Tuesday 19 February 2013

அப்சல் குருவின்..... கல்லறையின் நடுகல் !


             

                          அன்று முதல் இன்று வரை படுகொலைக்கு பிறகே பரிசீலனை நடைபெறுகிறது . அப்படித்தான் அப்சல் குரு தூக்கிலிடப்பட்ட பிறகே ஜனநாயகத்தின் மீதான விவாதம் நடைபெற்றுவருகிறது ! மக்களுக்காக மக்களே ஆள்வதே ஜனநாயகம் ! என்றெல்லாம் அரசியல் சட்டத்தில் எழு த்தப்பட்டாலும் ஆட்சி ஜனநாயகவாதியின் கையில் இருந்தால்தான் அது சரியாக பராமரிக்கப்படுமென்று வாதமும் மறுப்பதற்கில்லை .

                             பயங்கரவாதம் எங்கிருந்து வந்தாலும் அதை தடுக்கவேண்டும் அதை தடுக்கும் போதுகூட தனி நபரைப்போல தடி எடுப்பவனெல்லாம் தண்டல்காரனாக மாறிவிடுவதல்ல ஜனநாயகம் .நூறு கோடிக்கு மேல் வாழும் மக்களை ஆட்சி செய்யும் அரசு தனி நபர் சர்வாதிகார மனப்பான்மை கொண்ட அரசாக இருக்கமுடியாது .இருக்கவும் கூடாது
குற்றவாளிக்கு சட்டம் அளித்துள்ள உரிமை மேல் முறையீடு , மரணதண்டனை அளிக்கும்போது கடைபிடிக்கப்படும் சட்ட முறைமைகள்,
குற்றவாளியை இறுதியாய் சந்திக்க குடும்பத்துக்கு கொடுக்கும் வாய்ப்பை கூட மறுப்பது என்றெல்லாம் ஜனநாயக உரிமையை நாட்டின் பாதுகாப்பு என்ற போர்வையால் சுருட்டி குப்பையில் எறிந்துவிட்டு ,இந்திய ஜனநாயகத்தின் அடையாளத்தின்மீது நடத்தப்பட்ட தாக்குதலை தார் பூசி அழிக்க முடியாது

                      ஜனநாயக உரிமைகளை நாட்டு மக்களுக்கு வழங்குவதன் மூலமே ஜனநாயக நாடாக ஆள முடியுமேயொழிய சர்வாதிகாரமும் ,சர்வாதிகார மனப்பான்மையையும் அடித்தளமிட்டு ஜனநாயகத்தை பாதுகாக்க முடியாது . எதிரியை பயமுறுத்த எதிரில் நிற்கும் நாயை வெட்டுவதைப்போல பயங்கரவாதத்தை தடுக்க அரசின் படுகொலை தீர்வாகாது .

                                   ஜனநாயக ஆட்சியின் நிர்வாகம் கடைகோடி மனிதனுக்கும் வெளிப்படை என்பற்காக "தகவலறியும் சட்டம் " என்ற புரையோடிய ஜனநாயக புண்ணுக்கு பூசிய புனுகும் அப்சல் குருவின் விஷயத்தில் பொய்யாகி போனது .

                                               கடந்த மூன்று மாதங்களில் கசாப் , அப்சல் குருவின் மரணதண்டனைகள் " மாண்டோழிக மரணதண்டனை" என்ற கோஷம் மீண்டும் பரிசீலிக்க வேண்டும் என்பதும்,மரண தண்டனை குறித்து நாடு முழுவதும் விவாதிக்க வேண்டுமென்பதும் மனித உரிமை குறித்த விவாதமாக்கப்பட்டுள்ளது . கடுமையான சட்டங்களால் கடுமையான குற்றங்களை தடுத்துவிடலாம் என்று மரணதண்டனை மூலம் ஆட்சிநடத்துவது மன்னராட்சியெயொழிய மக்களாட்சியல்ல !

                        ஆட்சி நடத்தும் ஆட்சியாளர்களின் ஆட்டிவிக்கப்படும் பாவைதான் அதிகார பீடங்கள் மற்றும் அரசு எந்திரங்கள் என்பது அடிமட்ட பாமரன் மனதில் ஆணிவேராய் ஆழப்பதிந்துள்ளது .


       "இடிப்பாரை யில்லாத வேமரா மன்னன்
         கெடுப்பா ரிலானுங் கெடும் "
                                                                               என்ற --பொய்யாமொழிக்கேற்ப

                         ஆட்சியை ஆதரிப்போரும் ,எதிர்ப்போரும் மரணதண்டனை பற்றி அரிச்சுவடி பாடம் எடுத்துக்கொண்டிடுக்கிறர்கள் என்பதுதான் வேதனையிலும் வேதனை . இறுதியாய் ஒன்றைமட்டும் நினைவில் நிறுத்துவோம் " பழிக்கு பழி , ரத்தத்துக்கு ரத்தம் , கொலைக்கு கொலை என்பதெல்லாம் நாகரிக மனிதனுக்கு ஏற்றதல்ல .............................அதே காட்டுமிராண்டித்தனத்தை ஒரு நாடு செய்கின்றதென்றால் ................?

                     "இனியொருமுறை இத்தவறு நிகழாதிருக்கட்டும் "

             

இன்று அப்சல் குருவின் கல்லறையிலும் அதே கல் நட வேண்டிய தேவை இருக்கிறது !
              இரண்டாம் உலகபோரின் இறுதியில் அமெரிக்க கையில் வைத்திருந்த அணுகுண்டை ஹிரோஷிமா -நாகசாகி மீதுசோதித்து பார்க்க வீசிய இடத்தில் மாண்டவர்களின் நினைவாக நடப்பட்டுள்ள நடுகல்லின் வாசகம் ! இது .
-----     




                  அப்சல் குருவின்   மகன் மற்றும் மனைவியுடன் தாய்
                                                                                                                                   


                                                                                                                       
                        

No comments:

Post a Comment