Saturday 9 February 2013

காதல் உடலல்ல ...அது உணர்வு !

   ,               எல்லா ஜீவராசியும் அதன் இனத்தை இனவிருத்தி செய்ய வேண்டும் என்பதுதான் ஜீவித கடமை ! அதை எல்லா உயிர்களும் செய்கின்றன அது அந்த உயிரின் விருப்பு -வெறுப்பின் படி நடப்பதல்ல ! இயற்கையின் கடமை அது நடந்தே தீரும் . அப்படித்தான் மனிதனும் தோன்றியதிலிருந்து இன்றுவரை ஆண் - பெண்ணையும் , பெண் -ஆணையும் ஈர்க்கப்படுகிறது ! அப்படி ஈர்ப்பு நடைபெறும்முன்பு இணக்கமான செயல்கள் நடைபெறும் அந்த செயல்களை மற்ற உயிரினங்கள் அதை அடையாளப்படுத்துவதில்லை !
                                  மனிதன் மட்டும் அந்த செயலை அடையாள படுத்துவதோடு அதற்கு "காதல் " என்ற பெயரும் வைத்துவிட்டான் . அது தவறென்றோ ? கூடாதென்றோ ? சொல்வதற்கு எவருக்கும் உரிமை இல்லை ! அது அந்த இரண்டு உயிர்கள் சம்மந்தப்பட்டவை . இதில் எவரும் தலையிட கூடாது, இல்லை ...இல்லை ...தலையிடுவதற்கு எங்களுக்கு உரிமை உண்டு என்று வாதிடுவோர் .. 18 வயதுக்கு குறைவானவர்களை சிறுவர்கள் என்று சட்ட வரம்பை காட்டுவதும் ,வயது வந்தவர்கலென்றால் சாதி -மதங்களையும் சாட்சிக்கு கூப்பிடுவதும் அதை காட்டி காவு வாங்குவதும் காலங்காலமாய் நடந்துவருகிறது . இவ்வளவு செய்தும் காதலர்கள் அழிந்தார்கலெயொழிய காதல் அழியவில்லை ! காதல் உடல் மட்டும் சம்மந்தப்பட்டதல்ல ...... ஆண் - பெண் உயிரின் உணர்வு  சம்மந்தபட்டது .அது ஒருபோதும் அழியாது !
                                     ஆதிகால ஆதிவாசி சமூகம் , ஆண்டான் அடிமை சமூகம் , நிலஉரிமை சமூகம் ,ஆலைஉடமை சமூகம் ,இன்றைய ஆன்லைன் சமூகம் வரை ..........."காதல்" அழியவில்லை ! இனியும் அழிய வாய்ப்பில்லை ! ஏனென்றால் காதல் உடலல்ல ...அது உணர்வு  !







1 comment: