Monday 15 October 2018

Me too.. ! நானும் கூட...?


நானும்பாதிக்கப்பட்டேன்..!

வெளியில் சொல்ல நினைத்ததை ,
சொல்ல மறைத்ததை சொல்ல
வேண்டும் என்பது சரியானதே.
அது பெண்ணுக்கு மட்டுமல்ல..
ஆணுக்கும் தான்...!

இப்போதாவது சொல்லுங்கள்...!

அப்போ..சொல்லாமல்...
இப்போ..ஏன் சொல்லவேண்டும்...?
இந்த கேள்வியில் எனக்கு உடன்பாடு
இல்லை.எப்போது செய்தாலும் தப்பு தப்புதான் .இப்போதும் சொல்ல வாய்ப்பு கிடைத்ததே என்று ஆதரிக்க வேண்டும்.

அதோடு...பெண் தனக்கு ஏற்பட்ட
பாதிப்பை எப்போ வேண்டுமானாலும்
சொல்லாம். சொல்ல முடியும் .அது பற்றி
விவாதிக்கமுடியும் என்ற நம்பிக்கையை ஆணாதிக்க சமூகம் ஏற்க வேண்டும் .

பொதுவாய்...

பிரபலங்கள் மட்டுமல்ல..
ஒட்டு மொத்த ஆண் சமூகமே அதிர்ந்து போய் இருக்கிறது என்பது மட்டும் தெளிவாய் தெரிகிறது .

இது பற்றிய விவாதத்தை ஆண் சமூகம் ஏற்க மறுக்கிறது என்பதாலே அது பற்றி பேசாமல் தடுக்க முடியாது என்பதையும் உணர வேண்டும் .

பெண் என்பதாலே அவர்கள்
சொல்வது சரியாகிவிடுமா ..?
என்ற வாதமும் விவாதிக்கப்பட
வேண்டும். அதற்காக பெண் சொல்வதில் உண்மையே இல்லை என்ற முடிவுக்கு வர முடியுமா ...? பெண் தன் மீது தொடுக்கப்பட்ட பாலியல் தொந்தரவை  எப்போதும் வெளியில் சொல்வதே தப்பு என்று தான் காலங்காலமாக அந்த வாய்ப்புகதவு அடைக்கப்பட்டே கிடக்கிறது.

இனி...
அது தகர்த்து எரியப்பட்டு உள்ளது. ஆனால் இதை பயன்படுத்தி பெண் சமூகம் வெளியே வருவதும் , தனக்கான பேச்சுரிமையை , கருத்துரிமையை பயன்படுத்த இன்னும் சில காலங்கள் ஆகலாம்.

பேசாத பொருள் மீது சமீபத்தில்
சட்டமும் , சமூகமும் பேசிவருகிறது.
பேசட்டும் , பேசித்தான் ஆகவேண்டும்.

1 comment:

  1. உண்மையை சொன்னீர்கள் நன்றி

    ReplyDelete