Tuesday 22 January 2013

காதல் ! பழமையானது ஆனாலும் முற்போக்கானது !

     



                                

                                  தர்மபுரி பாதிப்புக்கு பிறகு தமிழகம் முழுவதும் ஒரு வித அச்சம் ஏற்பட்டதோ இல்லையோ .பேசாத வாய் கூட பேசியது ,கேட்காத காதுகளும் கேட்க துவங்கியது .ஆழ்ந்த மயான அமைதி மோதி உடைக்கப்பட்டுள்ளது . பிரச்சனைக்குரிய கரு "சாதியம்" .அது சரியோ , தவறோ அதுபற்றி பேசாமல் விவாதிக்காமல் , தீர்வு காண முடியாது ! அல்லது தற்கால மோதலை தடுக்க முடியாது . தொடர்ந்து அதுபற்றி அனைத்து ஊடகங்களும் அவரவர் பங்கிற்கு விவாதிப்பதாக பத்திரிகை பக்கங்களை விரித்து பணத்தை அள்ளி போனார்கள்.
                                     அறிவு ஜீவிகள் மறந்து போன மனு மீண்டும் நவீன ஆடை தரித்து ஆட்டம் போடுவதாக ஆர்பரித்தனர் . அதில் உண்மை இல்லை என்றும் சொல்லிவிடமுடியாது . ஆனால் ஒடுக்கப்பட்ட சமூகத்தின் மீது இப்படி ஒரு தாக்குதல் தொடுக்க வெறும் அரசியல் மட்டுமே என்று கூறி மூடிவிட முடியாது . அரசியலுக்கு அப்பால் தனிமனிதனின் சுய மரியாதையும் , சுயகௌரவமும் இருக்கிறது என்று ஒரு சாரார் சாதாரணமாகவும் ,சண்டமாருதம் செய்வதையும் மறுப்பதற்கில்லை .சரி சாதியும் ,சாதிய ஒடுக்குமுறையும் பல ஆயிரமாண்டுகள் கடந்த பின்னும் இவ்வளவு அறிவியல் முன்னேற்றம் கண்டபின்னும் மீண்டும் மீண்டும் அது தன்னை தகவமைத்துக்கொண்டு வாழ்கிறது என்றால் அதன் வாழ்வுக்கும் ,வளர்ச்சிக்கு சட்ட பாதுகாப்பும் ,சமூக பாதுகாப்பும் இருப்பதாலே அதன் ஆயுள் காலம் அஸ்தமிக்கவில்லை .
                           அது பற்றி யாரும் விவாதிக்காமல் .......காதல் .....காதல் திருமணம் ,சாதி மறுப்பு திருமணம் என்றெல்லாம் பேசிவருகின்றனர் இவைகளெல்லாம் ஒன்றோடுஒன்று தொடர்பு இருப்பதுபோல் தெரிந்தாலும் இந்த மூன்று நிகழ்வும் ஒன்றல்ல ! வெவ்வேறானவை ! ............. (1) காதல்...-! ஒரே சமூகத்துக்குள் காதலிக்கும் இருவரும் .எதையும் எதிர்பாப்பதில்லை ! ஒரு ஆண் --ஒரு பெண் அத்தோடு முடிந்துவிடும் ! இங்கே சாதி பிரச்சனையை எழவில்லை , ஆனால் அதை காதல் இல்லை என்று மறுக்க முடியுமா ? (2) அவர்கள் அடுத்த கட்டமான திருமணம் செய்து கொள்ள முடிவு செய்து திருமணம் முடித்துகொன்டாலும் இது காதல் திருமணம் இல்லை என்றும் சொல்ல முடியாது ! இவர்களை சார்ந்தவர்கள் கூட ஒரு சிலர் பணக்காரன் -ஏழை என்ற முரண்படுவது தவிர பெரிய அளவில் முரண்பட்டோ , கௌரவ பிரச்சனையாகவோ பார்ப்பதில்லை ! (3) வெவ்வேறு சாதியை சேர்ந்த இருவர் சாதியை மறுத்து திருமணம் செய்யும் போதும் திருமணத்துக்கு பிறகு சொத்தில் பங்கு கேட்கும் போதும் அங்கே பிரச்சனையே எழுகிறது ! அப்படி பிரச்சனை வருகின்றது என்பதற்காக சாதி மறுப்பு திருமணங்கள் நடக்காமல் இல்லை ! நடந்து கொண்டுதான் இருக்கின்றது .
