Tuesday 11 October 2016

1985- ஷாபானு ( 62 ) ...!

மத்திய பிரதேசத்தில் உள்ள
இந்தூர் நீதி மன்றத்தில் (1978
ஆண்டில் தனது கணவனால் 
விவாகரத்து பெறப்பட்ட பிறகு...)
ஜீவனாம்சம் வேண்டி வழக்கு
தொடர்ந்தார்.
1985 - களில் நடைபெற்ற
ஷாபானு வழக்கு தொடர்பாக ...
இஸ்லாமிய நண்பர்கள்
படுமோசமாக விமர்சனம் செய்து வருகிறார்கள் .

விவாதிப்பது நல்லது .
அது ஆரோக்கியமான
விவாதமாக அமைய வேண்டும் .
குறிப்பாக என்னுடைய
நண்பர்கள் பட்டியலில்
பெரும்பான்மையாக
இஸ்லாமிய நண்பர்களே
இருக்கிறார்கள் .
என்னிடமிருந்து
எதோ ஒரு பண்பு
பிடித்து இருக்கலாம் .
நல்லது . என்னுடைய
நண்பர்களுக்கு எப்படி
அவர்களுக்குள் இருக்கும்
கருத்தை வெளிப்படுத்த
உரிமை இருக்கிறதோ
அதுபோல எனக்கும் இருக்கிறது
என்பதை அவர்கள் புரிந்துகொண்டு
என்கருத்தை அவர்கள்
அனுமதிப்பார்கள் என நம்புகிறேன் .
ஷாபானு வழக்கு தொடர்பாக
உங்கள் கருத்துக்கு மாற்று கருத்து
இருக்கிறது ....நண்பரே .
அது தொடர்பாக உங்களுக்கு மட்டுமல்ல .
இந்தியாவில் உள்ள அனைத்து
இஸ்லாமியருக்கும் மாற்று கருத்து இருந்தது .
அடிப்படையில் வயதான ஷாபானுவின் போராட்டம்
ஷரியத் சட்டத்தை எதிர்த்து அல்ல
என்பதை புரிந்துகொள்ள வேண்டும் .
வயதான ஷாபானு ஜீவனுத்துக்கு
கூட ஆதரவற்ற நிலையில்
வேறு வழியில்லாமல் தனது கணவனிடம்
ஜீவனாம்சம் கேட்க்கும் நிலைக்கு
தள்ளப்பட்டார் .
அப்படி ஜீவனாம்சம் கொடுப்பது ஷரியத்தில்
இல்லை என்பதால் ..? ஜீவனாம்சம் கேட்பதே ஷரியத்துக்கு
எதிராளியாக சித்தரிக்கப்பட்டார். ஷரீயத் சட்டம்
அனுமதிக்காதபோது வேறு வழியின்றி
அவர் ஜீவனாம்சம் கோரி நீதி மன்றத்தை
நாடினார் .
அதை அரசியலாக அன்றைக்கு இருந்த ராஜீவ்
அணுகினார் . அதை மனித உரிமையாக ,
வாழ்வுரிமையாக ,கம்யூனிஸ்ட்டுகள்
ஆதரித்தார்கள் . ஷாபானுவுக்கு ஜீவனாம்சம்
வழங்க வேண்டும் என்று நீதிமன்றம்
ஆணை பிறப்பித்தது .
இறுதியாக ...
இன்றைய நிலை அன்று இல்லை .
அன்றைய நிலையை
இன்றைய நிலையோடு
இணைத்து பேசுவது முறையன்று ...!




No comments:

Post a Comment