Friday 21 August 2015

இலங்கை நாடாளுமன்ற தேர்தல் 2015..!

இலங்கை தமிழ் - மலையக மக்களுக்கு
கைகொடுக்குமா..?
நாடாளுமன்ற தேர்தல் ..!
-------------------------------------------------------------------------
இலங்கை நாடாளுமன்ற தேர்தல் போது
உலகம் முழுவதும் உள்ள தமிழ் மக்களும் ,
மனித உரிமை ஆர்வலரும் உற்று நோக்கி
அதன் முடிவுகளை எதிர் நோக்கி இருந்தனர் .

பெரிய அளவில் அசம்பாவிதம் ஏதுமில்லாமல்
ஜனநாயக முறைப்படியே தேர்தல் நடந்து முடிந்துள்ளது . உண்மையிலே வரவேற்க தக்க
நிகழ்வாகும் .

வியாபார நிறுவனங்களாக மாறிப்போன
மலையக தொழிற்சங்கம் அதன் குடும்ப வாரிசுகள்
தோற்றுப்போய் உள்ளது .தொழிலாளி வர்கத்தின்
அரசியல் விழிப்புணர்வை வெளிப்படுத்தி
இருக்கிறது .

இந்த தேர்தலின் போது ரணில் தலைமையில் உள்ள ஐக்கிய தேசிய கட்சியும் , ராஜபக்‌ஷேவின் ஐக்கிய மக்கள் சுதந்திரா கூட்டணியும் , தேர்தல் வாக்குறுதியாக எதையும் முன் வைக்கவில்லை . மாறாக பெரும்பான்மை சிங்கள மக்களின் தலையாய கட்சி தாங்கள் தான்என்பதையே போட்டிபோட்டுகொண்டு பிரச்சாரம்
செய்தனர் . இன்னும் ஒரு படி மேலே போய்
உள் நாட்டு போரின் போது புலிகளால் தாக்கபட்ட
வாகனங்களை பிரச்சாரத்துக்கு பயன்படுத்தினர் .
இவையெல்லாமே சிங்கள இன உணர்வை தூண்டி
வாக்குகளை அறுவடை செய்தனர் .

சம்பந்தன் தலைமையிலான தமிழ் தேசிய
கூட்டமைப்பும் , தமிழர்கள் வாழும் வடக்கு-கிழக்கு  மாவட்டங்களின் பாதுகாப்பு கேடயமே தாங்கள் தான்
என்று தமிழ் உணர்வை அறுவடை செய்துள்ளது .
அதற்கு மேல் எதையும் முன்வைக்கவில்லை .

 இலங்கை தீவில் வாழும் சிங்கள மக்களும் , சிறுபான்மை தமிழ் - முஸ்லீம் மக்களும்
ஒன்றுபட்டு வாழ எந்த விதமான எதிர்காலத்திட்டத்தையும்,எவரும் முன் வைக்கவில்லை என்பது அரசியல் அய்யோக்கிதத்தனத்தை காட்டுகிறது .

போருக்கு பிந்தைய காலத்தில் ஏதுமற்று
அனாதைகள் ஆக்கபட்ட குழந்தைகள் ,
விதவை பெண்கள் , ஊனமுற்றோர் ஆகியோரின்
நிகழ்காலம் ,எதிர்காலம் குறித்து எவரும்
கண்டுகொள்ளாமல் ஓட்டு பொறுக்குவதிலே
கவனப்படுத்தபட்டார்கள் என்பது வேதனைகுரிய
விடையம்.

அடுக்கபட்ட முட்டையில் அடிமூட்டையாக,
ஒடுக்கப்பட்டோரில் ஓட்டாண்டிகளான...
மலையக மக்களின் ரத்தத்தை அட்டைகளும் ,
உயிரை எஸ்டேட் முதலாளிகளும் உறிஞ்சி
குடித்தால் நடை பிணமாக்கப்பட்டவர்கள்
அரசியல் அதிகாரத்தை நினைத்துகூட
பார்த்ததில்லை .

இன்று...
அதில் மாற்றம் நிகழ்ந்துள்ளது .
அந்த மாற்றம் முழுமையானது
என்று சொல்வதற்கில்லை என்றாலும் கூட
ஏராளமான எதிர்பார்ப்பு இருக்கிறது .

மலையக மக்களின் அடிப்படை வாழ்வுரிமை ,
காணி உரிமை,சம்பள உயர்வு கோரிக்கை
இவையெல்லாம் பெறவேண்டும்
அதை நோக்கி தெரிவு செய்யப்பட்டவர்கள்
வாதாடி ,போராடி பெறுவார்கள் என்று
முழுமையாக நம்புவதற்கில்லை.

மலையகத்தில் தெரிவு செய்யப்பட்டவர்கள்
மலைய மண்ணின் மைந்தர்களாக இருக்கலாம்
ஆனால் அவர்களும் சராசரி மனிதர்களே ..!
அதோடு தொழிலாளி வர்க குனாம்சம் அவ்வளவாக
அவர்களிடம் இல்லை . அதிகாரத்தை பிடிக்க
வேண்டும் என்ற வெறி மட்டுமே இருக்கிறது .
வெற்றிக்கனியையும் மலையக மக்கள் அவர்களிடம் அள்ளிக்கொடுத்து இருக்கிறார்கள் .
பாராளுமன்ற ஜனநாயகத்தில் அவர்கள்  கரைந்து போகாமல் நீடிக்க தொழிலாளி வர்க்கசித்தாந்தம் இருக்கவேண்டும் . ஆனால் தெரிவு செய்யப்பட்ட எவருக்கும் அது இருப்பதாக தெரியவில்லை .

இருப்பினும் தெரிவு செய்யப்பட்ட தமிழ் -  மலையக
பாராளுமன்ற பிரதிநிதிகள் புதிய பாதையில்
பயணிப்பார்கள் என நம்புவோம் ..!
இல்லையேல் இவர்களும் தூக்கி எறியப்படுவார்கள்
என்பது நிச்சயம்.


No comments:

Post a Comment