Tuesday 28 August 2018

ஒரு முழு நேர ஊழியனின் டைரி குறிப்பு...


#சூரியாவுக்குசமர்ப்பணம்..!

தேர்தல் காலங்களில்
நானும் ,என் மனைவியும்
காலையிலிருந்து
மாலை வரை பிடித்த
மைக்கை விடாமல்
ஆட்டோவில் பிரசாரம்
செய்து விட்டு இரவு
9 மணிக்கு பஸ் பிடித்து
10 மணிக்கு வீட்டிற்கு
வருவோம்.

வாடகை குடிசை வீடு
காதல் திருமணம்
இரு வீட்டிலும்
ஏற்க வில்லை.

வீட்டின் ஓரு மூலையில்
2 வயதும் 3 வயது
பையன்களும்
விளக்கு ஏற்றாமல்
தூங்கிக்கொண்டு
இருப்பார்கள்.

கட்சி பணியை
செய்த களைப்பை விட
குழந்தைகளை
பார்க்கும் போது ...
தலை சுற்றும்.
இருவருக்கும்
கண்களில் கண்ணீர்
கொட்டும்...!
கட்சி பணியை
தொடர வேண்டுமா...?
அப்படி செய்து என்ன
பண்ண போகிற்றோம்..?
ஓராயிரம் முறை மனபோராட்டத்தின்
கேள்விகள்.

தூங்கும் பிள்ளைகளை
எழுப்பி ,வாங்கி வந்த
பரோட்டாவை கொடுக்க
படும் பாடு...அப்பப்பா...!
இரவு 12 மணியை தொடும்.

காலையில்...
மீண்டும் அதே பணி
அதே மை...அதே பரோட்டா
அதே கண்ணீர். இது
நாங்கள் அனுபவித்த
கட்சி வாழ்க்கை.
கதை அல்ல....

கணவனும்
மனைவியும் கட்சி வேலை
செய்யும் அனைத்து
தோழர்களுக்கும்
பொருந்தும். அதில்
தோழர்.#ரமேஷ்பாபும்
#கீதாவும் இருந்தார்கள்.

எனக்கு தெரிந்து
நான் கட்சி பணிக்காக
மாதம் ரூ.250 மட்டுமே
பெற்றுக்கொண்டு
வாழ்ந்த காலங்கள் அவை.

வெளியில் கட்சியின்
இளைஞர் அமைப்பின்,
மாதர் அமைப்பின்
தலைவர்களாக அங்கீகாரம்
பெற்றாலும் குடும்ப சூழல்
இவ்வளவு தான்...!

இதே நிலையில் தான்
இடது சாரி இயக்கத்தில்
பணியாற்றிய அத்துனை
தோழர்களின் நிலைமையும்.

அந்த வருமானத்தில் தான்
படிக்க வைக்க வேண்டும்.
அதில்தான் சாப்பிட வேண்டும்.
பிறகு குழந்தைகளின்
படிப்பு செலவை கட்சியே
ஏற்றது.

அப்படித்தான்
இடதுசாரி கட்சியில்
இருக்கும் எல்லா
முழு நேர ஊழியர்களும்
வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள்.
என்ன...? இப்பொழுது
அவர்களுக்கு கொடுக்கும்
அலவன்சில் கொஞ்சம் மாற்றம்
வந்து இருக்கிறது அவ்வளவே.

அப்படியொரு தியாக
வாழ்வை ஏற்றுக்கொண்டு
படிக்க வைக்கப்பட்ட
பிள்ளைகள் இப்படி
#சூரியாவை போல
பாதியில் போகிறார்களே..?

இந்த இழப்பை எப்படி ஏற்பது..?
யாரிடம் முறையிடுவது...?
எப்படி தாங்க்கிக்கொள்வது..?
காலம் தணிக்கும் வரை
கண்ணீர் கரைந்து போகும்.

#சூரியாவுக்குகண்ணீரை
#காணிக்கையாக்குகிற்றேன்.

###கடலூர்.தோழர்.ரமேஷ் பாபு - கீதாவின் மகன் சூரியாவின் மறைவுக்கு எழுதியது.##


No comments:

Post a Comment