Friday 25 January 2013

நண்பர் .கொளஞ்சி எழுதிய 'தன்னிலிருந்து .................."கட்டுரையின் திறனாய்வு !




                   

                                                  நண்பர் கொளஞ்சி அவர்களே , வணக்கம் !.உங்களின் செய்தியை படித்தேன் .நல்ல நடை ......! பாரதியின் " நேர்படப் பேசு " என்ற வாக்கின்படி நீங்கள் நேரடியாக சொன்ன உங்கள் செய்தி என்னை மட்டுமல்ல ,என்னை போன்ற எல்லோருக்கும் பிடிக்கும் . அதுவும் குறிப்பாக மாற்றம் எங்கிருந்து தொடங்க வேண்டும் ?
                                      அது தன்னிலிருந்து தான் தொடங்கவெண்டுமெயொழிய டெல்லியிலிருந்து அல்ல ! என்ற புள்ளியும் மிக சரியானதே , மக்களின் மனங்களில் மட்டுமே மாற்றம் வந்தாலே ..இப்படி பட்ட சமூக விரோத செயல்கள் நடக்காது என்பது உண்மைதான் ஆனால்...........ஒலி .ஒளி .காட்சி ஊடகங்களால் ,திரைப்படங்களால் ,அச்சு ஊடககங்கலால் மாசு பட்டு போன இதயத்தை எப்படி டயாலிசீசஸ் செய்ய போகிறீர்கள் ? அதற்க்கு என்ன வழி ? நீங்கள் சொன்ன படி மக்கள் மனது மாறினால் மட்டும் போதுமா ? அல்லது ஆண்கள் மனம் மாறி கொடுக்கும் சுதந்திரத்தால் இந்த ஒடுக்குமுறை போய்விடுமா ?
                                                   இந்திய ஊடகங்கள் ஆண் - பெண் இருபாலரையுமே தினமும் காலையிலிருந்து மாலைவரைபாலுணர்வை தூண்டி சூடேற்றி கொண்டேஇருக்கிறது அப்படிஇன்றைய நிலைமை இருக்கும் போது ...... ..நீங்கள் சொல்லும் ஆண் --பெண் மனமாற்றம் என்ன ஆகும் ? ஆகவே மனம் மட்டுமல்ல இந்த விஷயத்தில் ஆட்சியாளர்கள் அரசின் பங்கு ,தலையீடு ,அதன் கடமை , அரசியல் சட்டத்தின் கட்டுப்பாடு.இவைகளெல்லாம் பாலியல் வன்கொடுமையை தடுக்காமல் வேடிக்கை பார்த்துகொண்டிருந்துவிட்டு இன்றுதான் ஒரேஒரு பெண்மீது ,இன்றுதான் பலாத்காரம் நடந்துவிட்டதை போல ஊடகங்கள் ஓலமிடுகின்றன
                                          .ஆட்சியாளர்களும் ஆழ்ந்த அஞ்சலி செலுத்துகின்றனர் . நடந்து முடிந்த கொலை மிகவும் கொடூரமானது... காட்டுமிராண்டித்தனமானது ,கண்டிக்கத்தக்கது என்பதில் மாற்று கருத்தில்லை .இந்த கொலை மீது அனைவருக்கும் மறைமுகமான பங்கு இருக்கிறது . இவகளைபற்றிஎல்லாம் நீங்கள் பேசாமல் போனது வியப்பாக இருக்கிறது !
                                                         அரசனின் மகளில்தொடங்கி ,ஆண்டியின் மனைவி வரை பெண்ணாய் பிறந்தால் எவ்வளவு ஒடுக்குமுறை என்பதை மட்டும் சொல்வதில் எந்த பயனுமில்லை , அதை போக்க அதற்க்கு தீர்வு சொல்ல வேண்டாமா ? அதேபோல் டெல்லி பெண்ணுக்கு ஒரு நீதி ? தமிழ் பெண்ணுக்கு ஒரு நீதியா ? அது இலங்கை தமிழச்சிக்கு இல்லையா ?நீங்கள் எந்த அர்த்தத்தில் கேட்கிறீர்கள் என்று என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை ? இது அபத்தமானது.இதுவரை கேட்கவில்லை என்பதற்காக இன்றும் கேட்ககூடாது என்று சொல்கிறீர்களா ?
                                                    இன்றுகூட ஆசியாளர்கள் நிலை ஒன்றுதான் அதில் மாற்றமில்லை ! இன்று இந்த பிரச்சனை மீது இந்திய நாட்டின் மக்களின் எழுச்சிதான் ஆட்சியை ஆட்டம் காண வைத்துள்ளது உங்களை என்னை , உலகமே தன பார்வையை திரும்பி ஐநா சபை தலைவர் பான் கி மூன் வரை பேசவைத்துள்ளது
                                          .இந்த எழுச்சியை பயன்படுத்தி, உலகமுழுவதும் உள்ள பெண்களின் பாதுகாப்பிற்கு முன்னுதாரணமாக , நமது நாட்டில் ஒரு வலுவான சட்ட பாதுகாப்பு ஏற்ப்பாட்டை செய்வதன் மூலமே நிரந்தர தீர்வை எட்டமுடியும் . அதை ஆட்சியாளர்கள் அவ்வளவு எளிதில் நிறைவேற்ற போவதில்லை !
                                         பெண்ணுக்கான அரசியல் உரிமை...... சட்டமன்றத்திலும் நாடாளுமன்றத்திலும் 33 % இட ஒதுக்கீடு மசோதா இன்னும் புழுதி படிந்துபோய்கிடக்கிறது. அதற்கெல்லாம் ஆண்கள் தட்டு கழுவினால் மட்டும் போதாது .இவற்றையெல்லாம் கொண்டுவர பெண்களோடு சேர்ந்து ஆண்களும் போராட வேண்டும் .போராட்டத்தை மூடிவிட்டு போக சொல்கிறீர்களே என்ன நியாயம் ? போராட்டம் வேண்டாமென்றால் மாற்று வழி என்ன ?
                                                         
18 ஆம் நூற்றாண்டில் பிறந்த பாரதியின் வாக்கின்படி "கொடுமையை எதிர்த்து நில். " என்றான் . அப்படியே அதை மெய்யாக்குவோம் ! நல்ல விவாதத்தை ஏற்படுத்தி இருக்கிறீர்கள் , தவறு இருப்பின் தாராளமாக திருத்திக்கொள்ள தயாராக இருக்கிறேன் . நன்றி ! !

No comments:

Post a Comment