Monday 24 October 2016

புதியவர்கள் ...





கடந்த காலங்களில் ...
நாம் நிறைய கடிதங்கள்
எழுதிஇருக்கிறோம் .
அதை இன்று எடுத்து படித்தால்
எவ்வளவு இனிமையாகவும் .
கடந்தகால நினைவுகள்
நமக்கு ஞாபகத்துக்கு வருகின்றது !

அதே வேளையில் ...
அன்றைய மனோ நிலையும் நன்கு புரியும் .
ஆனால் இன்று அப்படி இல்லை .
எல்லாம் காதோடு ,,....
பார்வையோடும் போய் விடுகிறது .

அப்படி இருக்கும் பொழுதும்
சற்று ஆறுதலான விஷயம்
வலைதள பதிவுகள் .
அதில் கூட நட்பை வளர்க்கும்
விதமாக இல்லாமல் பொழுது போக்கவும் ,
வேறு சில தேடுதளுக்காகவுமே
சிலருக்கு இருக்கிறது .

அதனால்...
எதையும் தேடக்கூடாது என்பதல்ல ........
.அதற்காக அதுவே முழு நேர
வேலையாகிவிடக்கூடாது .
நம் வலைதள பதிவுகளை
நமது குடும்பத்தார் பார்க்க நேரிட்டால்...?

நம்முடைய நண்பர் பட்டியலில்
சிலர் இணைந்ததனாலேயே
எதை வேண்டுமானாலும் ,
எப்படி வேண்டுமானாலும்
என்று நினைப்பது சரியில்லை
என்று கூட தெரிவதில்லை .

யாரிடம் எதை பேசுகிறோம்
என்ற வரம்புகளும் சிலருக்கு
தெரிவதில்லை !
அதை நாம் கற்று கொடுக்கவும்
முடியாது !

வெட்டிக்கூச்சல் போடும்
ஊடகங்கள் ".சமுக வலைதளத்தில் நாம்"
என்ற தலைப்பில் டிவியில்
ஒரு கலந்துரையாடல் கொடுங்கள் !
வலைதளத்தில் நாம் எப்படி
பயன்படுத்த வேண்டும் என்பதையாவது
தெரிந்து கொள்ளட்டும் !

அதேபோல் நமது தலை முறையில் தான்
இப்படி பட்ட புரிதல் இருக்கிறது !
அடுத்த தலைமுறையில் இவைகள்
மாறும் என நம்புகிறேன் .

No comments:

Post a Comment