Monday 6 May 2013

நமக்கான அரசியல் ...............!


                                           "எது கிடைத்தாலும் அதை பயன்படுத்து ! என்ற தாரக மந்திரத்தைத்தான் அரசியல்வாதிகள் பயன்படுத்தி வருகிறார்கள் .அதில் பழைய ஆயுதம் ஊழல் ! புதிய ஆயுதம் காதல் !

                                           ஊழலையும் ,காதலையும் பொதுவாய் பார்த்தால் ஏதோ நியாயவான்களின் நேர்மையான நீதி போதனை கதைகளைப்போல் தெரியும் ,ஆனால் உண்மை அதுவல்ல என்பது உற்றுநோக்குபவர்களுக்கே புரியும் ! " "எல்லா நதிகளும் கடலை நோக்கியே "என்பதைப்போல அரசியல் வாதிகளின் எல்லா செயல்பாடுகளும் வாக்குவங்கியைநோக்கியே இருந்துவருகிறது.

                                      ஒரு காலத்தில் தேசிய அரசியல் என்றால் மதமும் ,மாநில அரசியல் என்றால் இனமும் என்ற செயல்திட்டத்தை முன்வைத்து நடத்திய தேர்தல் பந்தயத்தில் அவர்களுக்கான முழு வெற்றியை பெறமுடியவில்லை என்பது உண்மை .ஆனால் மத அரசியலும் ,இன அரசியலும் முழுமையான வெற்றியை ஈட்ட முடியாவிட்டாலும் ,முற்றிலும் தோல்வியடையவில்லை என்ற யதார்த்தத்தையும் மறுப்பதற்கில்லை .இந்நிலையில்தான் தன்னுடைய செயல் திட்டத்தில் மாற்றத்தை கொண்டு வந்திருக்கிறார்கள் .

                                                                        தேசிய அரசியலில் மதமல்ல "ஊழலற்ற நிர்வாகம் "என்ற கொஷமும் , மாநிலத்தில் இனமல்ல ,மொழியல்ல..... ஜாதி ! அதை பாதுகாப்போம் என்று சொல்லி சரித்திரத்தை தோண்டியெடுத்து தூக்கிலிடுகிறார்கள் ! தேசியம் தேய்ந்துபோனபொது..... திராவிடம் திருட்டுப்போனது !ஜாதியம் தலைதூக்குகிறது ! தறிகெட்டு ஓடுகிறது ...அதைதடுத்து நிறுத்த முடியாமல் தமிழகம் தவிக்கிறது .

                                                                                 இதற்கெல்லாம் காரணம் ஒரு தனி மனிதனென்றும் , ஒரு குறிப்பிட்ட ஜாதி அமைப்புதானென்றும் பரபரப்பாக பதிவு செய்யப்படும்போதும், விவாதிக்கப்படும்போதும் அது உன்மைதானா ? என்பதை பரிசீலீக்கப்படவேண்டியவையே ! 
 
                                              வட மாவட்டத்தில் உள்ள பெரும்பான்மை சமூகத்தில் உள்ள மக்கள் எத்தனை பேர்கள் நீங்கள் குறிப்பிடும் அந்த ஜாதி அமைப்பில் இருக்கிறார்கள் என்பதை உங்களால் சொல்லமுடியுமா ? இன்றைய கால கட்டத்தில் ஜாதிய கட்டுமானம் இறுகி இருந்தாலும் நீங்கள் குறிப்பிடும் பெரும்பான்மை மக்கள் 95% வாழும் புதுச்சேரி மக்கள் குறிப்பிட்ட ஜாதியை சொல்லி திரட்டப்பட்ட அந்த ஜாதி கட்சியை (அமைப்பை )முற்றாக நிராகரித்துள்ளார்கள் என்பதுதான் வரலாறு .

                                                          தருமபுரி கலவரத்துக்கு பிறகு மாவட்டம்தோறும் நடத்தப்பட்ட ஜாதிய தலைவர்கள் கலந்து கொண்ட கூட்டங்களும், தீர்மானங்களும் வந்த போது எத்தனை கட்சிகள் எதிர்த்தன என்பதை யோசித்து பாருங்கள்! மத்தியில் ஆளும் தேசிய கட்சியோ ,மாநிலத்தில் ஆளும் கட்சியோ ? அல்லது பிரதான எதிர் கட்சியோ எதிர்த்தார்களா ? ஒப்புக்கு எதிர்ப்பதாக நடித்துவிட்டு திரைமறைவில் தூபமிட்டவர்களே ?

                         குற்றவாளி மட்டுமல்ல குற்றத்துக்கு துணை போன மற்ற ஜாதிய தலைவர்களும் தண்டிக்கப்படவேண்டியவர்களே ! தீயை மட்டுமல்ல தீக்கு நெய் வார்த்தவர்களையும் தெரிந்து கொள்ளவேண்டும் வரும் நாடாளுமன்றதேர்தலே நடைபெறும் நர்த்தனங்களுக்கெல்லாம் காரணமென்றால் ..........நமக்கான அரசியலை நாமறிய வேண்டாமா ?




பார்க்கும் படம் : மணி வர்மா 



No comments:

Post a Comment