Sunday 30 October 2016

படைப்புகள் ...!





உடல் அவயங்கள் பளிச்சென்று
தெரியும் படியான படைப்புக்களை
கைதேர்ந்த படைப்பாளிகளால்
மட்டுமே சாத்தியமாகி இருக்கிறது .
அஜந்தா குகை ஓவியங்களும் ,
எல்லோரா சிலை படிமங்களும்
மனிதர்களின் எண்ணங்களின்
பிரதிபலிப்பே ...


பொதுவாக சிற்பிகள்
சிலைகளாக வடிக்கும்போதும் ,
ஓவியனின் படைப்புகளும்
மனதை சுண்டி இழுத்துவிடும் .
சிலைகளும் ஓவியங்களும்
மனித மனங்களை சிதைகிறது ,
நிஜ மனிதர்களைப்போல
வசீகரிக்கிறது . அதில் சிக்குண்ட
மனிதர்கள் அதற்கேற்பவே அது பற்றிய
விவாதத்தையும் எழுப்புகிறார்கள் .
ஓவியங்களும் சிலைகளும்
மனிதர்களை காட்டிலும் காட்டிலும்
உரக்க பேசுகிறது .அதன் உக்கிரம்
தாங்காமல் மனிதர்கள் தகிக்கிறார்கள் .


அவர்ளின் மனதை சிதைப்பதனால்
அதன் தாக்கத்தை அவரவர்களின்
மொழியில் ஆபாசம் என்றும் ,
அழகு என்றும் , உச்சரித்துக்கொண்டே
இருக்கிறார்கள் . ஆபாசம் என்பதை
தவறென்றோ ...? அழகு என்பதை
சரிஎன்றோ விவாதிக்க வரவில்லை .


ஒரு படைப்பாளியின் படைப்பு
பேசா மடந்தைகளை பேச வைத்து
இருக்கிறது . எழுதா மனிதர்களை
எழுத வைத்து இருக்கிறது . இனி வரும்
சமூகத்தையும் அவைகள் பேசவைக்கும்
சாகா வரம் படைத்தவைகள் .





No comments:

Post a Comment