Wednesday 16 October 2013

ஈழம் என்பது........எது ?







                               தமிழகத்தில் அரசியல் பேசுகிறவர்களுக்கு வடக்கு மாகாணம் ,மலையகம் என்றெல்லாம் எதுவுமே தெரியாது ! அது பற்றி தெரிந்து கொள்ளும் ஆர்வமும் அவர்களிடம் இல்லை ! ஏனென்றால் தமிழகத்தில் பேசுவது... தமிழ் நாட்டில் ஓட்டு வாங்குவதற்கு...! இது தமிழ்நாட்டு அரசியல் ! "ஈழம் " என்று சொன்னால் தமிழ் "பற்றாளன் " என்று ஊரில் மரியாதை இருக்கிறது ! அதை நம்பி தமிழக மக்களும் ஒட்டுபோடுகிறார்கள் . எனவே ஈழம் என்று சொல்கிறார்கள் ...தனி ஈழம் என்று உரக்க சொல்கிறார்கள் ! அவர்களை காட்டி பணம் கேட்டால் பணம் தருகிறார்கள் ! ஓட்டு கேட்டால் ஓட்டு போடுகிறார்கள் .....அதைத்தாண்டி வேறு என்ன வேண்டும்?
                      இன்னும் எங்கள் நாட்டில் எம் ஜி ஆர் உயிரோடு இருக்கிறார் என்று சொல்லிகொண்டிருப்பவர்கள் இங்கு ஏராளம் ! ஆகவே எம் ஜி ஆரே உயிரோடு இருக்கும்போது " பிரபாகரன் ஏன் உயிரோடு இருக்கக்கூடாது ? இப்படிஎல்லாம் பேசுவதால் பைத்தியம் என்று சொல்லக்கூடாது ! அது மற்றவர்களை பைத்தியமாக்கி ஒட்டுவாங்குவற்காக பயன்படுத்துகிறார்கள் ! அதை கட்சி வித்தியாசமில்லாமல் ஆதரிகிறார்கள் ஊக்குவிக்கிறார்கள் ! 
 ஈழத்தில் செத்துப்போனவன் உண்மையிலே தலைவனென்றால் ..... அவன் நினைவுதினத்தை நெஞ்சில் ஏந்தவேண்டாமா ? அப்படியொரு நினைவுதினம் கடைபிடிக்கப்படுகிறதா ? அங்குமில்லை..... எங்குமில்லை !
ஈழப்பிரச்சனையில் கம்யூனிசம் பேசுபவரில்......மக்களை குழப்பாமல் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி விதிவிலக்காக இருக்கிறது என்பது வேறுவிஷயம் !
                     தமிழகத்தில் சாவையும் ( இந்திராகாந்தி ) ,நோவையும் ( எம் ஜி ஆர் ) காட்டியே கடந்த காலத்தில் ஓட்டுவாங்கி இருகிறார்கள் ! ஈழத்து படுகொலை பெரிய சாவு ! இந்தியாவில் ஒரு அரசியல்வாதி செத்துபோனாலே ஆட்சி மாறும் ! அங்கே ஆயிரக்கனக்கில் செத்துபோய் இருக்கிறார்களே ? எவ்வளவு நாட்கள் அரசியல் பேசலாம் ? இதைத்தான் தமிழக அரசியல்வாதிகள் பேசிக்கொண்டிருக்கிறார்கள் அரசியல்பேசிக்கொண்டே
நடந்துகொண்டிருக்கிறார்கள் !  
         ஈழம் வேறு தமிழகம் வேறு என்று சொல்பவர்களை தொப்புல்கொடியால் கட்டி தூர போட்டுவிட்டார்கள் ! இங்கே அடித்தொண்டையில் பேசினால் ஆழமான அரசியல்வாதியாகலாம் ! 
புலிக்கொடி என்ன ? ஓட்டு கிடைக்குமென்றால் நரிக்கொடி கூட எங்கள் நாட்டில் நாளைக்கே பறக்கும் ! நல்லவேளை ...? சமூகவளைதளம் இல்லையென்றால் என்ன நடக்குதென்ரே யாருக்கும் தெரியாது ! இன்று மலையகம் பற்றி மதிப்பிடமுடியாமல் போயிருக்கலாம் .
   இப்போதைக்கு மலையக மக்களை பாதுகாக்கு தனி ஈழம் ஏற்புடையதல்ல...!என்பதையும் புரிந்துகொள்ள முடிகிறது ! வடக்கு மாகாணசபை தேர்தலின் 
போது இன்றைய முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ள விக்னேஸ்வரனின்   அறிக்கை ஒரு புரிதலும் ,தமிழக அரசியல்வாதிகளுக்கு சாட்டையடியாகவும் இருந்தது மறக்கவியலாது . வடக்கு மாகாணசபை தேர்தல் மூலம் ஆட்சிக்கு வந்துள்ள தமிழ்கூட்டமைப்பு ஒரு சிறு முன்னேற்றம் என்று சொல்லலாமெயொழிய வேறு ஒன்றையும் பெரிதாய் செய்துவிடமுடியாது என்பதை உணருகிறோம்.
                     .அதே வேளையில் கடந்த காலங்களில் மத்திய மாகாணசபையில் இருவர் என்ற பங்கேற்பை பதினான்கு என்று உயர்ந்துள்ள இரட்டை இலக்கம் எளிதானதல்ல... இதன் மூலம் சிங்கள மக்களில் சிக்குண்டு கிடந்தாலும் மலையக மக்களின் உருக்கு போன்ற ஒற்றுமை உலகம் அறிந்துள்ளது ! இது சிங்கள-மலைய மக்களை பிளவுபடுத்தாமல் ஒற்றுமையை வளர்த்தெடுப்பது மலையக மக்களின் எதிர்காலம் சார்ந்தது. 
                               இந்த பார்வையில்தான் யாழ்ப்பாண தமிழனையும் -மலையக தமிழனையும் அரசியலாய் ஒன்று படுத்திட முயற்சிகள் வேண்டும் என்பதுதான் இன்றைய தலையாய கடமை !

No comments:

Post a Comment