Tuesday 29 August 2017

சரி நிகர் சமானமென...!




கடந்த 27 . 8 .2017 ல் என் ஊரில்
என் சொந்தக்கார பெண்மணி
ஒருவர் 86 வயதை கடந்து
முதுமையால் காலமானார்.

அவருடைய கணவர் 50 களில்
காங்கிரஸ் அரசியலில் இருந்து
பஞ்சாயத்து கவுன்சிலராக
போட்டியிட்டு வெற்றி பெற்றவர்.
பின்னர் விபத்து ஒன்றில்
பாதிக்கப்பட்டு காலமானார்.

இவர்களுக்கு ஆண் வாரிசு பெற
வேண்டும் என்ற முயற்சியில்
எட்டு பெண் குழந்தைகள் பிறந்தும்
அந்த வாய்ப்பு இல்லாலே போய்விட்டது.

அத்துனை பாரத்தையும் தன்
மனைவியின் தலையில்
சுமத்திவிட்டு போய்விட்டார்.
தன் கணவன் இறந்த பிறகு
பிள்ளைகளை படிக்க வைத்து
நல்ல நிலையில் திருமணமும்
செய்து வைத்து விட்டார்.

தான் செத்தால் கொள்ளி
போடுவதற்கு கூட ஆள்
இல்லையே ஏக்கம் அந்த
பெண்மணிக்கு சாகும்
வரை இருந்தது.

மகள் வழி பேரப்பிள்ளைகள்
இருந்தும் அவருடைய இறுதி
ஆசையை அவருடைய கடேசி
மகள் கொள்ளி சட்டியை கையில்
ஏந்திக்கொண்டு மற்ற சகோதரிகளும்
சேர்ந்து சுடு காட்டுக்கு வந்து
அங்கே செய்ய வேண்டிய அத்துனை
சடங்குகளையும் செய்து முடித்தனர்.

இத்தனைக்கும்
கொள்ளி வைத்த மகள்
இளநிலைப் பொறியாளராக
புதுச்சேரி அரசு மின் துறையில்
பணி புரிந்து வருகிறார்.

கொள்ளி போடுவதும், அதற்கு
பின்னால் சொத்துரிமை கோருவதும் ,
சம்பிரதாய சடங்குகளுக்குள்
ஆணாதிக்கத்தை பின்னிபிணைந்து
வைத்து இருக்கிறது இந்த
ஆணாதிக்க சமூகம்.

ஆணாதிக்கத்தின் மேல்
கட்டமைக்கபட்டு இருக்கும்
சம்பிரதாய சடங்குகளை
ஒட்டு மொத்தமாக
ஒழிக்க முயலவேண்டும்.

அதற்கு இடைபட்ட காலத்தில்
துணிந்து குடும்ப நிகழ்வுகளில்
இப்படிபட்ட  முயற்சிகளை
எடுக்கும் பெண்களை தலை
வணங்கி  வாழ்த்துவோம்...!













No comments:

Post a Comment