Saturday 1 December 2018

கறுப்பு ....நீலம் ...சிவப்பு ...?


கறுப்பு ,நீலத்தைப்போல
சிவப்பு என்பது வண்ணம் அல்ல...!
அது ஒரு சித்தாந்தந்தம் .
சித்தாந்தம் ஒருபோதும் வெற்று அடையாளமாய் வண்ணத்தோடு
வண்ணமாய் கலப்பது அல்ல...

மனிதனுக்கு மனிதன் பிறப்பால்,
நிறத்தால் , மொழியால் ,எல்லையால்
வேறுபாட்டை ஏற்காத தத்துவம்.

மனிதனுக்கு மனிதன் நேசிப்பையும் ,
அன்பையும் ,எல்லோரும் எல்லமே
 சரிநிகர் சமானமென சமத்துவத்தை
 நிறுவிய தத்துவம்தான் மார்க்சியம் .

மார்க்சியம் படிக்கக்கூட வேண்டாம்
அதை படித்தவர்களின் வழிகாட்டுதலில்
 நடந்தாலே போதும்.

ஆனால் அங்குதான் பிரச்சனையே...!
வழிகாட்டுவோர் தட்டுத்தடுமாறி போனதால்
எல்லாமே தலைகீழ் பிம்பமாகி போனது.

அம்பேத்கரை ,பெரியாரை பேசினால் ,எழுதினால்...? தப்பேதுமில்லை
அவரின் ஆதரவாளர்களை அணிதிரட்ட முடியும் என்று நினைத்து போட்ட
கணக்குதான் தப்பாகி போனது.

வர்க்க போராட்டத்தின் மூலமே
அனைத்தையும் ஒழிக்க முடியும்
என்ற அடிப்படையே மாற்றி அமைத்து
அம்பலப்பட்டு போனது ...!

சிவப்பு சிந்தனையில் திரட்டப்பட்டோருக்கு
 நீல சட்டையையும் , கறுப்பு சட்டையையும்
அணிவித்து அழகு பார்க்கிறார்கள்.

சட்டையே இல்லாத வெற்று உடம்பாக வந்தவனுக்கு , சிவப்பு சட்டையை போட்டு
மனிதனாக்கிய நீங்களே அவனை
மீண்டும் நீலத்துக்கும் ,கறுப்புக்கும்
மாற்றுவது மூட நம்பிக்கை இல்லையா ...?

ஒடுக்கப்பட்டோர் விடுதலையும் ,
கடவுள் மறுப்பும், , பாலின சமத்துவமும்
மார்க்சியத்தின் உள்ளடக்கமா இல்லையா ...?

முழுக்க முழுக்க விஞ்ஞானம் தான் இயக்கவியல் ..
அதன் சமூகவிஞ்ஞான தத்துவம் தான் மார்க்சியம் ...

அந்த மார்க்சியத்தை படித்தவர்களும் ,
அதை உள்வாங்கியவர்களும் ,
உரக்க சொல்லும் வார்த்தை ....

லால் சலாமும் ,ஜெய் பீம்..மும்
கறுப்பும் , நீலமும் கலக்க வேண்டுமாம்...?

மூட நம்பிக்கையில் முத்து எடுப்போர்...!



No comments:

Post a Comment