Friday 14 August 2015

பேசா பொருள் ...!

முகநூலில் வெட்டித்தனமாக
பொழுதுபோக்குவோர்கள்
மத்தியில் பேசா பொருள் மீது
பேச வைப்போர் ஒரு சிலரே...

பொருளாதார ஏற்றத்தாழ்வினால்
அதிகம் பாதிக்கப்படுவது ...யார்...?
என்று சமீபத்தில் நல்லதொரு விவாதப்பொருள் வைத்துள்ள என் முகநூல் நண்பர் iskandar barak அவர்களை பாராட்ட வேண்டும் .

என்னுடைய பார்வையில் ...
பொருளாதார ஏற்றத்தாழ்விலிருந்து
அதிகம் பாதிக்கப்படுவது பெண்
என்பது மட்டுமல்ல ....!
அதிலிருந்து விடுவித்துக்கொள்ள
போராடும் சக போராளியும் பெண் ...!

பெண்ணாக பிறந்ததிலிருந்து
 சமூக - பொருளாதார பாதிப்பிலிருந்து
உயிர்வாழ. ஆண்களை காட்டிலும்  தொடர்ந்து போராடிகொண்டிருப்பவள் பெண் .. !

இன்று சமூகத்தின் பார்வையில் சமூக
பாதிப்பிலிருந்து விடுதலை பெறுவதற்கு
உள்நாட்டிலோ , அது வெளிநாட்டிலோ
கூடுதலாக உழைப்பவர்கள்  ஆண்கள்
மட்டும்தான் என்று எல்லோரும்
நினைக்கிறார்கள் அது முழுவதும்
உண்மையல்ல ...!

குடும்ப சுமையை தூக்கிச்சுமக்க
சக ஆண் உறவுகள் இல்லாத போது...?
உள்நாட்டிலும் வெளிநாட்டிலும்
எத்தனையோ பெண்கள் வேலை செய்து
தன் குடும்ப பொருளாதார ஏற்றத்தாழ்வுகளை
போக்க பாடுபட்டு வருகிறார்கள் என்பதை
எவரும் மறுக்கமுடியாது .

ஆண் ...ஆணை மையப்படுத்தியே
இந்த சமூகம் இயங்குவதால் ஆணின்
உழைப்பும் ,ஆணின் சுமையை மட்டுமே
கணக்கில் எடுத்துக்கொள்ளப்படுகின்றது .

பெண்ணின் சுமைகளும் ,
பெண்ணின் உழைப்பும் கணக்கில்எடுத்துக்கொள்ளப்படவில்லை.
ஆணின் உழைப்புக்கு  கூலியாகவும் ,
மாதச்சம்பளமாக பெறப்படுவது மட்டுமே
கணக்கில் எடுத்துக்கொள்ளும் சமூகம்
காலையிலிருந்து இரவு வரை குடும்ப
வேலைகளில் உழைப்பதை கண்டுகொள்வதுமில்லை...
பண மதிப்பீட்டில் கணக்கிடுவதுமில்லை...!

அது மட்டுமல்ல ...
வரதட்சணையால் பெண்ணும் ,
பெண் வீட்டாரும் ஒட்டுமொத்தமாக
பாதிக்கபடுகிறார்கள் .வரதட்சணை
பெறும் வீட்டாருக்காக ...வரதட்சணை
கேட்பதும் பெண் ....! தன் மகனுக்காக
கேட்கப்படும் வரதட்சனையால் சிறு
பயனை கூட அடையாமல் அவபெயரை
மட்டுமே சுமப்பவள் பெண் என்பது
பரிதாபத்துக்குரிய விஷயம் .

ஆணாதிக்க சமூகத்தின் அத்தனை
சிலுவைகளையும் சுமந்துகொண்டு
ஆண்களை வாழவைப்பவள்
பெண் ...!

இவையெல்லாமே
விவாதிக்கபடாமல்...?
ஆணின் மனநிலையில்
மாற்றம் வர வாய்பில்லை...!


No comments:

Post a Comment