Tuesday 5 February 2013

தோழர் .எட்வின் அவர்களின் "நோக்குமிடமெல்லாம் ..." செய்தி கோவைக்கு விமர்சன கட்டுரை ...............


                     நன்றி ......தோழர் எட்வின் நல்ல செய்தியை பகிர்ந்து உள்ளீர்கள் . . ஒன்றை முதலில் தெரிந்து கொள்ளவேண்டும் ,நீங்கள் சொல்லும் எல்லா நிகர்ழ்வுகளிலும் தலித் ஒரு அணியிலும் தலித் அல்லாதோர் ஒரு அணியிலும் இருந்துதான் இந்த கொடுமைகள் , நிகழ்வுகள் நடந்து இருக்கின்றது என்பதை மறக்க கூடாது . சாதியம் வெட்கமின்றி அம்மணமாக வருகிறது என்ற கோபாவேசம் மட்டுமே ஆறுதலையோ ,தீர்வையோ எட்ட முடியாது .தலித் அல்லாதோர் என்ற பட்டியல்தான் மிக ஆபத்தானது சாதிய மோதல் வரும்போதெல்லாம் தலித் மக்கள் மீது எந்த பகுதியில் எந்த சாதி பலமானதாக உள்ளதோ அந்த சாதிதான் மோதலைஉருவாக்கும் மற்ற சாதியினரை இணைத்துகொள்வார்கள் .
                                  1968-69ல் கீழ் வெண்மணியில் 42 உயிர்களை பலி கொண்ட நிகழ்வில் கூட சாதியைவிடவும் ஆண்டான் -அடிமை என்ற நிலபிரபுவத்துவ கோரமுகம்தான் வெளிப்பட்டது ஆனால் தருமபுரி உணர்த்தும் படிப்பினை வேறுவிதமானது இங்கே ஆண்டான் -அடிமையோ ,பெரும் முதலாளியோ இல்லை ஆனால் நிலபிரத்துவ குணம்... அதை நிலை நிறுத்தியது தலித் மக்களையொத்த உழைப்பாளிகள்தான் என்பது வேதனையிலும் வேதனை ! அவர்களை அரசியல் ஆதாயத்துக்காக சாதிய அரசியல்வாதிகள் திட்டம் போட்டு பயன்படுத்திகொண்டார்கள் அவர்களின் நிகழ்ச்சிநிரலை அனைத்து சாதியினரும் கலந்து கொண்டு அந்த கொடுமையை செய்துள்ளனர் .அப்படியானால் இந்த அனைத்து சாதியினரில் அனைத்து கட்சியினரும் இருந்தார்களா ? இல்லையா ? ......... இருக்கிறர்கள் ! அப்படி அனைத்து சாதியினரும் அங்கே கட்சி பாகுபாடிலாமல் தலித்தை எதிர்ப்பதற்கு..... ஒன்ரிணைவதால்தான் தமிழகம் முழுவதும் உள்ள சாதிய தலைவர்களை அவர்களால் ஒன்றிணைக்க முடிகிறது .
                இதில் கவனிக்க வேண்டியதும்,காரியமாற்ற வேண்டியதும் இவற்றை கருத்தில் கொண்டுதான் ........ எப்படி தேடியும் பதில் கிடைக்காத இந்த புதிரை உடைக்காமல் பட்டிமன்றமோ , கருத்தரங்கமோ ,கவியரங்கமோ நடத்தி பயனில்லை !இவற்றை அனைத்து கட்சியினரும் உணருவார்களா ? இதை போக்க அவர்கள் உடன்படுவார்களா ? இதுதான் நம்முன் இருக்கும் சவால் ! கருத்தரங்கம் நடத்தும் கட்சியிலிருந்து சாதிவெறியை தூண்டி அனைத்து சாதி தலைவர்களையும் ஒரே மேடையில் அமர்த்தும் கட்சி வரை அந்த தகுதி இல்லை ! கம்யூனிஸ்ட் கட்சிகள்தான் இதை கையில் எடுக்க முடியும் இதை அனைவரும் புரிந்து கொள்ளவேண்டும் , 
                                   கலப்பு மணம் புரிவோரும் ,சாதி மறுப்பவரும் ..சாதி மறுப்பு திருமணங்கள் நடந்து முடிந்த பிறகு தனக்கு பிறக்கும் குழந்தைக்கு சாதி இல்லைஎன்றோ, சாதி அடையாள மற்றவராகவோ வாழ முடிகிறதா ? என்பதை யோசிக்கவேண்டும் ! அதனால் அகமண முறை சரியென்று அர்த்தமல்ல ....அதை கடை பிடிப்பதற்கும் ,அதை எதிர்த்த போராட்டத்தை நடத்துவதற்கு ஒரு சாத்திய வட்டத்துக்குள் இருக்கும் சாதிய கட்சிகளால் நடத்த முடியாது , அதுவும் கம்யூனிஸ்டுகளால் மட்டுமே சாத்தியம் ! தர்மபுரி ,சேத்தியாதோப்பு சென்னிநத்தம் ,சிறுவத்தூர் இந்த வன்முறைகளுக்கும் கோகிலா --கார்த்திகேயன் வேறானது ! ஒடுக்கப்பட்ட சாதிக்குள்ளும் சாதிய படிமம் ஒருங்கமைக்கபட்டுள்ளது அதில் ஆட்டம் காணும்போது சாதி இந்துக்களிடம் என்ன விளைவுகள் ஏற்படுகிறதோ அதே விளைவுகள் ஒடுக்கப்பட்ட சமூக்கத்துக்குள்ளும் நடக்கிறது அதில் ஒரு எள்ளளவும் வித்தியாசமில்லை என்பதுதான் ,
                           பள்ளிநேலியனூர் நமக்கு உணர்த்தும் பாடமாகும் ! "எதையுமே படிக்காத பாமரத் தலித்துகள் ஜாதி பார்ப்பதில்லை எனவும், தங்களுக்கு யார் வேண்டுமானாலும் பெண் தரலாமென்றும் தங்களிடமிருந்து யார் வேண்டுமானாலும் பெண் எடுக்கலாம் என்று வீர வசம் பேசுவதை விட்டுவிட்டு கம்பீரன் போன்றோர் தங்கள் தளத்தில் தலீத் மக்கள் களத்தில் இறங்கிமாற்றம் காண போராடவேண்டும் .திராவிட இயக்கங்களோடும் ,இடதுசாரிகளோடும் இணைத்து கை கோர்த்து போராடுவதுதான் இன்றைய அவசிய அவசரம் ! 
                                                 நன்றி ! 

                                                                                                  க. மணிவண்ணன் . புதுச்சேரி
                                                                                               


No comments:

Post a Comment