் வீட்டில் பிறக்கும் குழந்தைகளுக்கு சூட்டமுடியவில்லையே ? அது ஏன் ? இன்னும் எங்கள் ரத்தத்தில் கலந்துபோன சாதிய அணுக்களின் ஆதிக்கமேயொழிய வேறொன்றுமில்லை !

                                                  இந்த சூழலில்தான் திருமதி.மணிமேகலையின் பதிவு " யாரது " என்று என்னை திரும்பிப்பார்க்க வைத்தது. நான் எதிபாத்ததைவிடவும் ,நெடுந்தீவு முகிலனீன் " தோட்டி "இன்னும் ஆழமாகவே பதிவு செய்யப்பட்டுருக்கிறது ! அந்த குழந்தை நட்ச்சத்திரம் பசியை " (ஆகாய )தோட்டியை " விரட்டி வென்று இருக்கிறாள் !

                        ஈழத்தின் மிச்சசொச்ச ரத்தத்துளிகளின் கறைகள் போகவில்லை ! இன்னும் நிறைய "தோட்டிகள் " வரவேண்டும் ! விருதுகளுக்கல்ல.......ஈழ விடுதலை விழுதுகளுக்காக ......!






                             யாழ் தமிழ் மகள் மணிமேகலை தயாரிப்பில் நேற்று யாழ் இந்துக்கல்லூரி குமாரசாமி மண்டபத்தில் வெளியிடப்பட்டட நெடுந்தீவு முகிலனின் 5வது குறும் படம் .தோட்டி"

No comments:

Post a Comment