Monday 14 October 2013

முக நூலில் மண்டியிடும் கடவுள் ...!

                                               

                                           
ஜாதிய-மத பாகுபாடுகள் குழந்தை பருவத்திலிருந்தே உணவோடு சேர்த்தே ஊட்டப்படுகிறது .

அதனால் ...
தாயும்-தந்தையும் தரம் குறைந்தவர்களல்ல .... 
அந்த காலத்தில் ஜாதி - மதம் பற்றி அவர்களுக்கு இருந்த பார்வை அவ்வளவுதான் ! 

படிக்க தெரிந்த நாம் ! 
நவீன உலகில் இருக்கும் நாம் ! 
அந்த கால மனிதர்களைப்போல் 
பிரித்து பார்ப்பது ,தரக்குறைவாய் மதிப்பிடுவது சரிதானா ? என்பதுதான் என்னுடைய கேள்வி .

நான் மட்டும் சுத்த சுயமல்ல ...
இந்த குப்பைகள் என்னிடமும் இருக்கிறது அதை கொஞ்சம்கொஞ்சமாய்வெளிஏற்றுகிறேன்.
அதற்காக முயற்சி எடுக்கிறேன்.

இந்த கேள்விகள் என்னைவிட .... 
அதிகம் படித்த , விபரமானவர்கள் , 
சமூகத்தில் மிக உயர்ந்த பொறுப்பில் உள்ளவர்கள் , , புத்தி ஜீவிகளுக்கு தெரியவில்லையே ? 
என்பதுதான் புரியாத புதிராய் இருக்கிறது !
எனக்கு மதங்களைக்காட்டிலும் ,மனிதர்களிடம் நம்பிக்கை இருக்கிறது .
                                               
எனக்கு எந்த மதத்தின் மீதும்
நம்பிக்கை இல்லாமல் இருக்கலாம்,
என் நண்பர்களுக்கு ? என் நேசத்துக்குரியவர்களுக்கு ?
 என் நம்பிக்கைக்குரியவர்களுக்கு....
 அதன் மீது நம்பிக்கை இருக்கிறதே !
அதுதான் பிரச்சனையே !

அதை நாம் கூடாது என்று சொல்வதற்கு
எந்த உரிமையுமில்லை!
 ஒவ்வொருவரும் சக மனிதனுக்குள்ள
திறமைகளை , பண்புகளை
ஆராய்வதற்கு பதிலாக ...
மற்றவர்களின் கடவுளின் நம்பிக்கையயும் ,
மத சிறுமைகளையும் ஆராய்கின்றனர் .

அதனால்தான்

தெரிந்தோ தெரியாமலோ மதத்துக்கும் ,கடவுளுக்கும் வக்காலத்து வாங்கி
என் மதம் , என் கடவுள் என்று ..
ஆதரவு குரல்களும் ,
அடிகோடிட்ட பதிவுகளும்
நம்மை அதிர வந்து சேர்கின்றன .
மதத்தையும் ,கடவுளையும் ,தனிப்பட்ட முறையில் ஆதரிக்கவும் , வணங்கவும் உரிமை இருக்கிறது . அதில் தப்பேதுமில்லை ,

அவரவர்களின் தனிப்பட்ட வழிபாட்டு சுதந்திரத்தை மற்றவர்கள் மீது திணிப்பதும் தப்பு .
அதுபோல் மற்றவர்களின் மதத்தில் ,
வழிபாட்டு உரிமையில் மூக்கை நுழைப்பதும் தப்பு
என்பதை புரிந்து கொண்டால் ...?

பள்ளிவாசலில்....
 தேவாலயத்தில்......
கோவில்களில்...
இருக்கவேண்டிய கடவுள் ....
முக நூலின் மண்டி இடவேண்டிய
அவசியமில்லை .






No comments:

Post a Comment