Saturday 22 December 2018

அருந்ததியனின் விடுதலை..?

ஆதிதிராவிடர் ( பறையர் ) - அருந்ததியர் என்ற ஒடுக்கப்பட்ட மக்களிடையே மேலும் ,கீழுமாய் சாதிய பாகுபாடு இருப்பதும் , அதுவும் சனாதான சாதிய ஒடுக்குமுறையாக இருப்பதும் கண்டதும் ,கேட்டது.  முற்போக்கு எண்ணம் கொண்டவர்கள்  அதிர்ச்சி அடைந்தனர் . அது பொய்யாக இருக்க வேண்டும் என்று கூட நினைத்தனர்.

ஆதிக்க சாதிகளை போலவே தனக்கும்  கீழே ஒரு சமூகம் ( அருந்ததியர் ) இருக்க வேண்டும் என நினைக்கும் சாதிய படி நிலையை ஆதிதிராவிட ( பறையர் ) மக்களுக்கும் நிறுவி கட்டிக்காத்து வரும் மனுதர்ம இழிநிலை சேரிக்குள்ளும் கடைபிடிக்கப்படுகிறது.

அதை உடைத்தெரிய ஆதித்தமிழர் பேரவை
போன்ற அமைப்பின் மூலம் நடைபெற்ற
போரட்டங்களே வெளி உலகிற்கு கொண்டு
வந்து இருக்கிறது.

அதில் குறிப்பாய் மதுரை #சந்தையூரில் அருந்ததிய மக்களுக்கு எதிராக #அவமானசுவர் " கட்டப்பட்டதும், அதை எதிர்த்த போராட்டமும் ,அதை கட்டிக்காக்க ஆதிதிராவிடர்கள் ( பறையர் ) உச்சநீதிமன்றம் வரை சென்று போராடி தோற்று போனதும் சாதிய படிநிலையின் கடைகோடியில் அடுக்கப்பட்ட மூட்டையில் அடி மூட்டையாய் அருந்ததியர்கள் தான் இருக்கிறார்கள் என்பதும் தீண்டாமை கொடுமை அவர்கள் மீதும் கடைபிடிக்கப்படுகிறது அம்பலப்பட்டு போனது.

ஆதிதிராவிடர்கள் - அருந்ததிய மக்கள் மீது தொடுத்த சாதிய ஒடுக்குமுறையை ஒரே சமூகத்துக்குள் நடக்கும் "சிறுமோதல் " என்று மூடிபோட்டும் மூடமுடியாமல்போனது

ஆதிதிராவிட மக்கள் , அருந்ததிய மக்கள் மீது தொடுத்த சாதிய ஒடுக்குமுறையை கண்டித்தவர்களை , அருந்ததிய மக்களின்
போராட்டத்தை ஆதரித்தவர்களை ,
பிளவுவாதிளாகவும் , சாதி வெறியர்களாகவும் சமூக விரோதிகளாகவும்
சித்தரிக்கப்பட்டார்கள்.

சித்தரசூர் , பெண்ணாடம் , மதுரை சந்தையூர்அருகம்பட்டு தொடங்கி விழுப்புர மாவட்டத்தில் அருந்ததிய மக்கள் மீது  நடைபெற்ற தொடர்தாக்குதல்கள் , வன்முறைகள் யாவும் ஆதிதிராவிட மக்கள் தான் செய்து வருகிறார்கள் என்ற உண்மை வெளியே வந்த போதுதான் அனைவருமே அதிர்ச்சி அடைந்தனர்.

மேலும் தீண்டாமை கொடுமையை அவர்களும்கடைபிடிக்கின்றனர் என்ற போது சாதிய படிநிலை கொடூரம் வெளிப்படையாக தெரிந்தது.

இதையெல்லாம் பேசுவதும் ,எழுதுவதும்
பிரித்தாள்வதோ ? ஒரு சார்பு நிலையோ அல்ல என்பதை புரிந்துகொள்ள வேண்டும். சாதிய படிநிலையின் ஒடுக்குமுறையை எந்த மட்டத்தில் செய்தாலும் கண்டிக்கப்படவேண்டும் .அது இனியும் தொடராமல் தடுக்கப்பட வேண்டும் .

அதற்கு இடதுசாரி இயக்கங்களின் தலையீடும் போராட்டங்களும் போதுமானதாக இல்லை.
திரு .அதியமானின் ஆதித்தமிழர் பேரவை
குறிப்பிட்டு சொல்லும் படியான தலையீடும்
போராட்டமும் செய்து வருகிறது என்பது
பாரட்டதக்கது..



No comments:

Post a Comment