Tuesday 15 October 2013

காவலர்கள் உங்கள் நண்பனா ?




                         காவல்துறையும் - நீதி துறையும் நியாயமாய் மக்களுக்கு பாதுகாப்பாய் இருக்கவேண்டிவர்கள் ! ஆனால் இன்று அப்படி இல்லை , சென்னையில் ஒரு போலீஸ்காரர் பாதிக்கப்பட்டதை எடுத்து சொல்கிறீர்கள் ...வேதனைபடுகிறீர்கள் அது தவறென்று சொல்லவில்லை !
கடந்த காலத்தில் தமிழக காவல்துறையின் செயல்பாடு எப்படி இருந்தது ? என்பதை யோசிக்கவேண்டும் . விழுப்புரம் அத்தி ஊர் விஜயா காவல்துறை பலாத்தகாரம் . சிதம்பரம் பத்மினி 11 காவலர்களால் பலாத்தகாரம் ! முத்தாண்டிகுப்பம் வசந்தா காவல் நிலைய பலாத்தகார படுகொலை ! கோடியக்கரை விசாரணை கைதி சண்முகம் காவல் நிலையத்தில் தூக்கிட்டு கொலை ! அந்தியூர் காட்டுவாசிகள் வனத்துரையாலும் ,காவல்துறையாலும் பலாத்தகார கொலைகள் ! வாச்சாத்தி மலைவாழ் மக்கள் 200 க்குமேற்பட்டோர் பாலியல் பாலாத்த்காரம் படுகொலைகள் ! சமீபத்தில் தீவிரவாதி ,பயங்கரவாதி என்று சொல்லி சென்னையில் ஒரிசாவிலிருந்து வந்த தொழிலாளர்கள் மீது எண்கவுன்டர் ! இப்படி அடுக்கிக்கொண்டே போகலாம் ! இது பொய் இல்லை ! இவைகளுக்கு ஆதாரம் உள்ளது .
                பலவழக்குகள் நிருபிக்கப்பட்டு தண்டனையும் கொடுக்கப்பட்டுள்ளது .
இந்த நிலை காவல்துறைக்கு என்றால் நீதித்துறை அதைவிடவும் கேவலம் ...நேரடியாய் சமூகவிரோதிகளுடன் தொடர்பு என்பது எல்லோருக்கு தெரியும் ! உயர் நீதிமன்ற வழக்கறிஞர் விஜயன் படுகொலைக்கு காரணம் சமூகவிரோதிகளோடு அவர் தொடர்பு இருந்தது என்று ஒரு தகவல் ... ஆகவே இந்த இருவரில் எவரும் நியாயவான்கள் அல்ல ! என்பதை மரியாதைக்குரியஎனது நண்பர்கள் புரிந்துகொள்ளவேண்டும் !
அதே நேரத்தில் காவல்துறையும் --- நீதித்துறையும் யார் பெரியவர்கள் ? என்ற சண்டை தொடர்ந்து நடந்து கொண்டே இருக்கிறது ! அதன் உச்சகட்ட சண்டைதான் கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு சென்னை சட்டக்கல்லூரியில் நடந்த சண்டையும் -- காவல்துறையின் அத்துமீறலும் ,அந்த சண்டையும் , காவல்துறை தாக்குதலையும் தமிழக மக்கள் இன்னும் மறந்திருக்க மாட்டார்கள் ! இப்போ சொல்லுங்கள் இதில் யார் நல்லவர்கள் ? இவைகள் இருவரும் " மோசம் " "படு மோசம் " என்ற தகுதியில்தான் இருகிறார்கள் ! அது சிலநேரங்களில் " மோசம் " படுமோசமாகவும் , "படுமோசம் "மோசமாகவும் மாறும் ! அவ்வளவே !
                           இந்த காலத்தில் மருத்துவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார் ! அதனால் உங்களுக்கு தெரிகிறது ....கோடான கோடி ஏழை எளிய மக்கள் அண்டை வீட்டு சண்டைக்கு கூட வழக்குபோடப்பட்டு ஆண்டாண்டு காலமாக நீதிமன்ற படிகட்டுகாலை ஏறி இறங்கி கொண்டிருக்கிறார்கள் என்பதையும் புரிந்துகொள்ளவேண்டும் ! காவல்துறை " உங்கள் நண்பன் "என்று எல்லாகாவல் நிலையங்களிலும் எழுதப்பட்டுள்ளது என்பது உண்மைதான் ! துணைக்கு ஆள் இல்லாமல் ஒரு பெண் தனியாக பகலில் கூட காவல் நிலையத்துக்குள் போய்வர முடியுமா ? போய்வந்தவர்களை கொஞ்சம் கேட்டு பாருங்கள் ! காவல்துறையினர்தான் ஏழை எளிய மக்கள் மீது வழக்கு பதிவு செய்து கோட்டுக்கு அனுப்புகின்றனர் ..ரத்தம் குடிக்கும் மூட்டை பூச்சுகளைப்போல் வழக்கறிஞர்கள் ஏழைகளின் ரத்தத்தை உருஞ்சிறார்கள். இவர்களில் எவரும் நல்லவர்கள் அல்ல ! இவர்களுக்கு வக்காலத்துவாங்குவதை விடவும் ஏழை எளிய மக்களைப்பற்றி யோசிக்கவேண்டும் ஆதரவற்ற பெண்கள் மீது அனுதாபப்படுங்கள் !
                             
ஒரு சில பெண் முக நூல் நண்பர்கள் ..சில அநீதிகளை கண்டு கொதித்துபோகிறீர்கள் ! முக நூலில் உள்ள பெண்கள் எத்தனை பேர் ? பாதிக்கப்படும் பெண்களுக்குஆதரவாய் ...சமூக நீதிக்கு ஆதரவாய் ..... பாலியல் வன்முறைக்கு எதிராய் .... ஆட்சியாளர்களுகு எதிராய்.... பதிவேற்றம் செய்கிறார்கள் ? குறைந்தபட்சம் தங்களின் கண்டனத்தையாவது தெரிவிகிறார்களா ? முழுவதும் இல்லை என்று சொல்ல முடியாது 100 க்கு 2 சதம் கூட இல்லையே ? 
                             பெரும் பகுதி பெண்கள் குரல் கொடுக்காதபோது ஒன்றிரண்டு பெண்கள் அநீதிகளை எதிர்த்து போராடினால் அழித்தொழிக்கப்படுவார்கள் என்று அஞ்சுகிறேன் . அதனால்தான் அப்படிப்பட்டவர்களை பாதுகாக்கவேண்டும் என நினைக்கிறேன் . தங்களின் கருத்துக்கு ஆதரவான சக்திகளை சேர்க்கவேண்டும் இல்லையேல் இந்த கொடுமைகளுக்கு எதிராய் போராடும் கட்சிகளோடு இணையவேண்டும் !

No comments:

Post a Comment