Tuesday 28 August 2018

சமஸ் என்ற சோமாஸ்க்கு....!


நேற்றைய தமிழ் இந்துவில்
சமஸ் அவர்கள் ,#கருணாநிதிஒரு
#சகாப்தம் " என்ற கட்டுரை புனைந்து
இருந்தார்.

படித்தவரெல்லாம் பாராட்டுகிறார்கள்.
அவரின் கருணாநிதியின் பலமும் ,பலகீனத்தை சொல்லி இருப்பதாய்
என் நண்பர் கூட சிலாகித்து கொண்டார்.

"#கருணாநிதியின்வாழ்க்ககை #மகாத்மாவினுடையதுஇல்லைஅதனாலே
#அதுமுக்கியமானதாகிறதுஒருசாமானியன்
#சறுக்கிவிழுந்திருந்தார்எல்லாமேன்மைகளுக்கும்இடையேகிழ்மைகளும்அவர்வாழ்வில் #இருந்தனசுயநலம்சூதுஊழல்குற்றம் , #குடும்பவாரிசுஅரசியல்எனஎல்லா       #சேறுகளும்அவர்மீதுஅப்பிஇருந்தன. #புனிதம்என்றுஎதுவும்அங்கில்லை ." என்று குறிப்பிட்டு எழுதிவிட்டு "#சடேரென்றுநம்மை #நோக்கிதிரும்பிஏன்இவ்வளவு
#வேட்டையாடிகள்நிறைந்தஇவ்வளவு
#வலிகள்மிகுந்தஇவ்வளவுஇழிவுகள்  #வாழ்க்கைதரப்படவேண்டும்?
#என்றுஅவர்கேட்டால்பதில்சொல்லஒரு
#வார்த்தையும்கிடைக்கபோவதில்லை" என்று
எல்லா கீழமைக்கும் ஒரே கேள்வியில்
கருணாநிதியை மகாத்மாவா ஆக்கிவிட்டார்.

அண்ணல் அம்பேதரும் , மோகன்தாஸ் காந்தியும், மகாத்மாவாக மக்கள் ஏற்றுக்கொண்டதற்கு என்ன காரணம்.?
எந்த இழிவையும் அவர்கள் மீது திணிக்கப்பட
வில்லையா..? அவர்கள் அதில் அனுபவித்ததால் தான் அவர்கள் மகாத்மா..!
இல்லையென்றால் அவர்களும் சராசரி மனிதர்களே . கருணாநிதி பற்றி மேலே சொல்லி வந்த எந்த கேவலத்தையும் ,காந்தியும் ,அம்பேத்கரும் ,
செய்யவில்லையே..?

எவ்வளவு வார்த்தை கொண்டு கருணாநிதியின் மாத்மியத்தை பேசினாலும்,
எழுதினாலும் மணல் வீடு சரிந்து போகும்
என்பதே யதார்த்தம்.

#கவிஞர் #கதாசிரியர் #பத்திரிக்கையாளர்,
#திரைக்கலைஞர் என்ற கருணாநிதியின் பரிமாணங்களை குறைத்து மதிப்பிடுவதற்கு
இல்லை.இவையெல்லாவற்றையும் கடந்து
#அரசியல்தலைவர் என்பதே அவர் அடைந்த
உச்சம் . அதுதான் இன்று பேச வைத்தது.
நாளையும் பேசப்போவது. அதில் அவரின்
முன் மாதிரியான பண்புகள், மாண்புகள்
என்று எதை சொல்ல முடியும்...?

அரசியலில் நேர்மை ,பொது வாழ்வில் தூய்மை , தனிநபர் ஒழுக்கம் , எளிமை,
பொது சொத்தை கையாளும் நேர்மை,
இப்படி கருணாநிதியை மேற்கோள் காட்ட, , உதாரண புருஷனாய்  எடுத்து சொல்ல முடியுமா...? மிஸ்டர் .சமஸ்..!

நீங்கள் குறிப்பிட்ட அண்ணா துரையும் ,
ஜெயலலிதாவும் , உத்தமர்கள் என்பதால்
அவர்களுக்கு மெரினாவில் இடம் ஒதுக்கவில்லை. தமிழக அரசியலில் செல்வாக்கு உள்ள முதல்வர்கள் அவ்வளவே.

நிறைவாய் ஒன்றை மட்டும் சொல்லிக் கொள்ள விரும்புகிற்றேன். எவர் மரணத்தை யும் அனுஷ்க்க வேண்டுமேயொழிய ஆகா..ஓகோவென்று கொண்டாடக்கூடாது.
அப்படி கொண்டாடினால் அந்த மரணம்
மக்கள் மனங்களில் விவாதிக்கப்பட்டு
தோண்டி எடுத்து தூக்கிலிடப்படப்படும்.

"படித்தவன் வாதும் சூதும் செய்தால்
போவான் போவான் ஐயோவென்று போவான்." இவைகள் மகாகவி. பாரதியின் வரிகள்.

இவைகள் சாபமல்ல...! நீதியின் குரல்...!


1 comment:

  1. சரியாக எழுதியிருக்கிறீர்கள். இப்போது பத்திரிக்கைகளில் வருவது ஜாக்ரதையாக வடிவமைக்கப்பட்ட ஒரு பிம்பம். இதன் பின்னர் ஒரு விளம்பர ஏஜென்சி இருக்கும் என நினைக்கிறேன். மிக அதிகமாக எதிர்த்த சவுக்கு முதல் அனைவரும் வரிந்து வரிந்து கருணாநிதியை மகாத்மா ரேஞ்சுக்கு எழுதுவது தற்செயலான ஒன்றா?

    ReplyDelete