                                        எந்த நோக்கத்துக்காக கலப்பு திருமணங்கள் நடக்க வேண்டும் என்று ஜனநாயகவாதிகள் , இடது சாரி சிந்தனைவாதிகளும் ,திராவிட கொள்கை பேசுவோரும் நினைத்தார்களோ !? அது பிறப்பின் அடிப்படையில் ஏற்ற தாழ்வு இல்லாத சமூகம் உருவாகவேண்டும் என்று நினைத்தார்கள் அது நடந்ததா ? இல்லை இனியாவது நடக்குமா ? என்றால் நடக்காது . ஏனென்றால் சாதி மறுப்பு திருமணம் செய்துகொண்டவர்கள் திருமணத்தை தாண்டி பெற்றோர் என்ற தகுதி அடையும்போது அரசின் சலுகைகள் பெற தந்தை என்ன சாதியோ அதை தனது தனயனுக்கும் பின் தொடர அனுமதிப்பதால் ...சாதி மறுப்பு திருமணம் என்பது கேளிகூத்தாகிறது ! அது குறிப்பாக தலீத் மக்களுக்கு சட்டம் அனுமதித்த சலுகையை பெற அவர்கள் சாதியை சொல்லாமல் இருக்க வாய்ப்பே இல்லை ! அதனால் சட்டத்தை இப்போது மாற்றிவிடலாமா என்றால் முடியாது .
                            காலங்காலமாக பள்ளத்தில் கிடந்தவனை கைகொடுத்து தூக்கிய வாழுரிமை சட்டங்கள் .அதனால்தான் முன்னுக்கு பின் முரணாக உள்ள நிலைமையில் சமூக மோதலிலிருந்து மக்களை முதலில் காப்பாற்ற இப்போது அமைதி வேண்டும் .அது சுடுகாட்டு மயான அமைதியல்ல .........நிரந்தர தீர்வை நோக்கிய அமைதி !
அதற்கு சாதி மறுப்பு திருமணங்களை ஆதரித்து ஆர்பரிப்பதோ ! ஆதரவு திரட்டுவதோ ! சாதி மறுப்பு திருமணங்கள் நடத்திவைப்பதோ அல்ல ! அரசியல்வாதிகளுக்கு தெரிந்தோ ,தெரியாமலோ அமைதியாய் நடந்து முடிந்த சாதிமறுப்பு திருமண தம்பதிகளை பாது காப்பதும் ,சாதியத்தை பாதுகாக்கும் சமூகத்துக்கு சரியான் தொடர் விழிப்புணர்வை ஏற்படுத்துவதே இன்றைய தேவை !
                                       ஆண்டாண்டு காலமாய் ரத்தத்தோடு கலந்து போன விஷத்தை ஆர்பரிப்பதன்மூலமும் ,ஆள் பிடித்து சாதி மறுப்பு திருமணங்கள் என்ற அரசியல் நாடகம் நடத்துவதன் மூலமும் சரி செய்ய முடியாது . சமத்துவ கொள்கை பரவுவது மூலமே சாத்தியமாகலாம் !






1 comment:

  1. சாதிகள் ஒழிய கலப்பு திருமணமும், காதல் திருமணமும் அவசியம். ஆனால் சொந்த சாதி , மாற்று சாதி எதுவானாலும் பொருளாதாரம் தான் அங்கிகாரம் செய்யம். கலப்பு திருமண தம்பதியனரின் பிள்ளைகளுக்கு தனி இட ஒதுக்கிடு கோரிக்கை முன் வைத்து போரட்டங்கள் நடகிற்றன. இந்த முற்சி வெற்றி பெற்றால் சாதி மறுப்பு திருமனகள் வெற்றி பெரும்.
    எல்லை . சிவக்குமார் ..புதுச்சேரி

    ReplyDelete