Wednesday 25 January 2017

எனக்கு பிடிக்காத சொல் தோழர்...!



"சும்மா வாங்க...!
சென்னைக்கு போய் வரல்லாம்."
செலவு கூட நான் பாத்துகிகிறேன்..!என்று என்னை டெய்லர் ஒருத்தர் கூப்பிட்டார்.

என்னங்க..
என்னை மட்டும் கூப்பிட்டீங்க...
இப்போ பஸ் நிறைய ஜெனங்க....
எல்லோரும் தோழர்...தோழர்...ன்னு
கூப்பிடறாங்க...எனக்கு பிடிக்கலங்க...!
என்றேன்.

அட விடுங்க...!
அவங்க எதாவது கூப்பிட்டு
போறாங்க...என்று சாதாரணமாக
சொன்னார்  டெய்லர்.

போகும் போது வண்டலூர் ஜூ....
சிங்கம்...புலி...பாம்பு...கிளி...
குரங்கு ...
கால் இடறி கீழே வீழ்ந்த என்னை
கை பிடித்து தூக்கிய எழுபது
வயது கிழவன் சொன்னான்.

என்ன தோழர் பாத்து வரக்கூடாதா..?
பதில் பேச முடியவில்லை ...என்னால்..!

சென்னையை நெருங்கியது பஸ்..

தண்டயார் பேட்டை...!
பார்க்கும் இடமெல்லாம் சிகப்பு...

தோழர்....தோழர்....தோழர்.....
பிடிக்காத வார்த்தை....!

எங்கும் எல்லோரும்... தோழர்..என்ற
வார்த்தை ..ஆண்  - பெண் - குழந்தை
குட்டி....எல்லோரும். தோழர் என்றே
கூப்பிட்டார்கள்.

ஒரே குழப்பம்...
"தோழர் "என்ற சொல் ஆணா...?
பெண்ணா...? கேட்க வேண்டும்.

"தோழர்" என்ற சொல் ஆணா...?
பெண்ணா...? சொல்லுங்க தோழர்
என்றேன்.

பிறகு பேசுவோம்..தோழர்..என்றார்.
டெய்லர் செல்வராஜ்.






No comments:

Post a Comment