Monday 23 December 2013

உழுபவன் கணக்கு பார்க்கிறான்.....!



உலகில் ...
இன்று நடக்கும் அத்தனை வேறுபாடுகளுக்கும் ,
ஏற்றத்தாழ்வுகளுக்கும் ஆளும் அரசின் கொள்கைதான்
காரணம் என்று சொன்னால்..... முக நூலில் உள்ள நண்பர்கள்
பாதிபேருக்கு மேல் என்னை மேலும் கீழும் பார்த்து
இவருக்கு ஏதோ ஆகிவிட்டது என்றுதான் சொல்வார்கள்,
சொல்லிவிட்டு போகட்டும் !

        வீடியோ ...ஆடியோ உலகிலிருந்து வெளியே
வரும்போதுதான் அவர்களால் புரிந்துகொள்ள முடியும்.
அப்போதுதான் அவர்களால் படிக்க முடியும் .
படிக்க முடிந்தவர்களால்தான் முழுமையாய் .....
............. முழுமையாய் தெரிந்துகொள்ள முடியும் !
அதுவரை அவர்களுக்கு மட்டுமல்ல ....எல்லோருக்கும்
குழப்பம் நீடித்துக்கொண்டுதான் இருக்கும் .

விவசாயிகள் , உரம் -பூச்சுகொல்லி
மருந்துகளுக்கான விலை உயர்ந்துவிட்டதே .?..
அதை அரசு தடுக்கவில்லையே ?
என்று கவலைப்படவில்லை ....

மின்சார கட்டணம் உயர்ந்துவிட்டதால்
பாசனத்துக்காக கைகாசு கரைந்துவிட்டதே ?
என்று கவலைப்படவில்லை !

புயல் - மழை - வெள்ளம் இவை கடந்து
தான் விளைவித்த பொருளை அரசே !
கொள்முதல் செய் ! என்று கேட்க தயாராக
இல்லை ....

தான் விளைவித்த பொருளுக்கு
கட்டுபடியான விலை வேண்டும்
என்று ஒன்று சேர்ந்து போராடவில்லை ....

கூலிக்காரன் அதிகமாய் கூலி
கேட்பதால்தான்......?
தனக்கு நட்டம் ஏற்படுகிறது ...
என்று வாதிடுகிறான் !

இதில் உண்மை இருக்கா ?
கூலி கணக்கை போடவேண்டாமா ?

இன்றைய விவசாயம் ...!
பெரும்பாலும் 2 போகம்தான் .
ஆண்டுக்கு 3 போகம் என்று
வைத்துக்கொண்டாலும் ....
விவசாய கூலிக்கு எத்தனை நாட்கள்
விவசாயத்தில் வேலை கிடைக்கும் ?

ஒரு போகத்துக்கு அதிகபட்சம் 1 மாதம்
வேலை கிடைக்குமா ?
3 போகத்துக்கு 3 மாதங்கள் வேலை !
ஆகா மொத்தம் ஆண்டிற்கு 90 நாட்கள் வேலை 

ஒரு நாளைக்கு உங்கள் கணக்குப்படி
கூலி 400 ரூபாய் என்றால் ...?
90 நாளைக்கு 36000 ஆயிரம் ரூபாய்கள் ...!
ஆண்டுக்கு 365 நாட்களை
வகுத்தால் ஒரு நாளைக்கு 99 ரூபாய்
இதைக்கொண்டு ஒரு நாள் ஓட்ட முடியுமா ?
100 ரூபாய்க்கும் குறைவாய் கிடைக்கும்
விவசாயத்தை நம்பி விவசாயக்கூலி வாழ
முடியுமா ?

அதனால்தான் விவசாயக்கூலி
நகரத்தை நோக்கி ஓடுகிறான் .
ஓடி...கொத்தனார் ,சித்தாள் வேலை செய்கிறான் .
அதில் ஒரு நாளைக்கு 500--600 ரூபாய்க்கு மேல்
கிடைகிறது !
வெய்யல் இல்லை .... மழை இல்லை ...
புழுதி இல்லை ... வைக்கோல் சுனை இல்லை !

இதையெல்லாம் தெரிந்துகொள்ளாமல்
விவசாயி .... விவசாய கூலியை
முறைக்கிறான் .....

விவசாயக்கூலி அறுவடை எந்திரத்தை
தடுத்துவிட்டு ....
விவசாயியை முறைக்கிறான் !

இவர்கள் இருவரும்
முறைக்கவேண்டிய இடம்
எது ?
ஆளும் அரசாங்கம் !
அரசின் கொள்கை ! !
விவசாயம் சார்ந்து அரசின் கொள்கையில்
மாற்றம் வேண்டும் ....
விவசாயத்தை தொழிலாக
அங்கீகரிக்க வேண்டும் ! 

விவசாயக்கூலிகளுக்கு
விலைவாசிக்கேற்ப
கூலிச்சட்டத்தில் மாற்றம் வேண்டும் !

இதையெல்லாம் தெரிந்துகொள்ளாமல் .....
விவசாயக்கூலிகள் ......
அம்மா பசிக்குதுன்னு
விவசாயிங்க வீட்டு வாசலை
கட்டி அழவேண்டுமாம் !

அதுவரை விவசாயம் செய்ய மாட்டார்களாம்...?
விவசாயிகள் !
என்னே தொலை நோக்கு !
வாழ்க படிப்பாளிகள் !!
வளர்க விவசாயம் ! ! !

4 comments:

  1. வாழ்க படிப்பாளிகள் !!
    வளர்க விவசாயம் ! ! !

    ReplyDelete
  2. இதையெல்லாம் நினைக்க அரசாங்கத்திர்க்கு எங்கே சார் நேரம்.....
    .இன்னும் கோசன நாளில் பாருங்க.... அரிசியும்... மற்ற தானியங்களும் எப்படி விலையேற போகுது என்று.....

    ReplyDelete
  3. இதையெல்லாம் நினைக்க அரசாங்கத்திர்க்கு எங்கே சார் நேரம்.....
    .இன்னும் கோசன நாளில் பாருங்க.... அரிசியும்... மற்ற தானியங்களும் எப்படி விலையேற போகுது என்று.....

    ReplyDelete
  4. இன்னும் கொஞ்ச நாளில் ....

    ReplyDelete