Wednesday 17 October 2018

அருந்ததியனுக்கு மேல ஒரு கோடு "பரியேறும் பெருமாள் "


"பட்டியல் இன சமூகம் மற்ற சமூகத்தால்
தொடுக்கப்படும் சாதிய கொடுமையை
இதை விட ஆழமாக , அழுத்தமாக எவராலும்
பதிவு செய்ய முடியாது.

சட்டக்கல்லூரியில் சேறும் போது முதல்வரின்
கேள்விக்கு "டாக்டராக போறேன்" என்று கதானாயகன் சொல்லும் சொல்லுக்கு அம்பேத்கரின் மேன்மை விண்ணை தொட்டது.

பரியேறும் பெருமாள் பி ஏ பி எல் மேல ஒரு கோடு...! என்ற வசனம் நகைச்சுவை போல
சித்தரித்தாலும் , ஒடுக்கப்பட்ட மக்கள் மீது
போடப்பட்டுள்ள மனுவின் அடையாள கோட்டை  அழிக்க முடியாமல் நீளும் கொடுமையும் , அதை அழிக்க தொடரும்
போராட்டமும் ,யதார்த்தம் .

சாதிய ஒடுக்கு முறை என்றால்...?
சக்கிலியனுக்கு மேல் நிலையில்
உள்ள பள்ளர் , பறையர் இன மக்களின்
மீது தொடுக்கப்படும் ஒடுக்கு முறையே...! என்பதைத்தான் காண்பிக்கப்படுகிறது.

சட்டக்கல்லூரி முதல்வர்.சென்னை கலைக்குழு
ராமுவின் ( கேரெக்டர் ) கதாப்பாத்திரம் கல்லூரி முதல்வர் பேசும் உரையாடல் என்ன...?

"உன் அப்பன் பெண் வேஷம் போடுபவன்....
என் அப்பன் யார் தெரியுமா ...?
ரோட்டில் செருப்பு தைப்பவன் அவன் மகன்
தான் நான் " என்று பேசுகிறது.
இதன் மூலம் நீ எவ்வளவோ உயர்ந்தவன் என்று  பரியனை சமாதான படுத்தவும் ,
உனக்கும் கீழே செருப்பு தைப்பவன் இருக்கிற்றான் " என்று சொல்லாமல் சொல்வதுதான் அபத்தம் . ஒடுக்குமுறையின் மறைக்க முடியாத ,மறுக்க முடியாத நீட்சி.

சாதிய படி நிலையில் ...
 "உனக்கும் கீழே உள்ளவர் கோடி நினைத்து பார்த்து நிம்மதி தேடு..."
அதுதான் மனுவின் சாதிய கட்டுமானம் சரியாமல் பாதுகாக்க போடப்பட்டுள்ள காங்கிரீட் அடித்தளம் அதையே
ஆழமாக இந்த படத்தில் ஆணித்தரமான நிறுவி இருக்கிறார்கள் என்பது நோக்கத்தையே திசை திருப்பி விட்டு உள்ளது.

முடிவாய் ...
அருந்ததியனுக்கு மேல ஒரு கோடு போடப்பட்டுள்ளது.



No comments:

Post a Comment